Carl Pei நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? Nothing போனில் இப்படியொரு தந்திரமா? புதிய அம்சத்தால் சர்ச்சை..
நத்திங் (Nothing) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக ஒரு புதிய தந்திரமான அம்சத்தை வெளியிட்டுள்ளது. மற்ற எந்த போனிலும் பயன்படுத்த கிடைக்காதா அம்சத்தை நத்திங் நிறுவனம் இப்போது அதன் போன்களில் வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Nothing: பொதுவாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள், அவர்கள் போனில் உரையாடும் வாய்ஸ் கால்களை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கும் அம்சத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இது கூகுள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எல்லா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த கிடைக்கும் ஒரு பொதுவான அம்சமாகும்.

டிஸ்க்ரீட் வாய்ஸ் கால் ரெக்கார்டிங் (discreet voice call recording):
ஆனால், நத்திங் போன் பயனர்கள் கேட்டு கொண்ட விருப்பத்தின் பெயரில், இப்போது நத்திங் பிராண்ட் மறைமுகமாக வாய்ஸ் கால்களை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆம், நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள டிஸ்க்ரீட் வாய்ஸ் கால் ரெக்கார்டிங் (discreet voice call recording) மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
எதிர்முனையில், பேசிக்கொண்டிருக்கும் நபருக்கு வாய்ஸ் கால் ரெக்கார்ட் செய்யப்படுகிறது என்ற விருப்பத்தை தெரியப்படுத்தாமல், இந்த அம்சம் மறைமுகமாகவும், நாசுக்காகவும் வாய்ஸ் கால் தகவல்களை ரெக்கார்ட் செய்கிறது. இது இப்போது நத்திங் பிராண்ட் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விட்ஜெட் (widget) மூலம் அணுக கிடைக்கிறது.
கார்ல் பெய் (Carl Pei): நத்திங் நிறுவனத்தின் CEO கார்ல் பெய் (Carl Pei) வெளியிட்டுள்ள தகவலின் படி, இப்போது இந்த புதிய கால் ரெக்கார்டிங் அம்சம் நிறுவனத்திடம் இருந்து விற்பனைக்கு வந்த எல்லா நத்திங் போன் வரிசைக்கும் கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக கார்ல் பெய் அவருடைய எக்ஸ் (X) பக்கம் வழியாக புதிய ட்வீட்டை வெளியியிட்டிருக்கிறார்.
இதில் புதிய டிஸ்க்ரீட் வாய்ஸ் கால் ரெக்கார்ட் அம்சம் இப்போது நத்திங் போன் 1 - Nothing Phone (1) , நத்திங் போன் 2 - Nothing Phone (2) மற்றும் நத்திங் போன் 2a - Nothing Phone (2a) ஆகிய மாடல்களில் பயன்படுத்த கிடைக்கும் என்று கூறியுள்ளார். இந்த புதிய அம்சத்தை நத்திங் போன் பயனர்கள் புதிய விட்ஜெட் மூலம் அணுகலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கார்ல் பெய் வெளியிட்டுள்ள தகவலின் படி, நத்திங் போன் பயனர்களால் நீண்ட காலமாக இந்த அம்சம் வேண்டுமென்று கேட்டுக்கொண்ட வேண்டுகோளின் பெயரில் வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை தவறான நோக்கத்திற்காகவும், தவறான எண்ணங்களுக்காகவும் பயன்படுத்த வேண்டாம் என்று நத்திங் பிராண்டின் தலைவர் கார்ல் பெய் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்: இப்போது வரை, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் ஒரு வாய்ஸ் கால் தகவலை ரெக்கார்ட் செய்ய வேண்டுமென்றால், கூகிள் டைலர் பேட் இல் உள்ள ரெக்கார்டிங் அம்சத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அம்சம் வாய்ஸ் கால் ரெக்கார்ட் செய்யும் பொழுது, அழைப்பில் உள்ள நபர்களுக்கு இந்த கால் ரெக்கார்டிங் செய்யப்படுகிறது என்ற தகவலை தெரியப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய நத்திங் டிஸ்க்ரீட் வாய்ஸ் கால் ரெக்கார்ட் அம்சம் அழைப்பில் உள்ளவர்க ளுக்கு கால் ரெக்கார்ட் செய்யப்படுகிறது என்ற எந்தவொரு தகவலை தெரிவிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலாக, இந்த அம்சம் வாய்ஸ் கால் தகவலை சைலெண்டாகவும், தந்திரமாகவும் ரெக்கார்ட் செய்கிறது. இந்த புதிய மறைமுக ரெக்கார்ட் அம்சத்தை சர்ச்சை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








