நத்திங் போன் 1 பர்ஸ்ட்-லுக் வீடியோ: நோட்டிபிகேஷன் வந்ததும் பேக் பேனல் சும்மா பளபளக்கும்!

|

அறிமுகமான ஆரம்ப காலத்தில் எப்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதோ, அதே பரபரப்பை நத்திங் (Nothing) நிறுவனத்தின் ஸ்மார்ட்போனும் கிளப்பி உள்ளது. இந்த பரபரப்பு இன்று, நேற்றல்ல, டிரான்ஸ்பிரென்ட் ஆன டிசைனில் வெளியான நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் அறிமுகமான நாளில் இருந்தே நிலவுகிறது.

பர்ஸ்ட் லுக் போட்டோ - எதிர்பார்ப்புகளை துவம்சம் செய்தது!

பர்ஸ்ட் லுக் போட்டோ - எதிர்பார்ப்புகளை துவம்சம் செய்தது!

நத்திங் இயர் 1 பட்ஸ்களை போலவே, நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களும் டிரான்ஸ்பிரென்ட் ஆன டிசைனில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது உள்ளே என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்ற பேக் பேனலுடன் நத்திங் ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் வெளியான நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் லுக் போட்டோவானது, அதன் மீதான அனைத்து வகையான எதிர்பார்ப்புகளையும் சின்னாபின்னமாக்கியது என்றே கூறலாம்.

ஆனால் பர்ஸ்ட் லுக் வீடியோ - புதிய எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது!

ஆனால் பர்ஸ்ட் லுக் வீடியோ - புதிய எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது!

பலரும் எதிர்பார்த்தபடி, நத்திங் போன் 1 ஆனது எந்த விதமான டிரான்ஸபிரென்ட் டிசைனையும் வெளிப்படுத்தவில்லை; மாறாக திடமான ஒயிட் பினிஷ் பேக் பேனலையே கொண்டிருந்தது.

இது கண்ணாடி போன்ற வெளிப்படையான வடிவமைப்பை எதிர்பார்த்த நத்திங் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இதற்கிடையில் தான், நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனில் வேறொரு வித்தியாசமான பேக் பேனலை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

எல்லா நன்றிகளும் பத்திரிகையாளர் ரஃபேல் ஜீயருக்கே!

எல்லா நன்றிகளும் பத்திரிகையாளர் ரஃபேல் ஜீயருக்கே!

ஒரு பத்திரிகையாளர் யூடியூப் வழியாக நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் "பர்ஸ்ட்-லுக்" வீடியோவை பதிவிட்டுள்ளார். அதன் வழியாக குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பேன்ஸி ஆன லைட்டுகள் இருப்பதை அறிய முடிகிறது.

அதாவது உங்களுக்கு மெசேஜ் நோட்டிபிகேஷனோ அல்லது கால் நோட்டிபிகேஷனோ வரும் போது குறிப்பிட்ட பேன்ஸி லைட்டுகள் ஒளிரும்.

லண்டனை தலைமையிடமாக கொண்ட நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் லுக் போட்டோவை வெளிப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு ஈவென்ட்டில் இருந்து நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பத்திரிகையாளர் ரஃபேல் ஜீயர் யூடியூபில் பகிர்ந்து உள்ளார்.

வாட்ஸ்அப் யூசர்கள் பெருமூச்சு! ஐபோனிற்கு வந்து ஒரு வருடம் கழித்து ஆண்ட்ராய்டுக்கு வந்த முக்கிய அம்சம்!வாட்ஸ்அப் யூசர்கள் பெருமூச்சு! ஐபோனிற்கு வந்து ஒரு வருடம் கழித்து ஆண்ட்ராய்டுக்கு வந்த முக்கிய அம்சம்!

அறிமுகம் ஆகாத நத்திங் ஸ்மார்ட்போன் அவருக்கு எப்படி கிடைத்தது?

அறிமுகம் ஆகாத நத்திங் ஸ்மார்ட்போன் அவருக்கு எப்படி கிடைத்தது?

ரஃபேல் ஜீயரின் கூற்றுப்படி, சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்ட் பேசலில், நத்திங் நிறுவனம் ஒரு சர்ப்ரைஸ் ஈவென்ட்-ஐ ஏற்பாடு செய்தது, அதில் பங்கு கொண்ட சில பத்திரிகையாளர்களுக்கு வரவிருக்கும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனிற்கான 'லிமிடெட் அக்செஸ்' வழங்கப்பட்டது; அதில் ஜீயரும் ஒருவர்.

