எங்க தாவுறது.. நானே தவழ்ந்துட்டு இருக்கேன்.. Nothing போனில் திடீர் சிக்கல்.. உடனே நிறுத்த சொல்லி உத்தரவு!
ரூ.40,000-னு சொன்னாலே தெறிச்சு ஓடுவாங்க.. நாம வேற ரூ.80000 க்கு நத்திங் போன் 3 மாடலை அறிமுகம் செஞ்சி வச்சி இருக்கோம் - இதை எப்படி விற்று தீர்ப்பது என்று புரியாமல் தவித்து கொண்டிருக்கும் நத்திங் நிறுவனத்திற்கு இன்னொரு சோதனை வந்துள்ளது.
கார்ல் பெய் தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனமானது, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஃபார்ம்வேர் ஆன அதன் லேட்டஸ்ட் நத்திங் ஓஎஸ் 4.0 அப்பேட்டை 2025 நவம்பரில் வெளியிடுவதாக அறிவித்து இருந்தது. சொன்னப்படியே குறிப்பிட்ட அப்டேட்டை ரிலீஸ் செய்திருந்தது, சில நத்திங் ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பிட்ட அப்டேட்டும் கிடைக்கவும் தொடங்கியது.

இப்போது திடீரென நத்திங் நிறுவனம் ஒரு சிக்கலை எதிர்கொண்டதாகவும், அதன் விளைவாக "அவசர தீர்வை" (Urgent fix) செயல்படுத்த நத்திங் ஓஎஸ் 4.0 ரிலீஸை இடைநிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நத்திங் ஓஎஸ் 4.0 அப்பேட்டை பெற்ற பயனர்கள், குறிப்பிட்ட புதிய அப்டேட் வெளியிடப்பட்டவுடன் பேட்ச் செய்யப்பட்ட வெர்ஷனை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இந்த அப்டேட் பல்வேறு டிவைஸ்களில் கிடைப்பது பற்றிய பொதுவான செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் இப்போது கஸ்டமர் சப்போர்ட்டில் இதன் வெளியீடு "தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சிக்கலுக்கு பின்னால் என்ன காரணம் உள்ளது என்பதை நத்திங் நிறுவனம் வெளியிடவில்லை.
ஆனால் ரெடிட் (Reddit) உள்ள ஒரு பயனர், நாட்டின் ஓஎஸ் 4.0-வை இன்ஸ்டால் செய்த பிறகு தன்னுடைய நத்திங் போன் 2 (Nothing Phone 2) மாடலானது பல சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளார். குறிப்பிட்ட பயனர், ஸ்டேட்டஸ் பார், கூகுள் ஜெமினி, செட்டிங்ஸ் ஆகியவைகளில் சிக்கல்களை சந்தித்துள்ளார்.
இது தான் நத்திங் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான அப்டேட்டை உடனே நிறுத்தியதற்கான காரணமாக இருக்கலாம் ன்று ஊகிக்கப்படுகிறது. எல்லாம் சரிசெய்யப்பட்ட பின்னர் - திருத்தப்பட்ட வெர்ஷன் அவசர சோதனையை முடித்த பின்னர் மீண்டும் ரிலீஸ் ஆக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 3 மீது ரூ.30,000 விலை குறைப்பு: நத்திங் ஓஎஸ் ரிலீஸில் உள்ள சிக்கல்கள் ஒருபக்கம் இருக்க, பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது பை பை 2025 சேல் (Flipkart Buy Buy 2025 Sale) என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் நத்திங் போன் 3 உட்பட பல மாடல்கள் மீது பலே டிஸ்கவுண்ட்களை அறிவித்துள்ளது.
இந்த விற்பனையின் போது நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் ரூ.49,999 என்கிற தொடக்க விலையில் கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இது ரூ.79,999 க்கு அறிமுகமானது; (ரூ.30000 விலை குறைப்பு). இதேபோல் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) ஸ்மார்ட்போனானது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.21,999 முதல் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,999 க்கு விற்கப்படும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.27,999 ஆகும். சிஎம்எப் பிராண்டட் ஸ்மார்ட்போன்களின் மீதான ஆபர்களை பொறுத்தவரை சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro)ஸ்மார்ட்போனானது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.17,499 என்கிற தொடக்க விலையில் வாங்க கிடைக்கும்.
சிஎம்எப் ஸ்மார்ட்போன்களை தவிர, சிஎம்எப் ஆடியோ மற்றும் வியரிப்பிள்ஸ் மீதும் ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிஎம்எப் பட்ஸ் 2ஏ (CMF Buds 2a) ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்ஸ் ஆனது ரூ.1,899 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.2,199 ஆகும். இதேபோல சிஎம்எப் பட்ஸ் 2 (CMF Buds 2) மாடல் ஆனது அதன் அறிமுக விலை ஆன ரூ. 2,699 க்கு பதிலாக ரூ.2,399 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








