Nothing Phone 1 பர்ஸ்ட் லுக் வெளியானதுக்கே இவ்ளோ சலசலப்புகளா! அசத்துமா? சொதப்புமா?

|

ஒன்பிளஸ் நிறுவனத்தை குறிப்பிடாமல் நத்திங் (Nothing) நிறுவனத்தை பற்றி பேசவே முடியாது. ஏனெனில் - உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம் - ஒன்பிளஸ் நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனர் ஆன கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான ஒரு பிராண்ட் தான் - நத்திங். விஷயம் அது மட்டுமல்ல!

பெயரும் புதுசு.. களமிறக்கும் மேட்டரும் புதுசு!

பெயரும் புதுசு.. களமிறக்கும் மேட்டரும் புதுசு!

நம்மில் சிலருக்கு 'நத்திங்' என்பது முற்றிலும் புதியதொரு பெயராக அல்லது பிராண்ட் ஆக தெரியலாம்; அதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் கடந்த 2014 ஆம் ஆண்டில், ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவிற்குள் எப்படி காலடி எடுத்து வைத்தது என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது தானே?

ஆனால் இன்றைய தேதிக்கு ஆப்பிள் ஐபோன்களுக்கு அடுத்தபடியாக, ஒரு கௌரவ குறியீடாக பார்க்கப்படுவது - ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தான்! இதே நிலைப்பாட்டை நத்திங் நிறுவனம் எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒன்பிளஸ் இல்ல.. அதுக்கும் மேல!

ஒன்பிளஸ் இல்ல.. அதுக்கும் மேல!

ஏனெனில், நத்திங் முற்றிலும் வித்தியாசமான ஒரு நிறுவனமாகும். அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான - நத்திங் இயர் (1) ஆகும்.

ஆரம்பத்தில் நகைப்புக்கு உள்ளானாலும் கூட, புதுமைகளை விரும்பும், தனித்துவத்தை விரும்பும் பலரும் நத்திங் இயர் 1 இயர்பட்ஸ்களை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டனர். அந்த வரிசையில், கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ள நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனும் இணையும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

சலசலுப்புகளை ஏற்படுத்தி உள்ள 'டீஸ்ர்' போட்டோ!

சலசலுப்புகளை ஏற்படுத்தி உள்ள 'டீஸ்ர்' போட்டோ!

அறியாதோர்களுக்கு, நத்திங் போன் (1) ஆனது வருகிற ஜூலை மாதம் 12 ஆம் தேதி, உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகத்திற்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலைப்பாட்டில், வரவிருக்கும் நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர் போட்டோ ஒன்று வெளியாகி, நத்திங் பிரியர்களின் மத்தியில் "சலசலப்புகளை" கிளப்பி உள்ளது.

ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, நத்திங் இயர் (1) டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸை போலவே ஒரு 'டிரான்ஸ்ப்ரென்ட்' வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வெளியான டீஸரில் அப்படி எதையுமே பார்க்க முடியவில்லை.

HTC Metaverse ஸ்மார்ட்போன்: தரமான கம்பேக் கொடுக்குமா? அல்லது மீண்டும் பல்பு வாங்குமா?HTC Metaverse ஸ்மார்ட்போன்: தரமான கம்பேக் கொடுக்குமா? அல்லது மீண்டும் பல்பு வாங்குமா?

என்ன என்னவோ எதிர்பார்த்தோம்; ஆனா இப்படி பண்ணிட்டாங்களே!

என்ன என்னவோ எதிர்பார்த்தோம்; ஆனா இப்படி பண்ணிட்டாங்களே!

வெளியான டீஸர் போட்டோவின் வழியாக, நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் பேக் பேனலை தெளிவாக பார்க்க முடிகிறது; அதாவது 'டிரான்ஸ்ப்ரென்ட் டிசைன்' என்று எதுவும் இல்லை. இருப்பினும் இது நிறுவனத்தின் பிரீமியம் ஃபிளாக்ஷிப் டிவைஸ் ஆக இருக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது.

பேக் பேனலில் எல்இடி ஃபிளாஷ் உடன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை பார்க்க முடிகிறது. உடன் நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் திடமான ஒயிட் பினிஷ் இருப்பதையும் பார்க்க முடிகிறது. பரபரப்பாக பேசப்படும் டீஸர் போட்டோ ஒருபக்கம் இருக்க, நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் 'சைலன்ட்' ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியாக்களில் பறக்கும் ப்ரோமோஷன்கள்!

சோஷியல் மீடியாக்களில் பறக்கும் ப்ரோமோஷன்கள்!

ஆம்! இந்திய அறிமுகத்திற்காக இந்த ஸ்மார்ட்போன் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (பிஐஎஸ்) சான்றிதழை பெற்றுவிட்டது. இதற்கிடையில் தான், நத்திங் நிறுவனம், நத்திங் ஃபோன் (1) ஸ்மார்ட்போனின் டிசைன் எப்படி இருக்கும் என்பது குறித்த டீஸர் போட்டோவை தன் சோஷியல் மீடியா சேனல்களின் வழியாக பகிர்ந்துள்ளது.

அதில் ஒயிட் பினிஷ் பேக் பேனல், டூயல் கேமரா செட்டப்பை தவிர்த்து பேக் பேனலின் கீழ் இடது மூலையில் நத்திங் நிறுவனத்தின் பிராண்டிங் லோகோவையும் பார்க்க முடிகிறது. வால்யூம் ராக்கர்ஸ் ஆனது ஸ்மார்ட்போனின் வலது பக்கத்திலும், அதே சமயம் பவர் பட்டன் ஆனது இடது பக்கத்திலும் உள்ளது. இருப்பினும் அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் (1) பற்றிய லீக்ஸ் தகவல்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன.

இதுவரை வெளியான லீக்ஸ் தகவல்கள் என்ன சொல்கின்றன?

இதுவரை வெளியான லீக்ஸ் தகவல்கள் என்ன சொல்கின்றன?

நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மா (@stufflistings) பிஐஎஸ் சான்றிதழை பெற்றதாக கூறப்படும் நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் சில ஸ்கிரீன்ஷாட்களை ட்வீட் செய்துள்ளார்.

அதன்படி, குறிப்பிட்ட மாடல் ஆனது, டூயல் ரியர் கேமராக்களை பேக் செய்யும் என்றும், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது என்எப்சி ஆதரவுடன் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிமுகம் நடக்கும் வரை மட்டுமே லீக்ஸ் தகவலுக்கு மதிப்பு!

எப்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும்?

எப்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும்?

வருகிற ஜூலை 12ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு லண்டனில் நடைபெறும் ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட் ('Return to Instinct) என்கிற விர்ச்சுவல் ஈவென்ட்டில், நத்திங் போன் (1) அறிமுகமாகும். இந்த வெளியீட்டு நிகழ்வானது நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும்.

இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை வழங்கும்? இது என்ன விலை நிர்ணயத்தின் கீழ் வெளியாகும்? என்பது குறித்த எந்த தகவலையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

முன்னதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், இது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஎஸ்-ஐ (Nothing OS) கொண்டு இயங்கும் மற்றும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்பது போல் தெரிகிறது. மேலும் இது இந்தியாவில், பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Former OnePlus founder Carl Pei officially teased the back panel design of the upcoming Nothing Phone 1 ahead of July 12 global launch. the company already confirmed the Indian Launch too. Check expected specifications here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X