Nothing Phone (1) எப்படி இருக்கு? வாங்கலாமா வேண்டாமா?- உடைந்த ரகசியம்!

|

Nothing Phone (1) பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த ஸ்மார்ட்போன் பூர்த்தி செய்ததா, விலைக்கேற்ற அம்சங்கள் இருக்கிறதா என்ற விவரங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.

காத்திருந்த வாடிக்கையாளர்கள், அறிமுகமான Nothing Phone (1)

காத்திருந்த வாடிக்கையாளர்கள், அறிமுகமான Nothing Phone (1)

ஜூலை 12 ஆம் தேதிதான் புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என பெரும்பாலானோர் காத்திருந்தனர். காரணம், மிகவும் எதிர்பார்த்த Nothing Phone (1) ஜூலை 12 ஆம் தேதி தான் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு அதன்படி ஸ்மார்ட்போனும் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருந்த காரணம் என்னவென்று தெரியுமா?

ஐபோனுக்கு இணை போட்டியான ஸ்மார்ட்போனா இது?

ஐபோனுக்கு இணை போட்டியான ஸ்மார்ட்போனா இது?

ஐபோனுக்கு இணை போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும், இதுவரை பயனர்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது ஸ்மார்ட்போனே இல்லை. ஸ்மார்ட்போன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் Nothing Phone (1) இருக்கும் என பல்வேறு புகழாரத்தை இந்த Nothing Phone (1) க்கு Nothing சிஇஓ Carl Pei சூட்டியிருந்தார். சரி, இது அனைத்தையும் இந்த ஸ்மார்ட்போன் பூர்த்தி செய்ததா?

ஜொலிக்கும் லைட் மற்றும் ரிச் லுக்

ஜொலிக்கும் லைட் மற்றும் ரிச் லுக்

Nothing Phone (1) நேற்று (ஜூலை 12) ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பின்புறத்தில் ஜொலிக்கும் லைட் மற்றும் அதன் வடிவமைப்பை தவிர இந்த ஸ்மார்ட்போன் லுக் என்பது ஐபோனுக்கு இணையாக தான் இருக்கிறது. டூயல் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் என அம்சங்களும் மேம்பட்ட வகையில் தான் இருக்கிறது. பிறகு என்ன வாங்கிவிடலாமா என்றால் இன்னும் தகவல் இருக்கிறது அதையும் படியுங்கள்.

கெபாசிட்டிவ் ஃபிங்கர் பிரிண்ட், ப்ரீமியம் டிஸ்ப்ளே

கெபாசிட்டிவ் ஃபிங்கர் பிரிண்ட், ப்ரீமியம் டிஸ்ப்ளே

Nothing Phone (1) இன் டிஸ்ப்ளே ஆனது 6.5 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவு இருக்கிறது. ஐபோன் போன்ற மேம்பட்ட சாதனங்களிலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற அம்சங்கள் தான் இருக்கும். பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. இது உடனடி ரெஸ்பான்ஸ் வழங்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மேம்பட்ட சிப்செட் ஆதரவுடன் புதிய ஸ்மார்ட்போன்

மேம்பட்ட சிப்செட் ஆதரவுடன் புதிய ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் சக்தி வாய்ந்த மேம்பட்ட சிப்செட் ஆன Qualcomm Snapdragon 778G+ SoC பொருத்தப்பட்டுள்ளது. இடைநிலை விலைப் பிரிவில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள இந்த சிப்செட் மூலமாக ப்ரீமியம் தர அனுபவத்தை பெறலாம்.

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிப்செட்

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிப்செட்

நத்திங் ஃபோன் 1 ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. ஐபோன் பேக், தனிப்பயன் வால்பேப்பர்கள், ரிங்டோன்கள் மற்றும் அறிவிப்பு ஒலிகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதிப்புப்புகளை பெறும் என கூறப்படுகிறது.

டூயல் கேமரா தான் இருக்கு, அது எப்படி?

டூயல் கேமரா தான் இருக்கு, அது எப்படி?

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் டிரிபிள் கேமரா, குவாட் கேமரா அமைப்புகளில் இருக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் மிட் ரேஞ்ச் விலைப் பிரிவில் கிடைக்கும் Nothing Phone (1) ஸ்மார்ட்போனில் மட்டுமே ஏன் டூயல் கேமரா இருக்கிறது என்ற கேள்வி வரலாம். ப்ரீமியம் விலைப் பிரிவில் கிடைக்கும் ஐபோன்களில் கூட டூயல் கேமரா அமைப்பு தானே இருக்கிறது.

ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் இருக்கும் சோனி ஐஎம்எக்ஸ் சென்சார்

ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் இருக்கும் சோனி ஐஎம்எக்ஸ் சென்சார்

கேமராவைப் பொறுத்தவரை அதன் மெகாபிக்சல் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட அது என்ன சென்சார் என்பது முக்கியம். அதனால் ஐபோனின் டூயல் கேமராவில் எடுக்கும் இமேஜ் க்வாலிட்டி ட்ரிபிள், குவாட் கேமராக்களில் கிடைப்பது இல்லை. அதற்கு ஏற்ப Nothing Phone (1) இல் சோனி IMX766 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எடுக்கப்படும் இமேஜ் குவாலிட்டி எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

ஐபோன் போன்று டூயல் கேமரா ஆதரவு

ஐபோன் போன்று டூயல் கேமரா ஆதரவு

Nothing Phone (1) ஸ்மார்ட்போனில் 50 எம்பி சோனி IMX766 கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என டூயல் கேமரா வசதி இருக்கிறது. இந்த சென்சார் ஆட்டோஃபோகஸ் மற்றும் மேக்ரோ கேமராவாகவும் செயல்படும். எனவே இதன்மூலம் எடுக்கப்படும் புகைப்படம் மேம்பட்ட வகையில் இருக்கும். முன்புற செல்பி கேமராவும் மேம்பட்டதாகவே இருக்கிறது. இதன் முன்புறத்தில் 16 எம்பி சோனி IMX471 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லை பிரத்யேக ஆதரவுகளும் இருக்கிறது.

கேமராவில் உள்ள பிரத்யேக ஆதரவுகள்

கேமராவில் உள்ள பிரத்யேக ஆதரவுகள்

4K ரெசல்யூஷன் வரை வீடியோ பதிவு செய்யும் திறன், வீடியோ ரெக்கார்ட் செய்யும்போது ரெக்கார்டிங் ஆன் செய்யப்பட்டதை அறிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ரெட் எல்இடி லைட் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வெளியான தகவலின்படி ஸ்மார்ட்போனில் மேம்பட்ட இமேஜ் க்வாலிட்டியை பெற முடியும்.

ஜொலிக்கும் லைட் உங்கள் கட்டுப்பாட்டில்

ஜொலிக்கும் லைட் உங்கள் கட்டுப்பாட்டில்

ஸ்மார்ட்போனின் புகைப்படத்தில் காணப்படுவது போல் அதன் பின்புறத்தில் வெள்ளை நிறத்தில் காட்டப்படும் அனைத்தும் பிரகாசமாக ஒளிரும். எந்த லைட் எப்போது ஒளிர வேண்டும் என்பதை தீர்மானத்து நீங்களே செட்டிங்ஸ் இல் மாற்றம் செய்து கொள்ளலாம். மேம்பட்ட ஆதரவுடன் இதுபோன்ற லைட் எல்லாம் இருக்கிறதா சார்ஜிங் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி அடுத்து தோன்றுகிறதா. வாங்க அதையும் பார்த்துவிடலாம்.

மொத்த சார்ஜிங் ஆதரவும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று

மொத்த சார்ஜிங் ஆதரவும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று

Nothing Phone (1) இல் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 33W USB PD ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளது. அதேபோல் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது. தேவையான சார்ஜிங் ஆயுள் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவை இந்த அம்சம் கொடுக்கும். அதேபோல் மிட் ரேஞ்ச் விலைப் பிரிவில் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. சரி விலைக்கு வருவோம்.

விலை என்ன தெரியுமா?

விலை என்ன தெரியுமா?

Nothing Phone (1) 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.32,999 எனவும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.35,999 எனவும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.38,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதைவிட இதுதான் சிறந்தது

அதைவிட இதுதான் சிறந்தது

எதிர்பார்த்தபடி, மொபைலுடன் இணைக்கப்பட்ட சார்ஜர் எதுவும் இல்லை. தனித்தனியாக விற்கப்படும் ஃபோன் 1க்கான தெளிவான வழக்கை எதுவும் எனக்கு அனுப்பவில்லை. அதேபோல் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடையாமல் இருக்க இரண்டு வண்ண விருப்பங்களில் தான் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. பொதுவாக வெள்ளை கலர் எப்போதும் சற்று மேம்பட்டதாக இருக்கும் ஆனால் இந்த ஸ்மார்ட்போனை பொறுத்தவரை பிளாக் கலர் ரிச் லுக் உடன் இருக்கிறது.

இப்போதே வாங்கலாமா?

இப்போதே வாங்கலாமா?

அம்சங்களின் தொகுப்பே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பயன்படுத்த எப்படி இருக்கு என்ற ரிவ்யூ விரைவில் எதிர்பார்க்கலாம். இதெல்லாம் நல்லாதான் இருக்கு இந்த ஸ்மார்ட்போனே வாங்கலாம் என நீங்கள் முடிவெடுத்தால் ஜூலை 21 வரை காத்திருக்க வேண்டாம். ஆம், இந்த ஸ்மார்ட்போனின் ஓபன் விற்பனை ஜூலை 21 முதல் தொடங்கப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) is it Worth to Buy?- Nothing Specs Secrets

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X