அந்த சமயத்தில் தான், நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் பேக் பேனல் எவ்வாறு ஒளிர்கிறது என்பதை ஜீயர் கண்டறிந்து வெளிப்படுத்தி உள்ளார். நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் பேக் பேனலின் நடுவில் ஒரு வளையமும் உள்ளது, ஜீயரின் கூற்றுப்படி, அது குறிப்பிட்ட நேரத்தில் ஒளிரலாம், அதாவது சார்ஜ் செய்யும் போது ஒளிரலாம் அல்லது முற்றிலும் ஒளிராமலேயே கூட போகலாம்.

இந்த பேன்ஸி லைட்டுகளின் உண்மையான நோக்கம் தான் என்ன?

இந்த பேன்ஸி லைட்டுகளின் உண்மையான நோக்கம் தான் என்ன?

நத்திங் நிறுவனத்தின் இந்த பேன்ஸி லைட்டுகளின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று சரியாக தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக மிகவும் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக ஸ்மார்ட்போன்கள் அதன் முன்பக்கத்தில் பிரத்யேகமான நோட்டிபிகேஷன் லைட்டுகளை கொண்டுள்ளன.

அவைகள் இன்கம்மிங் கால்ஸ், மெசேஜ் அலெர்ட்ஸ் மற்றும் சார்ஜிங் ஆகியவற்றை குறிக்கும் வண்ணம் ஒளிரும். இவைகள் வழக்கமாக முன் பக்கத்தில் அல்லது ஸ்க்ரீனில் (சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் போன்களில் இருப்பது போல) இருக்கும்.

சமீபத்தில் இவைகள் ஸ்மார்ட்போனின் பின்பக்கத்திற்கும் இடம்பெயர்ந்துள்ளன. நத்திங் நிறுவனத்தின் பேன்ஸி லைட்டுகளும் மேற்கண்ட நோக்கத்திற்காக செயல்படுகின்றனவா அல்லது மற்ற ஸ்மார்ட்போன்களில் இருந்து வித்தியாசமாக தோற்றமளிக்கும் நோக்கத்திற்காக ஒரு 'எக்ஸ்ட்ரா'வான பகுதியா என்பதை பொறுத்திருந்து தான் வேண்டும்.

நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்?

நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்?

முன்னதாக வெளியான அதிகாரப்பூர்வமான பர்ஸ்ட் லுக் போட்டோவை வைத்து பார்க்கும் போது, நத்திங் போன் 1-இன் பேக் பேனல் ஆனது வட்டமான மூலைகளுடன் திடமான ஒயிட் பினிஷை பெற்றுள்ளது.

பேக் பேனலில் ஒரு எல்இடி ப்ளாஷ் உடன் இணைக்கப்பட்ட டூயல் ரியர் கேமரா யூனிட்டையும் பார்க்க முடிகிறது. ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பவர் பட்டன் உள்ளது மற்றும் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர்ஸ் பட்டன் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் வருவது போல் தெரிகிறது; ஆனால் 3.5mm ஆடியோ ஜாக் இல்லை.

உள்நாட்டிலேயே ரெடியாகும் என்பதால் விலையில் சலுகைகள் இருக்கலாம்!

உள்நாட்டிலேயே ரெடியாகும் என்பதால் விலையில் சலுகைகள் இருக்கலாம்!

இது உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமான விடயம் தான். இந்தியாவில் விற்கப்படும் நத்திங் போன் 1 யூனிட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த தகவல் ஒரு வதந்தியாகவே பரவியது. இருப்பினும் நத்திங் இந்தியா துணைத் தலைவரும் பொது மேலாளருமான மனு ஷர்மா, இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு நத்திங் போன் 1 யூனிட்டும் உள்நாட்டிலேயே தான் தயாரிக்கப்படும் என்று ட்வீட் செய்ததை தொடர்ந்து, இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.

இந்தியா, நத்திங் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தை!

இந்தியா, நத்திங் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தை!

இது குறித்து மனு ஷர்மா மேலும் பேசுகையில், இந்தியா நத்திங் நிறுவனத்திற்கான ஒரு முக்கிய சந்தை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ, உள்நாட்டிலேயே தயார் ஆகும் பட்சத்தில் விலை நிர்ணயத்தில் நமக்கு சில சலுகைகள் கிடைக்கும் என்று நம்பலாம்.

அறியாதோர்களுக்கு, 'ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட்' என்கிற ஒரு விர்ச்சுவல் ஈவென்ட் வழியாக நத்திங் போன் 1 ஆனது வருகிற ஜூலை 12 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுதவிர்த்து நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் குறித்த எந்த தகவலும் எங்களிடம் இல்லை. வரும் நாட்களில் மேலும் பல டீஸர்கள் வெளியாகும் என்பதால், அதனுடன் விலை நிர்ணயம் குறித்த 'ஹிண்ட்'டும் வெளியாகலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சமயத்தில் குறிப்பிட்ட தகவலை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Nothing Phone 1 First look image may upset you for not packing a transparent design but the surprise is the back panel has a lot of fancy lights to indicate messages or call notifications. check full details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X