Home
News

Nothing Phone 2-ஐ இப்படி வாங்கினா எக்ஸ்ட்ரா கிஃப்ட் உண்டு! எங்க வாங்கணும் தெரியுமா?

நத்திங் (Nothing) நிறுவனம் புதிதாக நத்திங் ட்ராப்ஸ் (Nothing Drops) என்ற பெயரில் புதிய பாப்-அப் ஸ்டோர்களை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. வரவிருக்கும் புதிய நத்திங் போன் 2 (Nothing Phone 2) சாதனத்தை பாப்-அப் ஸ்டோரில் இருந்து மக்கள் வாங்கலாம்.

இந்தியாவில், இந்த புதிய நத்திங் ட்ராப்ஸ் பாப்-அப் ஸ்டோர்கள் எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? எந்த நேரத்தில் இருந்து இந்த நத்திங் ட்ராப்ஸ் கடைகளில் நத்திங் சாதனங்களை நாம் வாங்க முடியும்? என்பது போன்ற முக்கியமான தகவலை தான் பார்க்கப்போகிறோம். நத்திங் ட்ராப்ஸ் ஸ்டோர்களில் இருந்து, புது போன் மற்றும் புது இயர்பட்ஸ் சாதனத்தை வாங்கினால், கூடுதலாக சர்ப்ரைஸ் ஃகிபிட்களையும் நத்திங் வழங்கும் என்று கூறியுள்ளது.

Nothing Phone 2-ஐ இப்படி வாங்கினா எக்ஸ்ட்ரா கிஃப்ட் உண்டு!

நத்திங் ட்ராப்ஸ் என்பது பாப்-அப் ஸ்டோர், வரவிருக்கும் நத்திங் ஃபோன் (2), புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் இயர் (2) பிளாக் மற்றும் பிற நத்திங் தயாரிப்புகளையும் சேர்த்து இந்த பாப்-அப் ஸ்டோர்ஸ் வழியாக வாங்கலாம். நத்திங் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் நத்திங் ட்ராப்ஸ் கடையை பெங்களூரில் மாலை 7 மணிக்கு இந்திய நேரப்படி திறக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த நத்திங் ட்ராப்ஸ் ஸ்டோர் லூலு மால், கோபாலபுரத்தில் அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவைத் தவிர, உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் நத்திங் டிராப்ஸ் அறிமுகப்படுத்தப்படுவதாக நத்திங் அறிவித்துள்ளது. நத்திங் தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, நத்திங் ட்ராப்ஸ் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் பிரத்தியேக சலுகைகளைப் பெற முடியும். இது, ஜூலை 13 முதல் ஸ்டோருக்கு முதலில் வரும் குறிப்பிட்ட எண்ணிக்கை வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.

பெங்களூரைத் தவிர, நத்திங் அதன் நத்திங் ட்ராப்ஸ் ஸ்டோர்களை நியூயார்க், துபாய், லண்டன், டோக்கியோ, கோலாலம்பூர், பெர்லின், டப்ளின் மற்றும் ரோட்டர்டாம் ஆகிய இடங்களிலும் திறக்கப்படுகிறது. வரவிருக்கும் நத்திங் டிராப்ஸின் இருப்பிட விவரங்களை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதள தகவலை பார்க்கலாம். கூடுதலாக, நத்திங் ட்ராப்ஸில் வாடிக்கையாளர்கள் நத்திங் குழுவைச் சந்தித்து பிரத்யேக பரிசுகளைப் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

Nothing Phone 2-ஐ இப்படி வாங்கினா எக்ஸ்ட்ரா கிஃப்ட் உண்டு!

பெங்களூர் நத்திங் ட்ராப்ஸ் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் நத்திங் ஃபோன் (2), நத்திங் இயர் (2) பிளாக், நத்திங் இயர் ஸ்டிக், நத்திங் பவர் (45W) மற்றும் நத்திங் ஃபோன் (2) ஆக்சஸரீஸ் பாகங்களை வாங்க முடியும். நத்திங் ஃபோன் (2) ஐ ஜூலை 11 அன்று வெளியிடப்படும். நத்திங் போன் (2) ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜெனரல் 1 ஆக்டா கோர் சிப்செட் உடன் வருகிறது.

இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த புதிய நத்திங் போன் 2 சாதனத்தில் 50MP +50MP +50MP ரியர் கேமரா மற்றும் 32 MP செல்பி கேமராவுடன் வருகிறது. இது 6.7″ இன்ச் கொண்ட 120Hz OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 4700mAh பேட்டரி உடன் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.

இந்த புதிய Nothing Phone 2 சாதனம் இந்தியாவில் ரூ.49,999 விலையியல் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நத்திங் ட்ராப்ஸ் ஸ்டோர் வழியாக வாங்கும் முதல் முன்னணி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பரிசுகள் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம் மக்களே. முடிந்தால் பெங்களூரு சென்று புது Nothing Phone (2) சாதனத்தை வாங்கி வாருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2 Can Be Purchased From New Nothing Drops Store In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X