எல்லாத்துக்கும் ரெடியா இருங்க! வெளியானது Nothing போன் 2 டீசர்.! டைப் சி கேபிளில் கூட வித்தியாசம்.!
நத்திங் போன் 1 மாடலுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தனித்துவமான அம்சங்கள் மற்றும் தரமான வடிவமைப்புடன் நத்திங் போன் 1 மாடல் வெளிவந்ததால் அதிகளவு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நத்திங் போன் 2 மாடலையும் விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது நத்திங் நிறுவனம்.
அதாவது நத்திங் போன் 2 ஆனது வரும் ஜூலை 11-ம் தேதி இந்தியா மற்றும் சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக இந்த போன் சற்று வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் தற்போது வெளிவந்த தகவலின்படி, நத்திங் போன் 2 மாடலுடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப்-சி கேபிள், நத்திங் போன் 1 உடன் வழங்கப்பட்டதை விட முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதாவது நத்திங் போன் 2 உடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப்-சி கேபிள் ஆனது சில்வர் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு, வெளிப்புறம் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.
மேலும் டைப்-சி கேபிள் நத்திங் பிரான்டிங் கொண்டிருக்கிறது. கேபிள் நிறம் வெள்ளை நிறத்தில் உள்ளது. ஆனாலும் நத்திங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று தெரிகிறது. குறிப்பாக நத்திங் நிறுவனம் 45 வாட் சார்ஜரை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்கிறது. பின்பு நத்திங் போன் 1 மாடல் ஆனது அதிகபட்சம் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜங் வசதிக்கான சப்போர்ட் மட்டுமே கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய நத்திங் போன் மாடலில் எவ்வளவு சார்ஜிங் வேகம் வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது நத்திங் போன் 2. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இந்த நத்திங் போன் 2 (Nothing Phone (2)) மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போன் சேட்டிலைட் கனெக்டிவிட்டி ஆதரவுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர NothingOS 1.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.
இந்த நத்திங் போன் 2 மாடலுக்கு நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். பிரத்யேக எல்இடி க்லிம்ஃப் டிசைன், சிவப்பு நிற எல்இடி இண்டிகேட்டர் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
நத்திங் போன் 2 மாடல் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தரமான கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

4700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த நத்திங் போன் 2 மாடல் வெளிவரும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இந்த போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த நத்திங் போன் 2 மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications