Nothing Phone 1 இந்தியாவில் Reliance டிஜிட்டல் வழியாக விற்பனையா? இது சீன போனா? உண்மை இதோ!

|

உலக ஸ்மார்ட் போன் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திழுத்த ஒரு புதிய ஸ்மார்ட் போன் மாடல் என்றால், அது நத்திங் போன் என்ற இந்த Nothing Phone (1) மாடலையே சேரும். இந்த புதிய Nothing Phone (1) அறிமுகமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், இந்த சாதனத்தைப் பற்றிய தகவல்கள் இணையம் முழுக்க பரவியுள்ளது. இப்போது, இந்திய ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

Nothing Phone 1 இந்தியாவில் ஆஃப்லைன் வழியாகவும் கிடைக்குமா?

Nothing Phone 1 இந்தியாவில் ஆஃப்லைன் வழியாகவும் கிடைக்குமா?

முதலில் இந்த அட்டகாசமான புதிய Nothing Phone (1) டிவைஸ் இந்தியாவில் ஆன்லைன் வழியாக மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் இன்வைட் லிங்க் கிடைப்பவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்பது போன்ற செய்திகளும் வெளியானது. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு புதிய தகவல், Nothing Phone 1 இந்தியாவில் ரிலையன்ஸ் உடன் கூட்டு சேர்ந்து ஆஃப்லைன் வழியாகவும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது இந்த நத்திங் போன் (1) டிவைஸ் வாங்க கிடைக்கும்?

எப்போது இந்த நத்திங் போன் (1) டிவைஸ் வாங்க கிடைக்கும்?

நத்திங் போன் (1) வரும் ஜூலை 12 ஆம் தேதி ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த போன் Flipkart வழியாகப் பிரத்தியேகமாக ஆன்லைனில் invite-only system மூலம் மட்டும் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால், அதிக எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தது போல் கருதினார்கள். ஆனால், அவர்களை குஷிப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான ​​​​ஒரு புதிய செய்தி, Nothing Phone 1 ஆஃப்லைன் வழியிலும் வாங்கக் கிடைக்கும் என்று கூறியுள்ளது.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

Nothing நிறுவனம் ரிலையன்ஸ் டிஜிட்டல் உடன் கூட்டா?

Nothing நிறுவனம் ரிலையன்ஸ் டிஜிட்டல் உடன் கூட்டா?

Nothing Phone (1) இந்தியாவில் ரிலையன்ஸ் உடன் கூட்டு சேர்ந்து, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் வழியாக ஆப்லைனிலும் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிரபல டிப்ஸ்டரான யோகேஷ் ப்ரார் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆஃப்லைன் சந்தையில் நத்திங் ஃபோன் (1) விற்பனைக்காக ரிலையன்ஸ் டிஜிட்டலுடன் Nothing நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தான் Nothing Phone 1 தயாரிக்கப்படுகிறதா?

தமிழ்நாட்டில் தான் Nothing Phone 1 தயாரிக்கப்படுகிறதா?

இதன்படி, இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த புதிய Nothing ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியாக விற்பனை செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். இந்தியாவில் விற்கப்படும் Nothing Phone 1 யூனிட்கள் தமிழ்நாட்டில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது என்பதை நிறுவனம் சமீபத்தில் உறுதி செய்தது. இந்தியாவில் இந்த சாதனத்தை விற்கும் போது இறக்குமதிச் செலவுகளைச் சேமிக்க இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பெற்றோர் போனில் ஆபாச தகவல்.. வீட்டிற்குள் 'கேமரா' வைத்து தொடர்ந்து மிரட்டல்.. 13 வயது மகன் தான் காரணமா?பெற்றோர் போனில் ஆபாச தகவல்.. வீட்டிற்குள் 'கேமரா' வைத்து தொடர்ந்து மிரட்டல்.. 13 வயது மகன் தான் காரணமா?

