Nothing Phone 2 போனின் அசல் ஃபர்ஸ்ட் லுக் லீக்கானது! அடேங்கப்பா இது தான் புது டிசைன்-ஆ?
நத்திங் நிறுவனத்தின் அடுத்த புது வரவான நத்திங் போன் 2 (Nothing Phone 2) சாதனம் ஜூலை 11ம் தேதி அறிமுகமாகிறது. இந்த போனின் அறிமுகத்திற்கு முன்பாக இதன் கிள்ப் இன்டர்பேஸ் லைட் டிசைன் மற்றும் போனின் தோற்றம் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
நத்திங் போன் 2 - Nothing Phone (2) ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்ற விபரத்தை தெளிவாக காண்பிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. நத்திங் ஃபோன் (2) ஜூலை 11 அன்று வெளிவருகிறது. கடந்த ஆண்டைப் போலவே, பிராண்ட் அதே யூடியூபரை நத்திங் போன் 2 இன் தகவல்களை லீக் செய்ய அனுமதித்துள்ளது.

நத்திங் ஃபோன் 2 ஆனது கடந்த ஆண்டு ஃபோன் (1) போன்ற அதே வடிவமைப்பை பெற்றுள்ளது. ஆனால், முழு அனுபவத்தையும் மேலும் செம்மைப்படுத்தும் சில மாற்றங்கள் மற்றும் புதிய கிளிஃப் அம்சங்களை வரவிருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த புதிய சாதனம் கிரெய் நிறத்தில் காணப்படுகிறது. இது வெள்ளை அல்ல கருப்பும் அல்ல.
இது அறிமுகம் செய்யப்படும் நேரத்தில், இன்னும் அதிகமான வண்ண விருப்பங்களை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் போனின் கண்கவர் கிள்ப் இன்டர்பேஸ் வடிவமைப்பு பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், இதில் உன்னிப்பான சில மாற்றங்களை மட்டும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பின்புறத்தில் உள்ள அனைத்து LED விளக்குகளும் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
ஆனால் ஒவ்வொரு LED-களும் இப்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளதை புகைப்படம் தெளிவாக காண்பிக்கிறது. இதில் புதியது என்னவென்றால், எல்.ஈ.டிகளின் மீது அதிக கட்டுப்பாட்டை நிறுவனம் இந்த புது மாடலுடன் சேர்த்துள்ளது. பின்புறத்தில் உள்ள கிளிஃப் லைட் கவுண்ட்டவுனுடன் ஒத்திசைக்கப்படும் மற்றும் அடிப்படையில் டைமருக்கான காட்சி குறிகாட்டியாக செயல்படும் என்பதையும் லீக் தகவல் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த புதிய Nothing Phone (2) சாதனத்தில் இருக்கும் கிள்ப் இன்டர்பேஸ் மியூசிக் மற்றும் ரிங்க்டோன் கம்போஸர் அம்சத்துடன் வருகிறது. உங்களுக்கு விருப்பமான ரிங்க்டோனை செட் செய்து, அதற்கு ஏற்ற கிள்ப் லைட்டிங்கை செட் செய்துகொள்ளலாம். இந்த புதிய நத்திங் போன் 2 சாதனம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட் உடன் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் உடன் வரும்.
ஸ்டோரேஜ்ஜை பற்றி பேசுகையில், 128ஜிபி மற்றும் 256ஜிபி உடன் வரும். இது 6.55-இன்ச், 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா பற்றி பேசுகையில், இது 50MP + 50MP + 12MP கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை கொண்டிருக்கும். இது 5000mAh பேட்டரியை பேக் செய்யும்.


Click it and Unblock the Notifications








