Home
News

போட்றா.. போட்றா.. ஆளுக்கு 1 ஆர்டர் போட்றா.. முழுசா ரூ.11,000 விலை குறைப்பு.. அடிமட்ட விலையில் Nothing போன்!

"உங்களுக்கும் வேண்டாம்.. எங்களுக்கும் வேண்டாம்.. ரவுண்ட்-ஆ ரூ.11,000 குறைச்சுக்கலாம்!" என்று பேரம் பேசாத குறையாக.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2023 விற்பனையின் போது நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்ட்போனான நத்திங் போன் 1 மாடலானது அடிமட்ட லெவலுக்கு இறங்கி வரவுள்ளது.

நத்திங் போன் 1 மீது அப்படி என்ன ஆபர் கிடைக்கும்? பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2023 விற்பனை எப்போது தொடங்கும்? நத்திங் போன் 1 தவிர்த்து வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி விலையின்கீழ் வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

முழுசா ரூ.11,000 விலை குறைப்பு.. அடிமட்ட விலையில் Nothing போன்!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2023 விற்பனையின் போது நத்திங் போன் 1 மாடலானது ரூ.25,000-க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும். டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் ட்விட்டர் பதிவின்படி, நடக்கவிருக்கும் பிளிப்கார்ட் விற்பனையின் போது நத்திங் போன் 1-ன் விலை ரூ.23,000 ஆக குறைக்கப்படும்.

நினைவூட்டும் வண்ணம், நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 3 ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமானது. 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.35,999 க்கும் மற்றும் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.38,999 க்கும்

பின்னர் அறிமுகமான 1 மாதத்திலேயே நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் ரூ.1000 விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கண்ட மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே முறையே ரூ.33,999, ரூ.36,999 மற்றும் ரூ.39,999 ஆக விலை உயர்ந்தது.

இதற்கிடையில் தான நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது ரூ,23,000 க்கு வாங்க கிடைக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது,. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது முழுதாக ரூ.10,999 என்கிற தள்ளுபடியை பெறும்.

இந்த தள்ளுபடி விலையானது வங்கி சலுகையை (Bank Offer) உள்ளடக்கியதா அல்லது நேரடி தள்ளுபடியாக (Flat Discount) இருக்குமா என்பது குறித்து சரியான தெரியவில்லை. அதுகுறித்த தகவல், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் நேரலைக்கு வரும் ஒரு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படலாம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை எப்போது தொடங்கும்? பிளிப்கார்ட்டின் இந்த பண்டிகை கால விற்பனையானது சரியாக எப்போது தொடங்கும், எப்போது முடிவடையும் என்கிற தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையானது வருகிற அக்டோபர் 4 ஆம் தேதியன்றுதொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடிகள் கிடைக்கும்? பிளிப்கார்ட் தலத்தில் மோட்டோ ஜி54 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி, ரியல்மி சி51, ரியல்மி 11 5ஜி, ரியல்மி 11எக்ஸ் 5ஜி, இன்பினிக்ஸ் ஸீரோ 30 5ஜி, மோட்டோ ஜி84 5ஜி, விவோ வி29இ, போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போன்ற மாடல்களும் சலுகை விலையில் கிடைக்குமென்று பட்டியலிடப்பட்டுள்ளது

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை (Flagship Smartphones) பொறுத்தவரை, இது தவிர்த்து சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மீது மிகப்பெரிய தள்ளுப்படி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் மீதும், ஐபோன் 13 சீரீஸ் மாடல்கள் மீதும் கூட பெரிய அளவிலான விலைக்குறைப்புகளை காணலாம்.

கூகுளின் பிக்சல் 8 சீரீஸ் (Pixel 8 Series) வருகிற அக்.4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதால், பழைய பிக்சல் 7 சீரிஸ் (Google Pixel 7 Series) மற்றும் பிக்சல் 6 சீரிஸ் (Pixel 6 Series) மாடல்கள் மீதும் நாம் தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 1 Price Will Dropped Under Rs 25000 in Upcoming Flipkart Big Billion Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X