Nothing Phone (1) என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

Nothing Phone (1) என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

இதனால், இந்திய ஸ்மார்ட் போன் ரசிகர்களுக்கு இந்த புதிய Nothing Phone (1) டிவைஸ் நியாயமான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த புதிய Nothing Phone (1) போனின் விலை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட, இந்த புதிய ஸ்மார்ட் போன் ரூ. 24,999 முதல் ரூ. 30,000 என்ற விலைக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி இது அறிமுகம் செய்யப்படுகிறது.

Nothing Phone 1 சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தைச் சேர்ந்ததா?

Nothing Phone 1 சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தைச் சேர்ந்ததா?

Nothing Phone (1) சாதனத்தை வாங்குவதற்கு இந்தியாவில் பலருக்கு ஆசை இருந்தாலும், அவர்களின் மனதிற்குள் ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளது. முதல் சந்தேகம் இது சீன ஸ்மார்ட் போன் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சாதனமா என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். உண்மையில், இந்த Nothing Phone (1) சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்குச் சொந்தமானது இல்லை. இது லண்டனைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் சொந்தமானது.

53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?

Nothing Phone (1) சாதனம் OnePlus நிறுவனத்துடன் தொடர்புடையதா?

Nothing Phone (1) சாதனம் OnePlus நிறுவனத்துடன் தொடர்புடையதா?

அடுத்து பொதுவாக அனைவரிடமும் எழுந்த மற்றொரு சந்தேகம், Nothing Phone (1) சாதனம் ஒன்பிளஸ் நிறுவனத்துடன் தொடர்புடையதா என்பது தான். என்ன காரணத்திற்காக இந்த கேள்வி எழுப்பப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், பதில் இது தான். Nothing Phone (1) டிவைஸிற்கும் ஒன்பிளஸ் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், Nothing நிறுவனத்தின் நிறுவனரான Carl Pei இதற்கு முன் OnePlus நிறுவனத்தின் இணை நிறுவனராக 2020 வரை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Nothing போன் சாதனத்தை வாங்கலாமா? வேண்டாமா?

புதிய Nothing போன் சாதனத்தை வாங்கலாமா? வேண்டாமா?

இதைத் தவிர ஒன்பிளஸ் நிறுவனத்துடன் எந்தவொரு தொடர்பும் Nothing நிறுவனத்திற்கு கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. சரி, இந்த புதிய Nothing போன் சாதனத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலும் சிலர் உள்ளனர். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Nothing Phone (1) இன் சிறப்பம்சங்களைப் பார்த்துவிட்டு உங்கள் முடிவை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். Nothing Phone (1) வெளியான பிறகு அதன் தரம் பற்றி அப்டேட் செய்கிறோம்.

Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?

Nothing Phone (1) ஆண்ட்ராய்டு சாதனமா?

Nothing Phone (1) ஆண்ட்ராய்டு சாதனமா?

நமக்குத் தெரிந்த தகவலின் படி, இந்த புதிய Nothing Phone (1) ஆண்ட்ராய்டு v12 அடிப்படையிலான Nothing OS கொண்டு இயங்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதிய நத்திங் போன் 1 ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட் உடன் Octa Core, 2.5 GHz இல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை இந்த டிவைஸ் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

Nothing Phone 1 டிஸ்பிளே மற்றும் காயமர விபரம்

Nothing Phone 1 டிஸ்பிளே மற்றும் காயமர விபரம்

இதன் டிஸ்பிளே 6.55' இன்ச் அளவு கொண்ட 1080 x 2400 பிக்சல் உடைய 120 Hz ரெட் கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கேமரா செட்டப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilisation - OIS) உடன் 50 MP + 12 MP டூயல் ரியர் கேமரா மற்றும் 8 MP கொண்ட செல்பி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இது 4,500mAh பேட்டரி உடன் Dual Sim, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi, NFC இணைப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) could partner with Reliance Digital for offline sales in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X