Home
News

சத்தமின்றி ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ்-க்கு தள்ளுபடி அறிவித்த Nothing.! உடனே முந்துங்கள்.!

காதலர் தினத்தை பல்வேறு நிறுவனங்கள் தங்களது சாதனங்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பிரபலமான
நத்திங் நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்குத் தள்ளுபடி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது அறிமுகம்?

நத்திங் போன் (1) மாடல் ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

சத்தமின்றி ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ்-க்கு தள்ளுபடி அறிவித்த Nothing.!

குறிப்பாக நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஆனது பிரத்யேக டுவிஸ்டிங் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. பின்பு நத்திங் போன் (1) மாடல் ஆனது டிரான்பேரண்ட் டிசைன் மற்றும் எல்இடி ஸ்ட்ரிப்களை கொண்டிருக்கிறது.

எவ்வளவு தள்ளுபடி?

அதேபோல் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஆனது முன்பு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடியின் மூலம் இந்த சாதனத்தை ரூ.6,999-விலையில் வாங்க முடியும். பின்பு நத்திங் போன் (1) மாடலுக்கு தற்போது ரூ.5000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த
ஸ்மார்ட்போனை ரூ.26,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சிறப்புத் தள்ளுபடி வரும் பிப்ரவரி 13-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.

சத்தமின்றி ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ்-க்கு தள்ளுபடி அறிவித்த Nothing.!

நத்திங் போன் (1) அம்சங்கள்

நத்திங் போன் (1) ஆனது 6.5 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது.

மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 778G+ SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. நத்திங் போன் 1 ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் நான்கு வருடப் பாதுகாப்பு புதிப்புப்புகளை பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தமின்றி ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ்-க்கு தள்ளுபடி அறிவித்த Nothing.!

டூயல் கேமராக்கள் என்றாலும் தரமான கேமரா சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. Nothing Phone (1) இல் சோனி IMX766 சென்சார் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி சோனி IMX766 கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என டூயல் கேமரா வசதி இருக்கிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி ஆதரவுக்கு என 16 எம்பி சோனி IMX471 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

Nothing Phone (1) இல் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 33W USB PD ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளது. அதேபோல் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.

சத்தமின்றி ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ்-க்கு தள்ளுபடி அறிவித்த Nothing.!

4K ரெசல்யூஷன் வரை வீடியோ பதிவு செய்யும் திறன், வீடியோ ரெக்கார்ட் செய்யும்போது ரெக்கார்டிங் ஆன் செய்யப்பட்டதை அறிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ரெட் எல்இடி லைட் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வெளியான தகவலின்படி ஸ்மார்ட்போனில் மேம்பட்ட இமேஜ் க்வாலிட்டியை பெற முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) and Ear (Stick) models are given a special Valentine's Day discount: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X