Nothing Phone (1) இருக்கா.. உங்க காட்டில் மழைதான்- தீயா உழைக்கிறாங்க!

|

வித்தியாசமான தோற்றம், ஐபோனுக்கு போட்டி என பல அறிவிப்புகள் உடன் Nothing Phone (1) அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஒருசில குற்றச்சாட்டுகளை இந்த போன் சந்திக்க நேரந்தது. தயாரிப்பு அடிப்படையிலேயே சில குற்றச்சாட்டுகளும், சாஃப்ட்வேர் (ஓஎஸ்) அடிப்படையில் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இதை சரிசெய்யும் வகையில் நிறுவனம் தொடர்ச்சியாக அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. நிறுவனம் முதல் போனிலேயே பெரும் பிழைகள் இருந்துவிடக் கூடாது என கவனமாக வேலை செய்து தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி வருகிறது.

நத்திங் ஓஎஸ் பதிப்பு..

நத்திங் ஓஎஸ் பதிப்பு..

அதன்படி நிறுவனம் கேமரா மேம்பாடுகள் உள்ளிட்ட சில மேம்படுத்தல்களை வழங்கி நத்திங் OS பதிப்பு 1.1.4 புதுப்பிப்பை வழங்கி உள்ளது.

நத்திங் ஓஎஸ் பதிப்பு 1.1.4 புதுப்பிப்பு தற்போதே கிடைக்கிறது. ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்த இந்த போன் பெறும் நான்காவது அப்டேட் இதுவாகும்.

செப்டம்பர் பாதுகாப்பு பேட்ச், கேமரா மேம்பாடுகள் என பல மேம்படுத்தல்களை வழங்குகிறது.

நத்திங் தீம் வாட்டர்மார்க்..

நத்திங் தீம் வாட்டர்மார்க்..

நத்திங் ஓஎஸ் பதிப்பு 1.1.4 ஆனது கேமரா பயன்பாட்டில் நத்திங் தீம் வாட்டர்மார்க் சேர்க்கும் புதிய விருப்பத்தை கொண்டு வந்துள்ளது.

அதேபோல் இந்த புதுப்பிப்பு அல்ட்ரா வைட் கேமரா வண்ண அளவுத்திருத்தத்தையும் மேம்படுத்தி வழங்குகிறது.

பிரதான லென்ஸ் மற்றும் அல்ட்ரா வைட் சென்சார்களுக்குள் இருக்கும் வண்ண நிலைத் தன்மையை இந்த அப்டேட் சமப்படுத்துகிறது.

கேமரா மேம்பாடு முழு விவரம்..

கேமரா மேம்பாடு முழு விவரம்..

Moving objects அதாவது நகரும் பொருட்களை படமெடுக்கும் போது அதன் நிலைத்தன்மையை சரிசெய்ய New motion detection அல்காரிதம் வழங்கப்பட்டுள்ளது.

அல்ட்ரா-வைட் பயன்முறையில் HDR ஐப் பயன்படுத்தும் போது காட்சியை பதிவும் செய்யும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நைட் மோட் ஷாட்கள் வண்ணத் துல்லியமும் மேம்படுத்தி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மேம்பாடுகளை வழங்கும் அப்டேட்..

பல்வேறு மேம்பாடுகளை வழங்கும் அப்டேட்..

முன்பக்கக் கேமராவில் இருக்கும் ஷார்ப்பர் அம்சமானது இயற்கையாகவே பிரகாசமான காட்சிகளை பதிவு செய்ய அனுமதிக்கிறது.

நத்திங் ஓஎஸ் பதிப்பு 1.1.4 ஆனது ஃபேஸ் அன்லாக் அல்காரிதத்தை மேம்படுத்தி இருக்கிறது. செப்டம்பர் செக்யூரிட்டி பேட்ச், புது யுஐ சிஸ்டம் அப்டேட்ஸ், தெர்மல் செயல்திறன் மேம்படுத்தல் உள்ளிட்ட மேம்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 அப்டேட் உறுதி..

ஆண்ட்ராய்டு 13 அப்டேட் உறுதி..

அதேபோல் இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் பேட்டரி ஆயுளை நீடிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனம் மற்றொரு விஷயத்தை உறுதி செய்துள்ளது. அது ஆண்ட்ராய்டு 13 அப்டேட் குறித்த தகவல் ஆகும். 2023 இன் ஆரம்பத்தில் இந்த அப்டேட்டை பயனர்கள் பெறலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பீட்டா பதிப்பில் இந்த அப்டேட் வழங்கி சோதனை செய்யப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தள்ளுபடியுடன் நத்திங் போன் (1)..

தள்ளுபடியுடன் நத்திங் போன் (1)..

நத்திங் போன் (1) இந்தியாவில் ரூ.28,999 என்ற விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் விலை உயர்வை பெற்றது. நத்திங் போன் (1) ரூ.33,999 என பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைத்த நிலையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.28,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகள் உண்டு.

நத்திங் போன் 1 விலை உயர்வு..

நத்திங் போன் 1 விலை உயர்வு..

நத்திங் போன் 1 விலையை நிறுவனம் சமீபத்தில் உயர்த்தியது. Nothing Phone (1) விலை ஆனது ரூ.1000 என்ற வீதம் ஒவ்வொரு வேரியண்ட்-க்கும் உயர்த்தப்பட்டது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.32,999 என இருந்த நிலையில் தற்போது ரூ.33,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.33,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.39,999 எனவும் உயர்த்தப்பட்டது.

நல்ல வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன்..

நல்ல வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன்..

Nothing Phone (1) அறிமுகமான தினத்தில் இருந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்களில் ஒருசில குறைபாடுகள் குறிப்பட்டாலும் விலைக்கேற்ற அம்சங்கள் இதில் இருக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை.

இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) Users Gets New OS Update with Multiple Improvements

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X