Just In
- 12 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 16 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 16 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 18 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Nothing Phone (1) மற்றும் Google Pixel 6a மீது மாபெரும் தள்ளுபடி.! பிரீமியம் போன் வாங்க நல்ல சான்ஸ்!
பண்டிகை காலம் நெருங்கிவிட்டது, இப்போதே Flipkart மற்றும் Amazon போன்ற நிறுவனங்கள் அதன் சிறப்பு விற்பனை குறித்த அறிவிப்புகளை வெளியிடத் துவங்கியுள்ளன. இந்த சிறப்பு விற்பனையின் போது இரண்டு நிறுவனங்களும் எண்ணில் அடங்காத பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்கும் என்பதனால் மக்கள் இந்த சிறப்பு விற்பனைகள் துவங்கக் காத்திருக்கின்றனர். குறிப்பாக இந்த முறை Flipkart Big Billion Days Sale விற்பனையில் அதிக தள்ளுபடி எதிர்பார்க்கப்படுகிறது.

பிரீமியம் ஸ்மார்ட்போன் சாதனம் மீது பெரும் தள்ளுபடி
Flipkart Big Billion Days விற்பனை தொடர்பான சில தகவல்கள் மற்றும் சலுகை விபரங்களை நிறுவனம் இப்போது டீஸ் செய்யத் துவங்கியுள்ளது. வரவிருக்கும் பிளிப்கார்ட் விற்பனை செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கும், அங்கு வாடிக்கையாளர்கள் பல்வேறு ஸ்மார்ட்போன் சாதனம் மீது பெரும் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. Flipkart Big Billion Days விற்பனையின் போது மாபெரும் தள்ளுபடி கிடைக்கும் பட்டியலில் பிரீமியம் போன்களும் இடம் பெற்றுள்ளது.

Nothing Phone (1) மற்றும் Google Pixel 6a மீது நம்ப முடியாத சலுகையா?
இந்த மாபெரும் தள்ளுபடி கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் நத்திங் ஃபோன் (1) (Nothing Phone (1)) டிவைஸும் இம்முறை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2022 ஆம் ஆண்டில் அதிகம் ஈர்க்கப்பட்டு, அதிகம் பேசப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் மாடல் இதுவாகும். பிளிப்கார்ட் விற்பனையின் போது இந்தியாவில் நத்திங் ஃபோன் (1) விலை ரூ.30,000-க்கும் குறைவாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. மாபெரும் தள்ளுபடி உடன் கிடைக்கும் மற்றொரு சாதனம் புதிய Google Pixel 6a ஆகும் .

அடேங்கப்பா.! Nothing Phone (1) விலை இவ்வளவு குறைகிறதா?
இந்த இரண்டு பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் சலுகை விலை ஏற்கனவே பிளிப்கார்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது. Flipkart Big Billion Days விற்பனையின் போது Nothing Phone (1) விலை அதிகமாக குறையும். சமீபத்தில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் விலை உயர்வைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Glyph இடைமுகத்துடன் 900-க்கும் மேற்பட்ட LED விளக்குகளுடன் வரும் நத்திங்கின் முதல் ஸ்மார்ட்போன் Flipkart விற்பனையின் போது ரூ.28,999 என்ற விலையில் கிடைக்கும்.

Nothing Phone (1) விலை என்ன?
இந்த விலையானது வங்கிச் சலுகைகள் மற்றும் பிற தள்ளுபடிகளை உள்ளடக்கியது என்பதை மறக்காதீர்கள். இந்த போன் இந்தியாவில் ரூ.32,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களில், நிறுவனம் அதன் விலையை ரூ.1,000 உயர்த்தியது என்பதையும் நாம் மறக்க முடியாது. தற்போது, Nothing Phone (1) சாதனத்தின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.33,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இது பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனையின் போது அதிக தள்ளுபடியைப் பெறுகிறது.

Google Pixel 6a மீது கிடைக்கும் தள்ளுபடி எவ்வளவு?
இதேபோல், சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 6a (Google Pixel 6a) சாதனம் கூட அதிக தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் பட்டியல் தகவல் குறிப்பிடுகிறது. இந்த Google Pixel 6a சாதனம் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை இந்தியாவில் ரூ.43,999 என்று அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்ட் விற்பனையின் போது இது ரூ.27,699 என்ற விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரீமியம் ஸ்மார்ட்போன்களை கிடைக்க அரிய வாய்ப்பு
இந்த சலுகை விலையில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும் மற்ற சலுகைகளும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் பிரீமியம் மாடல்களாக வருகிறது. உங்களுக்கும் ஒரு புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் சாதனம் வேண்டும் என்றால் இந்த சிறப்பு விற்பனையைத் தவறவிடாதீர்கள். பட்ஜெட் விலையில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை கிடைக்கும் அரிய வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470