Home
News

ஷாக் கொடுத்த Carl Pei.. Nothing Phone 2a-ல இது இருக்காது.. தீவிரமடையும் நத்திங் போன் 2 தகவல்கள்..

அதன் மூன்றாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2a (Nothing Phone 2a) சாதனத்தை அறிமுகம் செய்ய நத்திங் (Nothing) நிறுவனம் இப்பொது தயாராகிவிட்டது. இந்த போனில் குறிப்பிடத்தகு அம்சம் இருக்காது என்று நத்திங்கின் CEO கார்ல் பெய் (Carl Pei) கூறியுள்ளார்.

நத்திங் போன்: நத்திங் போன் 1, நத்திங் போன் 2 என்ற இரண்டு சாதனங்களுக்கு பிறகு நத்திங் நிறுவனம் இப்போது நத்திங் போன் 2a என்ற மூன்றாவது ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இது வரும் மார்ச் 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், இந்த நத்திங் போன் 2a (Nothing Phone 2a) சாதனத்தை நிறுவனம் MWC 2024 இல் காட்சிப்படுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஷாக் கொடுத்த Carl Pei.. Nothing Phone 2a-ல இது இருக்காது..

நத்திங் போன் 2a: மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2024 இன்று நடைபெற விருக்கிறது. இதற்கு முன்பாக, நத்திங் நிறுவனத்தின் சிஇஓ ஆன கார்ல் பெய் (Carl Pei) நத்திங் போன் 2a பற்றிய பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். நத்திங் போன் 2a (Nothing Phone 2a) இந்தியாவில் தயாரிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இது உண்மை தான் என்பதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

நத்திங் போன் 2a-ல இது இருக்காது: அதேபோல், இதற்கு முன்பு வெளியான பல லீக் தகவல்களில் நத்திங் போன் 2a (Nothing Phone 2a) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7200 சிப்செட்டை பெரும் என்று குறிப்பிட்டிருந்தது. அந்த லீக் தகவலுக்கான விடையையும் கூட கார்ல் பெய் இப்போது தெளிவாக்கியுள்ளார். சமீபத்தில், பத்திரிகையாளர்களுடன் பேசிய கார்ல் பெய் நத்திங் போன் 2a டைமென்சிட்டி 7200 சிப்செட்டை பெறாது என்று உறுதிப்படுத்திருக்கிறார்.

ஷாக் கொடுத்த கார்ல் பெய்: மிக விரைவில் நத்திங் நிறுவனம் அதன் புதிய நத்திங் போன் 2a (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனில் என்ன சிப்செட்டை பயன்படுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் என்றும் கார்ல் பெய் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் பல நத்திங் ரசிகர்களை ஷாக் அடைய செய்துள்ளது. மறுபுறம், வெளிவரவிருக்கும் நத்திங் போன் 2a சாதனத்தில் என்ன சிப்செட் இடம்பெறப்போகிறது என்று ரசிகர்கள் இணையத்தை அலசி வருகிறார்கள்.

ஷாக் கொடுத்த Carl Pei.. Nothing Phone 2a-ல இது இருக்காது..

டைமென்சிட்டி 7200 அல்ட்ரா: நம்பகமான ஒரு டெக் சேனல் தகவல், நத்திங் போன் 2a டைமென்சிட்டி 7200 அல்ட்ரா (Dimensity 7200 Ultra) என்ற சிப்செட்டை பெரும் என்று தெரிவித்துள்ளது. இது நத்திங் போன் 2a சாதனத்திற்காகவே பிரத்தியேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட சிப்செட்டாக இருக்கும் என்றும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அல்லது நத்திங் போன் 2a சாதனம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜெனரல் 2 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நத்திங் போன் 2a சிறப்பம்சம்: இந்த சிப்செட்டை நாம் பல ரூ.40,000 விலை வரம்பில் உள்ள ஸ்மார்ட்போன் சாதனங்களில் பார்த்திருக்கிறோம். இந்த புதிய நத்திங் போன் 2a (Nothing Phone 2a) சாதனம் 6.7" இன்ச் கொண்ட முழு HD+ OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 50MP + 50MP டூயல் கேமராவை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டிருக்கும்.

விலை என்னவாக இருக்கும்? நத்திங் போன் 2a (Nothing Phone 2a) 42W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும். இது 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் என இரண்டு மாடல்களாக வெளிவர வாய்ப்புள்ளது. இதன் விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 விலைக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Budget Segment Mobile Will Not Run On Dimensity 7200 SoC Confirms Carl Pei
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X