Nothing Phone 1 இந்தியாவில் அறிமுகம்: விலை, விற்பனை தேதி & அம்சங்கள்!

|

நத்திங் போன் 1, இந்தியாவில் இன்று (ஜூலை 12) அறிமுகமானது.

எதிர்பார்க்கப்படியே இது ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது.

என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் ஓப்பன் சேல் தொடங்கும்? Nothing Phone 1 மீது ஏதேனும் அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதா? இதோ முழு விவரங்கள்:

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நத்திங் போன் 1 ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்ட்டிஆர்10+, கார்னிங் கொரில்லா கிளாஸ், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்றவைகளை உள்ளடக்கிய 6.55-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது கெபாசிட்டிவ் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் பேக் செய்கிறது.

சிப்செட்:

சிப்செட்:

முன்னரே அறிவிக்கப்பட்டபடி, நத்திங் போன் 1 ஆனது Qualcomm Snapdragon 778G+ SoC உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மோட்டோரோலா எட்ஜ் 30 போன்ற ஸ்மார்ட் போன்களில் காணப்படும் மிகவும் சக்திவாய்ந்த 5G சிப்செட் ஆகும்.

ஓஎஸ் மற்றும் கேமரா செட்டப்:

ஓஎஸ் மற்றும் கேமரா செட்டப்:

நத்திங் போன் 1 ஆனது நத்திங் ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமராக்களை பேக் செய்கிறது. மெயின் கேமராவாக 50-மெகாபிக்சல் சோனி IMX766 சென்சார் பயன்படுத்தபட்டுள்ளது.

இரண்டாம் நிலை கேமராவாக 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் ஆட்டோஃபோகஸையும் கொண்டுள்ளது, எனவே இது மேக்ரோ கேமராவாகவும் செயல்படும்.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார்-ஐ கொண்டுள்ளது.

4K ரெசல்யூஷன் வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் வழியாக நீங்கள் வீடியோ ரெக்கார்டு செய்யும்போது, ​​ரெக்கார்டிங் ஆன் செய்யப்பட்டுள்ளதை அறிய மொபைலின் பின்புறத்தில் சிவப்பு எல்இடி ஒளிரும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்:

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்:

நத்திங் போன் 1 ஆனது 33W USB PD ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்ட 4,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

மேலும் இது 15W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் வழங்குகிறது.

ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் இருப்பது ஒப்பீட்டளவில் மிகவும் அரிதான அம்சம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்:

ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்:

12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்: அவைகள் 8GB + 128GB, 8GB + 256GB மற்றும் 12GB + 256GB ஆகும்.

விலை விவரங்கள்:

விலை விவரங்கள்:

8ஜிபி + 128ஜிபி - ரூ.32,999
8ஜிபி + 256ஜிபி - ரூ.35,999
12ஜிபி + 256ஜிபி - ரூ.38,999

அறிமுக சலுகையாக, வெளியான 3 ஸ்டோரேஜ் விருப்பங்களின் மீதும் ரூ.3,000 என்கிற தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை விவரங்கள்:

விற்பனை விவரங்கள்:

Flipkart பக்கத்தின் படி, நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி மாடல் ஆனது ரூ.29,999 என்கிற சலுகை விலையிலும், அதன் 8ஜிபி + 256ஜிபி மாடல் ஆனது ரூ.32,999 என்கிற சலுகை விலையிலும் மற்றும் 12ஜிபி + 256ஜிபி மாடல் ஆனது ரூ.35,999 என்கிற சலுகை விலையிலும் வருகிற ஜூலை 21 ஆம் தேதி முதல் (ஓப்பன் சேல்) வாங்க கிடைக்கும்.

எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.2000 என்கிற தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை ஏற்கனவே ப்ரீ-ஆர்டர் செய்தவர்கள் இதை உடனடியாக வாங்க முடியும். மற்றவர்கள் ஓப்பன் சேல் (ஜூலை 21) வரை காத்திருக்க வேண்டும்.

Photo Courtesy: Nothing Website

Best Mobiles in India

English summary
Nothing Phone 1 Launched in India Check Price Full Specifications Sale Date Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X