அசால்ட் செய்ய போகும் Nothing Phone 2! இலவசமாக நத்திங் போன் 2 வாங்க வாய்ப்பு! வுட்றாதீங்கப்போ!
லண்டனை தளமாகக் கொண்ட நத்திங் (Nothing) நிறுவனம், அதனுடைய இரண்டாவது புதிய ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு விரைவில் களமிறக்கவுள்ளது. புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் நத்திங் போன் (2) என்ற பெயரில் அழைக்கிறது. இது இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகிறது.
நத்திங் போன் (2) (Nothing Phone 2), தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரீமியம் ஸ்மார்ட்ஃபோன்களில் ஒன்றாக திகழ்கிறது. உலக மக்கள் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் சூப்பர் ஸ்மார்ட்போன் மாடலாக Nothing Phone 2 பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் உலகளவில் புதிய ஹைப்பை உருவாக்கி, அதிக எதிர்பார்ப்பை மக்களிடையே உருவாக்கியுள்ளது என்பதே உண்மையாகும்.

இத்தகைய ஸ்மார்ட்போன் சாதனத்தை நத்திங் நிறுவனம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியிட தயாராக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் முன்னோடியைப் போலவே, நத்திங் போன் (2) சாதனமும் இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாகவும் விற்பனைக்கு வரும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் நத்திங் ஃபோனுக்கான அதிகாரப்பூர்வ டீஸர் பக்கம் Flipkart இல் இப்போது லைவ் செய்யப்பட்டுள்ளது.
இது நத்திங் பிராண்ட் ஆனது, வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட் தளத்துடன் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த புதிய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் சாதனம் Flipkart.com மற்றும் Flipkart மொபைல் ஆப்ஸ் வழியாக பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் பக்கத்தில் பகிரப்பட்ட விவரங்களைப் பொறுத்தவரை, வரவிருக்கும் புதிய Nothing Phone 2 சாதனத்தின் சில அம்சங்களை பிளிப்கார்ட் பட்டியல் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படிம் இந்த புதிய Nothing Phone 2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், பிளிப்கார்ட் டீஸர் தகவல், இந்த சாதனம் இரண்டாம் தலைமுறை மேம்படுத்தப்பட்ட கிளிப் (glyph) இடைமுகத்தைத் கொண்டுவரும் என்று கூறப்பட்டுள்ளது. இத்துடன் டீசர் வீடியோவில் ஆக்டோபஸ் கால்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்ள நாம் காத்திருக்க வேண்டும்.

Flipkart பயனர்கள் நத்திங் போன் 2 சாதனம் தொடர்பான அனைத்து அப்டேட்களையும் பெற, "Notify Me" பட்டனை ஒருமுறை அழுத்தினால் போதும். குலுக்கல் முறையில் நத்திங் ஃபோனை (2) வெல்லும் வாய்ப்பையும் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, Flipkart டீஸர் பக்கம் வரவிருக்கும் Nothing Phone (2) இன் நிலைத்தன்மை அம்சங்களையும் பிரதிபலிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினிய மிட் ஃபிரேம் உடன் வருகிறது.
100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட காப்பர் ஃபாயில், 90 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட எஃகு மற்றும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட டின் ஆகியவற்றைக் கொண்டு Nothing Phone 2 தயாரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் 80 சதவீதம் நிலையான ஆதாரமாக இருப்பதாக கூறப்படுகிறது. Nothing Phone 2 சாதனத்தின் அம்சங்களை பற்றி பேசுகையில், இது ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட்டை கொண்டிருக்கும்.
இது தவிர, நத்திங் ஃபோன் (2) சாதனத்தின் உறுதிப்படுத்தப்பட்ட விவரக்குறிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், லீக் தகவலின் படி இந்த போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக, 4,700mAh பேட்டரி மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே குறிப்பிடப்பட்டுள்ளது. கேப்ஸுல் வடிவ வீடியோ இண்டிகேட்டர் மாட்யூல் பிராண்டால் டீஸ் செய்யப்பட்டுள்ளது. மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








