Home
News

ஆப்பிள்-க்கு போட்டி ரெடி- களமிறங்கும் நத்திங் போன் (1): எல்லாரும் ஒத்து., இனி நாங்கதான் கெத்து!

லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங், அதன் முதல் ஸ்மார்ட்போனான போன்(1)-ஐ அறிமுகப்படுத்தும் திட்டத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த சாதனம் குவால்காமின் ஸ்னாப்டிராகன் மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகிறது. நத்திங் ஃபோன் (1) என்பது நிறுவனத்தின் தயாரிப்பு அமைப்பின் கீழ் இரண்டாவது சாதனமாகும். ஃபோன் (1) சாதனம் கோடை காலத்தில் வெளியாகும் எனவும் நத்திங் ஓஎஸ் குறித்த கூடுதல் விவரங்களையும் பார்க்கலாம். இந்த தகவல் ஆனது மார்ச் 23 அன்று நடைபெற்ற நத்திங் நிகழ்ச்சியில் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் கார்ல் பெய் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் லைட் மற்றும் வெயிட்டான நத்திங் ஓஎஸ் இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் சாதனங்களுக்கு இணை போட்டி

ஆப்பிள் சாதனங்களுக்கு இணை போட்டி

நத்திங் நிறுவனம் சாதனம் ஆப்பிள் சாதனங்களுக்கு இணையாக போட்டிப் போடும் விதமாகவும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நத்திங் நிறுவனம் ஒரு நேக்கட் டிசைன் ப்ளூடூத் இயர்பட்ஸை மட்டும் தொழில்நுட்ப சந்தையில் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்திருந்தது. இந்த நிலையில் ஆப்பிள் போனுக்கு இணை போட்டியாக இருக்கும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனை நத்திங் நிகழ்வில் அறிவித்தது. இதுகுறித்து தலைமை செயல் அலுவலர் கார்ல் பெல், 300 பேர் கொண்ட குழுவை உருவாக்கி குவால்காம் டெக்னாலஜிஸ், இன்க் போன்ற நம்பகமான கூட்டாளர்களின் ஆதரவைப் பெற்ற பிறகு, தூக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் மாற்றத்தை விதைக்க போன் (1) சாதனத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டார்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை

மேலும் ஸ்மார்ட்போன் சந்தை அபார வளர்ச்சியை கண்டிருக்கிறது, இருப்பினும் அவை எதுவும் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் எனது எதிர்பார்ப்பு தனது பயனர்கள் உடையது எனவும் கூறினார். மேலும் அவர்கள் விரும்பும் புதிய கண்டுபிடிப்புகள் தற்போதுவரை வெளிவரவில்லை என நத்திங் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவர் கார்ல் பெல் குறிப்பிட்டார். நாங்கள் ஒரு புதிய 10 மில்லியன் டாலர் சுற்று சமூக முதலீட்டை செய்கிறோம் இதன் மூலம் தங்கள் ஆதரவாளர்கல் தொழில்துறையின் ஜாம்பவான்களுக்கு எதிராக நேருக்கு நேர் பயணிக்க இருக்க வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறினார்.

நிலையை மாற்றம் செய்வதுற்கு என நத்திங்

மேலும் கார்ல் பெல் தெரிவித்த தகவல் குறித்து பார்க்கையில், சிறந்த போன்கள் வெளியிடும் பிராண்டுகள் என வாடிக்கையாளர்கள் ஒரு சிலவற்றை மட்டுமே நம்பி இருக்கின்றனர். ஆனால் அவைகள் பயனர்களுக்கு என புதிய மாற்றம் என எதையும் அறிமுகம் செய்யவில்லை குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து புதிய ஸ்மார்ட்போன் என சந்தையில் அறிமுகம் செய்கின்றனர். இந்த நிலையை மாற்றம் செய்வதுற்கு என நத்திங் வந்திருக்கிறது. நத்திங்-ன் முதல் ஸ்மார்ட்போனான நத்திங் போன் 1 விரைவில் சந்தைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கு என பிரத்யேகமாக ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓஎஸ் பிற ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும்.

சிரமமின்றி இயக்க ஒருங்கிணைக்கும்

நத்திங் ஓஎஸ் ஆனது திறந்த மற்றும் தடையற்ற சுற்றுச்சூழல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவான சாஃப்ட்வேர் ஆகும். உலகின் முன்னணி பிராண்டுகளுக்கு இணையாக நத்திங் தயாரிப்புகளை சிரமமின்றி இயக்க ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு பைட்டுக்கும் ஒரு நோக்கம் இருக்கும் அதேபோல் இதில் அத்தியாவசமின்றி இயங்கும் பயன்பாடுகளை ஃபில்டர் செய்து பேட்டரி அதிகம் உறிஞ்சாத வண்ணம் செயல்பட வைக்கிறது. அதேபோல் இது வேகமான, மென்மையான மற்றும் தனிப்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்ப சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் 1 தொழில்நுட்ப சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குவால்காம் ஸ்னாப்டிராகன் உடன் இணைந்து இந்த சாதனம் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். 3 வருட ஓஎஸ் அப்டேட், 4 வருட செக்யூரிட்டி பேட்ச் உள்ளிட்ட அம்சத்தோடு இதுவரும். வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெறும் எனவும் தேவையற்ற அம்சங்கள் இதில் இருக்காது என குறிப்பிட்டார். ஆப்பிள் ஐபோன் தான் பெஸ்ட் என்ற நிலையை மாற்றுவதற்கான சாதனமாக நத்திங் போன் 1 இருக்கும். முன்னதாகவே சந்தையில் பிரபலமாக இருக்கும் பயன்பாடுகளை விளம்பரப்படுத்தி சாதனத்தை சந்தைக்கு கொண்டுவருவது தங்கள் நோக்கம் இல்லை. கோடை காலத்தில் குளிர்ச்சி வாய்ந்த செய்தியாக இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி உங்களை வந்து சேரும், தங்கள் தயாரிப்புகள் அனைத்தும் உங்களுக்கானது என கார்ல் பெல் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) is Officially Coming in Summer 2022: It’s unlike anything else!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X