தெய்வம்யா நீ.. நேரடியா ரூ.10,000 தள்ளுபடி.. Nothing Phone (2) வாங்க பெஸ்ட் சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!
போடு, நத்திங் போன் 2 (Nothing Phone 2) வாங்க சரியான வாய்ப்பு. இப்படி ஒரு அறிவிப்பிற்காக தான் காத்துக்கொண்டிருந்தோம். பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் நத்திங் போன் 2 சாதனத்தின் விலை அடிமட்ட விலைக்கு ரூ.10,000 தள்ளுபடியுடன் (Discount) குறையவுள்ளது.
ஆமாங்க, 1 இல்லை 2 இல்லை மொத்தமாக, நேரடியாக, இதுவரை இல்லாத அளவிற்கு, சுளையாக கொத்தா ரூ.10,000 தள்ளுபடியை நத்திங் பிராண்ட் (Nothing Brand) இப்போது அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில், அதன் பிளிப்கார்ட் குடியரசு தின 2024 விற்பனை (Flipkart Republic Day 2024 Sale) வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக, நத்திங் ஃபோன் (2) வகைகளுக்கு பிரத்தியேகமாக ஒரு பெரிய தள்ளுபடியை நத்திங் நிறுவனம் இப்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, நத்திங் ஃபோனின் (2) சாதனத்தின் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வெறும் ரூ.34,999 என்ற விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய அசல் விலை ரூ.44,999 ஆகும்.
நத்திங் ஃபோன் (2) ஸ்மார்ட்போன் (Nothing Phone 2 Smartphone):
பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே 2024 சேல்ஸ் இன் ஒரு பகுதியாக ரூ.10,000 நேரடி தள்ளுபடிக்கு பிறகு நத்திங் போன் 2 சாதனத்தின் விலை ரூ.34,999 என்று குறைந்துள்ளது. இத்துடன் சலுகை முடிந்தது என்று நினைத்துவிடாதீர்கள். கூடுதலாக, ஐசிஐசிஐ வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சிறப்பு கூடுதல் நன்மையாக ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கிறது.
இதன் மூலம் குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக ரூ.12,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதற்கும் மேல், வாடிக்கையாளர்கள் அவர்களுடைய மற்றொரு பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்யும் போது ரூ.3,000 போனஸ் தொகையும் கிடைக்கிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ் பிளிப்கார்ட் இன் சிறப்பு விற்பனை முடியும் வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் 2 மீது முழுசா ரூ.15,000 தள்ளுபடி யாருக்கெல்லாம் கிடைக்கும்? (Who can get a full Rs.15,000 discount on Nothing Phone 2):
இந்த எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக ரூ.15,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் புதிய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் சாதனத்தை ரூ.44,999 என்ற விலையில் இருந்து வெறும் ரூ. 29,999 என்ற பட்ஜெட் விலையில் வாங்க முடியும் மக்களே. உண்மையில், இது ஒரு மகத்தான தள்ளுபடி தான். குடியரசு தினத்தன்று அதிக தள்ளுபடியுடன், முழு குஷியுடன் புது போன் வாங்க இந்த சலுகை சிறப்பானது.
பட்ஜெட் விலையில் ஏதோவொரு போனை வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள், பிரீமியம் ஸ்மார்ட்போன் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த வொர்ல்டு ஃபேமஸ் ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்கி பயன்பெறலாம். நத்திங் போன் 2 சாதனத்தை இந்த காலப்பிரிவில் வாங்குவது ஒரு சிறந்த முடிவு தான் என்பதில் சந்தேகமில்லை.
நத்திங் போன் (2) சிறப்பம்சம் (Nothing Phone 2 Specifications):
- 6.7 இன்ச் FHD+ பிளேக்சிபில் LTPO AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் நத்திங் ஓஎஸ் (Nothing OS 2.0)
- 12GB ரேம் + 128GB ஸ்டாராகிற் (Storage)
- 50MP (OIS) + 50MP டூயல் ரியர் கேமரா
- 32MP செல்பி கேமரா
- 4700 mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








