Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!

|

கடந்த வாரம் Nothing நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட அதன் முதல் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 1 (Nothing Phone 1) மாடலுக்கு இந்தியாவில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கான ப்ரீ-புக்கிங் ஆர்டர்கள் இன்று முதல் மீண்டும் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நத்திங் போன் 1 மாடலை வாங்க உங்களுக்கும் ஆசை இருக்கிறதா? அப்போ தொடர்ந்து படியுங்கள்.

Nothing Phone 1 ப்ரீ- புக்கிங், ஓபன் சேல்ஸ் மற்றும் சலுகை விபரம்

Nothing Phone 1 ப்ரீ- புக்கிங், ஓபன் சேல்ஸ் மற்றும் சலுகை விபரம்

Nothing Phone 1 ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் Nothing Phone 1 டிவைஸ் தொடர்பான ப்ரீ- புக்கிங் விபரம், ஓபன் சேல்ஸ் விபரம் மற்றும் இந்த டிவைஸ் மீது கிடைக்கும் சலுகை விபரங்கள், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் மற்றும் இதன் விலை போன்ற அனைத்து தகவல்களும் இதில் தெளிவாக பதிவிடப்பட்டுள்ளது என்பதனால், முழு விபரத்தையும் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

Nothing Phone 1 ப்ரீ புக்கிங் நீட்டிப்பு

Nothing Phone 1 ப்ரீ புக்கிங் நீட்டிப்பு

நத்திங் நிறுவனத்தின் துணைத் தலைவரும், பொது மேலாளருமான மனு ஷர்மா, நத்திங் போன் 1 இன் முன்கூட்டிய ஆர்டர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று மதியம் 12 மணி முதல் Nothing Phone 1 மீண்டும் Flipkart இல் முன்கூட்டிய ஆர்டர்களுக்குக் கிடைக்கும் என்றும், இன்விடேஷன் பாஸ் செல்லுபடியாகும் காலவரையறை ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓபன் சேல்ஸ் எப்போது?

ஓபன் சேல்ஸ் எப்போது?

இதற்குப் பின், வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் நத்திங் போன் 1 டிவைஸின் ஓபன் சேல்ஸ் விற்பனை நாடு முழுவதும் சிறப்பாக தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் அவர்களுக்கான டிவைஸை ப்ரீ புக்கிங் செய்துகொள்வது சிறந்தது. இந்தியாவில், நத்திங் போன் 1 டிவைஸிற்கான மவுசு அதிகரித்துள்ளதால் முந்திக்கொள்பவர்களுக்கு முன்னுரிமை.

மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!

நத்திங் போன் 1 சாதனத்தின் விலை என்ன?

நத்திங் போன் 1 சாதனத்தின் விலை என்ன?

இந்தியாவில், நத்திங் போன் 1 டிவைஸின் விலை ரூ. 32,999 என்ற விலை முதல் துவங்குகிறது. நத்திங் போன் 1 சாதனத்தின் அடிப்படை வேரியண்ட் மாடலான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் இப்போது ரூ.32,999 இல் கிடைக்கிறது. அதேபோல், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.35,999 ஆகவும், இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.38,999 ஆகவும் இருக்கிறது.

நத்திங் போன் 1 மீது கிடைக்கும் சலுகை

நத்திங் போன் 1 மீது கிடைக்கும் சலுகை

Nothing நிறுவனம் அறிவித்துள்ள ஆரம்ப கால அறிமுகம் சலுகையின் ஒரு பகுதியாக, இப்போது இந்த மாடல்களின் மேல் நிறுவனம் ரூ.3,000 வரை அறிமுக தள்ளுபடியை விதித்துள்ளது. இதன் படி, இந்த நத்திங் போன் 1 டிவைஸின் விலைகள் முறையே ரூ.29,999, ரூ.32,999 மற்றும் ரூ.35,999 என்ற விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. நீங்கள் HDFC வங்கி வாடிக்கையாளர் என்றால், உங்கள் கார்டு மூலம் கூடுதல் ரூ.2000 மதிப்பிலான தள்ளுபடியைப் பெற முடியும்.

இவர்களுக்கு மட்டும் ரூ. 5000 வரை தள்ளுபடியா?

இவர்களுக்கு மட்டும் ரூ. 5000 வரை தள்ளுபடியா?

இந்த சலுகையும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதனால் முந்திக்கொள்ளுங்கள். HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கார்டு மூலம் பர்ச்சேஸ் செய்யும் பட்சத்தில் நத்திங் போன் 1 டிவைஸின் விலை ரூ. 27,999 என்ற விலைக்குக் குறைகிறது. சரி, இப்போது இந்த புதிய Nothing Phone 1 உடன் கிடைக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். புதிய Nothing Phone 1 சாதனத்தின் காணப்படும் அம்சங்கள் இதோ.

Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!

நத்திங் போன் 1 சிறப்பம்சம்

நத்திங் போன் 1 சிறப்பம்சம்

நத்திங் போன் 1 ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.55' இன்ச் ஃபுல் எச்டி+ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. இந்த புதிய Nothing Phone 1 டிவைஸ் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் உடன் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 50MP சோனி IMX766 சென்சார்-ஐ பேக் செய்யும் மெயின் கேமரா + 50MP அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமராவை ஆதரிக்கிறது.

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

இந்த டிவைஸின் முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமராவை நத்திங் போன் 1 கொண்டுள்ளது. இந்த மிரட்டலான புதிய ஸ்மார்ட்போன் 33W யூஎஸ்பி பிடி ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்ட 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிவைஸின் ப்ரீ புக்கிங் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஓபன் சேல்ஸ் 21 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 1 To Be Available For Pre-Orders Still 20th July Open Sales Starts From 21st

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X