சிங்கம் களமிறங்குதுப்பா வழிவிடுங்க! Nothing Phone 2 இன்று அறிமுகம்! ஐபோனுக்கே டஃப் கொடுக்குமா?
உலகளவில் மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய நத்திங் போன் 2 (Nothing Phone 2) சாதனம் ஒரு வழியாக இன்று இந்தியவிலும் மற்றும் உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு இந்த இரவு நடைபெறுகிறது.
நத்திங் ஃபோன் 2 வெளியீட்டிற்கான நேரடி நிகழ்வு இன்றிரவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் Nothing Phone (2) ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கான முன்கூட்டிய ஆர்டர்கள் ஏற்கனவே தற்போது லைவ் செய்யப்பட்டுள்ளன என்பது குறிபிடித்தக்கது.

நத்திங் நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் Nothing Drops ஸ்டோரை, பெங்களூரில் திறக்கிறது. இந்த நத்திங் டிராப்ஸ் பாப்-அப் ஸ்டோர்கள் வழியாக பயனர்கள் நத்திங் ஃபோன் 2 மற்றும் நத்திங் நிறுவனத்தின் மற்ற கேட்ஜெட்களை வாங்கி பயன்பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நத்திங் ஃபோன் 2 இந்தியா வெளியீடு இன்று இரவு 8.30 மணிக்கு இந்திய நேரப்படி நடக்கும்.
இந்நிகழ்வு நிறுவனத்தின் இணையதளத்திலும், அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனன் வழியாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் நத்திங் போன் 2 இன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், நமக்கு தெரிந்த தகவலின் படி, வரவிருக்கும் புதிய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 42,000 அல்லது ரூ. 43,000 விலையில் அறிமுகமாகும்.
அதேபோல், சமீபத்தில் வெளியான மற்றொரு ஸ்மார்ட்போன் தளத்தில் லீக் தகவலின் படி, Nothing Phone (2) சாதனம் இரண்டு வகையான ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Nothing Phone (2) சாதனம் ஒரு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை கொண்டிருக்கும் என்றும், இதன் விலை இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 65,600 விலையில் வரும் என்று கூறப்படுகிறது.

மறுபுறம், நத்திங் போன் 2 சாதனத்தின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 76,500 என்ற விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. Nothing நிறுவனத்தின் தகவல் படி, நத்திங் போன் 2 சாதனம் வைட் மற்றும் டார்க் க்ரேய் நிறத்திலும், பிளாக் நிறத்திலும் வெளிவரும் என்று கூறப்படுகிறித்து.
Flipkart மூலம் முன்கூட்டிய ஆர்டர் செய்ய வெறும் ரூ. 2,000 மட்டும் செலுத்தினால் போதும். இந்த டெபாசிட் தொகை ஆர்டர் செய்த பயனர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்று நிறுவம் தெரிவித்துள்ளது. நத்திங் ட்ராப் ஸ்டோர் மூலம் நத்திங் போன் 2 சாதனத்தை வாங்குவோருக்கு கூடுதல் பரிசுகள் வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இலவச கூடுதல் பரிசுகள் மற்றும் சலுகைகள் முதலாவதாக ஸ்டோரிற்கு வரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், நத்திங் போன் 2 ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட் உடன் வருகிறது. இது 6.7' இன்ச் கொண்ட முழு எச்டி+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது 4,700mAh பேட்டரியை பேக் செய்கிறது.
இது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான NothingOS 2.0 இயங்குதளத்தில் இயங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது டூயல் கேமரா அம்சத்துடன் வெளிவரும் இதில் 50MP சோனி IMX890 பிரைமரி சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் சென்சார் வழங்கப்படும். நத்திங் ஃபோன் 2 சாதனத்தின் முன்பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் உறுதியான அசல் விலை இன்று இரவு தெரியவரும். விரைவில் உங்களுக்கு அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








