ஓ மை காட்! Nothing Phone 1 மீது கிடைக்கும் சலுகை இதானா? 33W பாஸ்ட் சார்ஜிங் உண்மையாவே இருக்கா?

|

உலக ஸ்மார்ட்போன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Nothing Phone 1 டிவைஸின் அறிமுகத்திற்கு இன்னும் வெறும் 4 நாட்களே உள்ள நிலையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய ஒரு முக்கியமான தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதேபோல், இந்த Nothing Phone 1 டிவைஸை வாங்கத் துடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் என்ன சலுகைகள் வழங்கப்படும் என்பதும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

Nothing Phone 1 வாங்க ஆசை இருக்கா?

Nothing Phone 1 வாங்க ஆசை இருக்கா?

உங்களுக்கும் Nothing Phone 1 வாங்க ஆசை இருந்தால், கட்டாயம் இந்த சலுகை விபரங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது சிறப்பானது. லண்டனை தலமாகக் கொண்ட Nothing நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போன் மாடலான Nothing Phone 1 டிவைஸ் பற்றித் தொடர்ந்து பல தகவல்களை டீஸ் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனத்தை நிறுவனம் தன் வசம் இழுத்துள்ளது. முதல் முறை அறிமுகமாகும் ஒரு புதிய டிவைஸிற்கு இப்படி ஒரு எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

Nothing Phone 1 இல் பாஸ்ட் சார்ஜிங் அம்சமா?

Nothing Phone 1 இல் பாஸ்ட் சார்ஜிங் அம்சமா?

சமீபத்தில் வெளியான ஒரு டீஸ் தகவலின் படி, Nothing Phone 1 இன் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. TUV SUD பட்டியல் மூலம் ஆன்லைனில் வெளிவந்த தகவலின் படி, வரவிருக்கும் புதிய நத்திங் போன் 1 டிவைஸில் நாம், 33W முதல் 45W பாஸ்ட் சார்ஜிங்கை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த புதிய ஸ்மார்ட்போனுடன் கிடைக்கும் சலுகை விபரங்களும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

Nothing Phone 1 டிவைஸ் மீது கிடைக்கும் சலுகைகள்

Nothing Phone 1 டிவைஸ் மீது கிடைக்கும் சலுகைகள்

Nothing Phone 1 டிவைஸை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு HDFC கிரெடிட் கார்டு மூலம் ரூ. 2000 தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், EMI பரிவர்த்தனைகள் மூலம் Nothing Phone 1 டிவைஸை வாங்கினாலும் அவர்களுக்கு இந்த ரூ. 2,000 தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற சலுகை விபரங்கள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த புதிய Nothing Phone 1 டிவைஸில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது இதோ.

நத்திங் போன் 1 சிறப்பம்சம்

நத்திங் போன் 1 சிறப்பம்சம்

நத்திங் போன் 1 டிவைஸ் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் OS இல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Nothing Phone 1 ஸ்மார்ட் டிவைஸ் 120 ஹெர்ட்ஸ் ரெபிரெஷ்ஷிங் ரேட் உடன் கூடிய எச்டி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சாதனம் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 778+ சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவைஸ் பற்றி பிரபல டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல் என்ன சொல்கிறதென்று பார்க்கலாம்.

OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?

பிரபல டிப்ஸ்டர் வெளியிட்ட டீஸ் என்ன சொல்கிறது?

பிரபல டிப்ஸ்டர் வெளியிட்ட டீஸ் என்ன சொல்கிறது?

பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா (@stufflistings) வெளியிட்ட தகவலின் படி, நத்திங் போன் 1 இன் TUV SUD பட்டியலில் காணப்பட்ட சில ஸ்கிரீன்ஷாட்களை அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், நத்திங் போன் 1 டிவைஸ் மாடல் எண் A063 உடன் காட்டப்பட்டுள்ளது. டிப்ஸ்டரின் கூற்றுப்படி, Nothing Phone 1 சாதனம் 33W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்கும் என்று காண்பிக்கிறது. இருப்பினும், பவர் சப்ளை யூனிட் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நத்திங் போன் 1 அறிமுகம் எப்போது? இந்தியாவில் என்ன டைமில் பார்க்கலாம்?

நத்திங் போன் 1 அறிமுகம் எப்போது? இந்தியாவில் என்ன டைமில் பார்க்கலாம்?

நத்திங் போன் 1 மீது கிடைக்கப்பெறும் சலுகை விபரங்களையும் டிப்ஸ்டர் தனியாக ட்வீட் செய்து டீஸ் செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. நாங்கள் முன்பே சொன்னது போல, Nothing Phone 1 டிவைஸ் அறிமுகத்திற்கு இன்னும் வெறும் 4 நாட்களே உள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து வருகிறது. நத்திங் போன் 1 டிவைஸின் வெளியீடு வரும் ஜூலை 12 ஆம் தேதி லண்டனில் நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு இது நிகழும்.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

'ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட் (Return to Instinct)' நிகழ்வு

'ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட் (Return to Instinct)' நிகழ்வு

'ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட் (Return to Instinct)' என்ற விர்ச்சுவல் நிகழ்வின் மூலம் இது நடைபெறும். இந்த வெளியீட்டு நிகழ்வு நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மூலம் லைவ் செய்யப்படும். முன்கூட்டிய ஆர்டர் பாஸ் வைத்திருப்பவர்கள் ஜூலை 12 ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஜூலை 18 ஆம் தேதி மாலை 6 மணி வரை Nothing Phone 1 டிவைஸை ஆன்லைன் மூலம் வாங்க முடியும்.

Nothing டீஸ் எப்படி வொர்கவுட் ஆனது?

Nothing டீஸ் எப்படி வொர்கவுட் ஆனது?

இந்த புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விபரங்களை இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை என்பதனால் நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். உங்களுக்கும் இந்த புதிய Nothing Phone 1 மீது அதிக ஆர்வம் இருந்தாலோ அல்லது இந்த டிவைஸை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலோ, அதற்கான காரணம் என்ன என்பதைக் கருத்தில் பதிவிடுங்கள். நத்திங்கின் டீஸ் எப்படியெல்லாம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nothing Phone 1 Will Launch On July 12 During The Return To Instinct Event With 33W Fast Charging

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X