தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?

|

Nothing Phone 1 டிவைஸின் அறிமுகத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நத்திங் போன் 1 தொடர்பான பல லீக் மற்றும் டீஸ் தகவல்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த புதிய நத்திங் போன் 1 டிவைஸில் வரவிருக்கும் முக்கிய அம்சங்களைப் பற்றி நமக்கு ஏற்கனவே சில குறிப்புக்கள் தெரியும். இன்னும் நமக்குத் தெரியாத சில தகவல்களை டெக் பிரியர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

Nothing Phone 1 வாங்க விரும்பும் ரசிகர்களே இதை கொஞ்சம் கவனிங்க

Nothing Phone 1 வாங்க விரும்பும் ரசிகர்களே இதை கொஞ்சம் கவனிங்க

அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஒரு புதிய தகவல் Nothing Phone 1 வாங்க விரும்பிய ரசிகர்கள் மனதில் இடியை இறக்கியுள்ளது. இதுவரை, Nothing Phone 1 பற்றி லெப்ட் ரைட் என்று வெளியான அனைத்து டீஸ்களும் பாசிட்டிவ் இம்பாக்டை ஏற்படுத்தி, ரசிகர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது. ஆனால், இப்போது வெளியான புதிய லீக் தகவல், நத்திங் போன் 1 டிவைஸை வாங்க விரும்பிய ரசிகர்களின் மனதில் ஒரு சிறிய தயக்கத்தை உருவாக்கியுள்ளது.

நத்திங் போனின் 1 ரீடைல் பாக்ஸின் வீடியோ

நத்திங் போனின் 1 ரீடைல் பாக்ஸின் வீடியோ

காரணம், சமீபத்திய தகவல் ஒன்று, நத்திங் ஃபோனின் 1 ரீடைல் பாக்ஸின் புகைப்படத்தைத் தெளிவாகக் காண்பித்துள்ளது. இந்த வீடியோவில் முதல் முறையாக Nothing Phone 1 டிவைஸின் பாக்ஸ் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்ஸ் வழக்கமான ஸ்மார்ட்போன்களுடன் வரும் பாக்ஸை போல் இல்லாமல், மிகவும் ஸ்லிம்மான வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. ஒரு நெக்பேண்ட் அல்லது மொபைல் கேஸ் உடன் வழங்கப்படும் பாக்ஸ் போல இந்த போனின் ரீடைல் பாக்ஸ் காணப்பட்டுள்ளது.

நத்திங் ஃபோன் 1 டிவைஸில் இது எப்படி மிஸ் ஆக முடியும்?

நத்திங் ஃபோன் 1 டிவைஸில் இது எப்படி மிஸ் ஆக முடியும்?

இந்த பாக்ஸின் வடிவமைப்பைப் பார்த்த சிலர், Nothing Phone 1 பெட்டியின் உள்ளே சார்ஜர் இல்லை என்ற வதந்திகளைக் கிளப்பியுள்ளார். உண்மையைச் சொல்லப் போனால், வீடியோவை பார்த்த நமக்கும் அந்த சந்தேகம் வலுப்படுத்துகிறது. இதற்கு முன் வெளியான தகவலின் படி, நத்திங் ஃபோன் 1 டிவைஸ் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறதென்றால், கட்டாயம் அதற்கு இணக்கமான சார்ஜர் உடன் மட்டுமே சாத்தியமாகும்.

Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?

சார்ஜர் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லையே?

சார்ஜர் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லையே?

அப்படி இருக்கும் பச்சத்தில், கட்டாயம் நிறுவனம் Nothing Phone 1 உடன் சரியாகச் சேரும் ஒரு சார்ஜரை அதன் பாக்ஸ் உடன் வழங்கியாக வேண்டும். ஆனால், இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்ட பாக்ஸின் அளவை வைத்துப் பார்க்கையில், இது சார்ஜர் இருப்பதற்கான அறிகுறி மிகவும் குறைவாக இருக்கிறது. Nothing Phone 1 டிவைஸை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் இந்த தகவலை அறிந்த பின், சிறிய தயக்கமான மனநிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த புதிய லீக் தகவல் Nothing Phone 1 மீது சிறிய நெகட்டிவ் இம்பாக்டை உருவாக்கியுள்ளது.

சோயாபீனால் மை செஞ்சு யூஸ் பண்ணுனீங்களா?

சோயாபீனால் மை செஞ்சு யூஸ் பண்ணுனீங்களா?

டெக்னிக்கல் குருஜி என்ற கௌரவ் சௌத்ரி, நத்திங் நிறுவனத்துடன் இணைந்து யூடியூப்பில் வெளியிட்ட வீடியோவில், இந்த பாக்ஸ் பற்றி காண்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நத்திங் நிறுவனம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள் மற்றும் பூஜ்ஜிய பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி இந்த பாக்ஸை எப்படித் தயாரித்தது என்பதை வீடியோ விளக்குகிறது. இந்த பாக்ஸில் உள்ள எழுத்துக்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் மை கூட சோயாபீனால் ஆனது என்று நிறுவனம் கூறியுள்ளது.

நத்திங் போன் 1 பாக்ஸ் உள்ளே சார்ஜர் இல்லாமல் வரலாம்

நத்திங் போன் 1 பாக்ஸ் உள்ளே சார்ஜர் இல்லாமல் வரலாம்

பாக்ஸின் மெலிதான, நேர்த்தியான மற்றும் குறைந்தபட்ச வடிவ காரணி, காரணமாக வதந்திகள் உண்மையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால், நத்திங் போன் 1 பாக்ஸ் உள்ளே சார்ஜர் இல்லாமல் அனுப்பப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. இதேபோல், மற்றொரு அதிகாரப்பூர்வமாக நத்திங் டிக்டாக் வீடியோவில், Nothing Phone 1 டிவைஸில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளதை நிறுவனம் காட்டியுள்ளது.

திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2iதிருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2i

நத்திங் போன் 1 அறிமுகம் எப்போது?

நத்திங் போன் 1 அறிமுகம் எப்போது?

இந்த ஸ்கேனர் மூலம் Nothing Phone 1 எவ்வளவு விரைவாக அன்லாக் செய்கிறது என்பதை இந்த வீடியோ தெளிவாகக் காண்பிக்கிறது. நத்திங் போன் 1 டிவைஸ் வரும் ஜூலை 12 ஆம் தேதி, இரவு 8:30 IST மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த டிவைஸ் இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாகவும், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் வழியாகவும் பிரத்தியேகமாக விற்பனைக்கு வாங்கக் கிடைக்கும். இந்த நத்திங் போன் 1 டிவைஸின் அறிமுகத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

புதிய நத்திங் போன் 1 போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

புதிய நத்திங் போன் 1 போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

வரவிருக்கும் புதிய நத்திங் போன் 1 டிவைஸ் Qualcomm Snapdragon 778G+ சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் உடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் OS உடன் வெளிவரும். Nothing Phone 1 ஸ்மார்ட் டிவைஸ் 120 ஹெர்ட்ஸ் ரெபிரெஷ்ஷிங் ரேட் உடன் கூடிய 6.55' இன்ச் கூடிய எச்டி டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 MP + 16 MP கொண்ட டூயல் ரியர் கேமரா மற்றும் 16 MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4500 mAh பேட்டரி உடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 1 Retail Box First Look Video Suggests No Charger Inside The Box

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X