Home
Mobile

மார்ச் 4 Nothing Phone 3a வரும் முன்பே Nothing Phone 2a மீது விலை குறைப்பு.. எவ்வளவு?

இந்த 2025 ஆம் ஆண்டில் நத்திங் நிறுவனத்தின் முதல் வெளியீட்டு நிகழ்வு மார்ச் 4 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. இந்நிகழ்வின் போது நத்திங் போன் 3ஏ சீரிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் கீழ் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) என 2 மாடல்கள் அறிமுகமாக உள்ளது.

இதற்கிடையில் நத்திங் போன் 2ஏ சீரிஸின் கீழ் அறிமுகமான நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடல் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் "அன்பிலிவபிள் ப்ரைஸ்" என்கிற டேக்லைனின் கீழ், அதாவது நம்பமுடியாத விலை என்கிற வாசகத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட்டில் தற்போது நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் மீது மொத்தம் ரூ.6000 தள்ளுபடி கிடைக்கிறது.

Nothing Phone 2a மீது விலை குறைப்பு.. எவ்வளவு?

இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் விளையான ரூ.25,999 க்கு பதிலாக 15% தள்ளுபடியை பெற்று ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே அனைத்து வங்கிகளின் கிரெடிட் கார்டு இஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டு நான்-இஎம்ஐ பரிவர்த்தனையில் கீழ் ரூ.2000 கேஷ்பேக்கும் கிடைக்கிறது. இப்படியாக நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.19,999 க்கு கொண்டுவர முடியும்.

நத்திங் போன் 2ஏ-வின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை, பேக் பேனலில் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 2 கேமராக்களை கொண்டுள்ளது; இந்த கேமராக்கள் ஒரு சர்குலர் ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. மேலும் பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களை (Glyph LED strips) கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. டிஸ்பிளே பொறுத்தவரை, இது FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் HDR10 ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது

ஸ்லிம் பெசல்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது. இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் OIS-க்கான ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. மேலும் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

நத்திங் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, நத்திங்கின் துணை நிறுவனமான சிஎம்எப் அதன் அடுத்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் "கிட்டத்தட்ட" உறுதி செய்துள்ளது. பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தில் (Bureau of Indian Standards - சான்றிதழ் தளம்) புதிய சிஎம்எப் ஸ்மார்ட்போன் ஒன்று காணப்பட்டுள்ளது.

அது சிஎம்எப் போன் 2 (CMF Phone 2) மாடல் ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம், சிஎம்எப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடல் ஆனது கடந்த ஜூலை 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், அதன் அப்கிரேடட் வெர்ஷன் ஆன சிஎம்எப் போன் 2 ஆனது இந்தியாவில் முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் கொண்டு இயங்கலாம் மற்றும் இது ப்ளூ கலர் ஆப்ஷனில் வரலாம் என்பதை தவிர்த்து வேறு எந்த விவரங்களும் இல்லை. எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ19,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a gets Up to Rs 6000 Discount in Flipkart Ahead Nothing Phone 3a Launch on March 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X