பில்ட்-அப்பை பூர்த்தி செய்யுமா Nothing Phone 1: CEO சொன்ன முக்கிய விஷயம்!

|

Nothing Phone 1 ஸ்மார்ட்போனானது வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான முக்கிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம்

ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம்

கடந்த சில நாட்களாகவே பெரும் பேசு பொருளாக Nothing Phone 1 இருந்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் இதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. Nothing Phone 1 சாதனம் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதுகுறித்த விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

புதிய தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கிய ஒன்பிளஸ் இணை நிறுவனர்

புதிய தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கிய ஒன்பிளஸ் இணை நிறுவனர்

ஒன்பிளஸ் இணை நிறுவனர் கார்ல் பெய், கடந்த ஆண்டு நத்திங்கை ஒரு புதிய தொழில்நுட்ப நிறுவனமாக அறிமுகம் செய்தார். இந்த நிறுவனத்தில் இருந்து வெளியான முதல் சாதனம் நத்திங் இயர் 1 என்ற வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஆகும். தற்போது நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப் உடன் வருவது உறுதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப் உடன் வருவது உறுதி

Nothing Phone 1 ஆனது தனிப்பயன்-டியூன் செய்யப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 12 அறிமுகமாகும் நிலையில் இந்த சாதனத்தின் முன்கூட்டிய ஆர்டர்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு விட்டது. சந்தையில் தன்னை வேறுபடுத்தி காட்டும் விதமாக Nothing Phone 1 பின்புறம் வேறுபட்ட வகையில் இருக்கும் என்பது அதிகாரப்பூர்வ புகைப்படத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான LED வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு

சமீபத்திய அறிக்கையின் படி, நத்திங் போன் 1 ஆனது ஸ்னாப்டிராகன் 778G+ SoC உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சிப் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இது மேம்படுத்தப்பட்ட ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது இந்த சிப் குவால்காம் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

nothing CEO கார்ல் பெய் சொன்ன முக்கிய விஷயம்

உயர்நிலை ஸ்மார்ட்போன் என்று குறிப்பிடப்பட்ட இதில், ஏன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் போன்ற சமீபத்திய சிப் பயன்படுத்தப்படவில்லை என nothing CEO கார்ல் பெய் பதிலளித்தார். அதில், performance (செயல்திறன்), power consumption (மின் நுகர்வு), மற்றும் cost(விலை) ஆகியவை சமநிலைப்படுத்தவே இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

நத்திங் போன் 1 விலை என்ன தெரியுமா?

நத்திங் போன் 1 விலை என்ன தெரியுமா?

நத்திங் போன் 1 விலை குறித்த சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் $500 (தோராயமாக ரூ.39,500) ஆக இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 778G+ SoC ஆனது மேம்பட்ட அம்சங்களோடு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்படும் என கூறப்படுகிறது. அதேபோல் நத்திங் போன் 1 ஆனது பிளாக் மற்றும் வைட் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் இரட்டை பின்புற கேமராக்கள் இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி முன்பதிவு செய்வது?

எப்படி முன்பதிவு செய்வது?

நத்திங் போன் 1-க்கான இன்வைட்-ஒன்லி ப்ரீ-ஆர்டருக்கான பப்ளிக் வெயிட்லிஸ்ட்-ஐ திறந்துள்ளது. இதன்படி நத்திங் பிரத்யேக ப்ரீ ஆர்டர் பாஸை பெறும் வாடிக்கையாளர்கள், சாதனம் அறிமுகமான சிறிது நேரத்தில் இதை வாங்குவதற்கான ஸ்லைட்டை பெறலாம். நத்திங் போன் 1-க்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இணையலாம்.

ஆண்ட்ராய்டு v12 அடிப்படையிலான Nothing OS

ஆண்ட்ராய்டு v12 அடிப்படையிலான Nothing OS

Nothing Phone (1) ஆண்ட்ராய்டு v12 அடிப்படையிலான Nothing OS கொண்டு இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் Nothing Phone 1 யூனிட்கள் தமிழ்நாட்டில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது என்பதை நிறுவனம் சமீபத்தில் உறுதி செய்தது. இந்தியாவில் இந்த சாதனத்தை விற்கும் போது இறக்குமதிச் செலவுகளைச் சேமிக்க இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 1 Confirmed to Come With Snapdragon 778G+ SoC- CEO Carl Pei Tweet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X