Nothing Phone (2) ரெடி ஆகிடுச்சு! அறிமுகம் எப்போ தெரியுமா? Carl Pei சொன்ன முக்கிய தகவல் இதோ.!
இதுவரை எத்தனையோ ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால், அறிமுகத்திற்கு முன்னதாக உலகளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சாதனம் என்றால், அது நத்திங் போன் (1) Nothing Phone (1) தான். இப்போது, நத்திங் போனின் அடுத்த மாடல் வெளிவரத் தயாராகிவிட்டது.
பார்சிலோனாவில் நடைபெற்று வரும் MWC 2023 நிகழ்வில் நடக்கும் அனைத்து அறிவிப்புகளையும் நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதில் பல நிறுவனங்கள், பல விதமான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. என்னதான் பல சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், சில சாதனங்கள் மட்டும் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அப்படியான ஒரு சாதனம் தான் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்த Motorola Rizr ரோலபில் மற்றும் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனமாகும்.

Nothing Phone 2 எப்போது அறிமுகம்? Carl Pei சொன்ன தகவல் என்ன?
இந்த சாதனம், சுருங்கி பின் விரியும் புது விதமான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஒரு கான்செப்ட் மாடலாக இருந்தாலும் MWC 2023 நிகழ்வில் அதிக கவனத்தை ஈர்த்த புது தொழில்நுட்பமாக இது திகழ்கிறது. இதற்கு அடுத்தபடியாக, நேற்று நத்திங் நிறுவனம் அதன் அடுத்த புது ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 2 சாதனத்தின் வருகையைப் பற்றி உறுதி செய்தது.
நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த நத்திங் போன் (1) போல இல்லாமல், நத்திங் போன் (2) சாதனம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக, பிரீமியம் தரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை நிறுவனத்தின் CEO கார்ல் பை (Carl Pei) நேற்று MWC 2023 நிகழ்வில் அறிமுகப்படுத்தினார். இந்த ஆண்டில் அறிமுகம் செய்யவிருக்கும் நத்திங் போன் (2) -க்கான டீஸர் பிரச்சாரத்தை நேற்று நிறுவனம் வெளியிட்டது.

Nothing Phone 2 என்ன சிப்செட் உடன் வெளிவரப்போகிறது?
நத்திங் நிறுவனத்தின் CEO Carl Pei அறிமுகம் செய்திருக்கும் இந்த தகவலை வைத்து பார்க்கையில், Nothing Phone (2) அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் அம்சங்களின் விபரங்களை நிறுவனம் வெளியிடும் என்று கூறப்படுகிறது. காரணம், கார்ல் பை இதுபோன்ற யுக்தியை, அவர் ஒன்பிளஸ் உடன் செயல்பட்டதிலிருந்தே பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தகவலின் படி, நத்திங் ஃபோன் (2) குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 தொடரை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, நிறுவனம் அதை தவிர வேறெந்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இந்த ஆண்டு வெளிவரும் பல முதன்மை ஆண்ட்ராய்டு சாதனங்களின் பட்டியலை வைத்து பார்க்கையில், வரவிருக்கும் நத்திங் போன் (2) ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் உடன் வெளிவர வாய்ப்புகள் அதிகம்.

Nothing Phone 2 முழுமையான பிரீமியம் பிளாக்ஷிப் போனா?
கார்ல் பையின் கூற்றுப்படி, நத்திங் ஃபோன் (2) அமெரிக்காவில் முதலில் வெளியிடப்படும். மேலும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், அதாவது ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் நத்திங் ஃபோன் (2) சந்தைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம்,நத்திங் ஃபோன் (2) சாதனம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 2 சிப்செட்டை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்று கூறப்படுகிறது.
நத்திங்கின் முதல் பட்ஜெட் சாதனம் போலல்லாமல், நத்திங் ஃபோன் (2) உயர்நிலையில் இருக்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எவ்வாறாயினும், இது எவ்வளவு பிரீமியம் தரத்தில் வெளிவரும் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறது. இது உலகின் Samsung Galaxy S23 Ultra உடன் போட்டியிடும் ஆல்-அவுட் ஃபிளாக்ஷிப் ஆக இருக்குமா? அல்லது..
அதற்குப் பதிலாக OnePlus 11 உடன் போட்டியிடும் 'ஃபிளாக்ஷிப் கில்லர்' போனாக இருக்கப் போகிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நத்திங் ஃபோன் (2) சாதனம் 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ளிஃப் எல்இடி லைட்களுடன், இதுவும் ட்ரான்ஸ்பரென்ட் வடிவமைப்பைப் பெறுமா என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








