Home
News

உலகின் முதல் Nothing ஸ்டோர் இந்தியாவில் திறக்கப்பட்டதா? அதிரடியாய் இந்தியாவிற்குள் நுழைந்த நத்திங்..

நத்திங் (nothing) நிறுவனம் அதன் முதல் ஸ்டோரை அதிரடியாக இந்தியாவில் அறிமுகம் செய்து திறந்துள்ளது. ஒன்பிளஸ், சாம்சங், சியோமி போன்ற நிறுவனங்களின் கடைகளுக்கு போட்டியாக நத்திங் நிறுவனமும் அதன் முதல் அதிகாரப்பூர்வ ஷோரூமை இந்தியாவில் திறந்துள்ளது. இது எந்த ஏரியாவில் திறக்கப்பட்டுள்ளது?

ஒன்பிளஸ் இணை நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei) தலைமையில் திறக்கப்பட நத்திங் (Nothing) பிராண்ட் UK தொழில்நுட்ப நிறுவனமாக தொடக்கமானது. இப்போது, இந்த நிறுவனத்தின் முதல் பிரத்தியேக சேவை மையத்தை நிறுவனம் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. இது உலகின் முதல் நத்திங் கஸ்டமர் சர்வீஸ் சென்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் Nothing ஸ்டோர் இந்தியாவில் திறக்கப்பட்டதா?

இந்த அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தின் சிறப்பே, இங்கு நீங்கள் உங்கள் சாதனைகளை வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் பழுதுபார்த்துக்கொள்ளலாம் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாத்தியத்தை நத்திங் இப்போது உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரத்தியேக சேவை மையம் முதல் கட்டமாக பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டோரை தவிர, நத்திங் நிறுவனம் இன்னும் பல சர்வீஸ் சென்டர் ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல், வரும் மாதங்களில் நிறுவனம் மேலும் 4 ஸ்டோர்களை திறக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் நத்திங் சேவை மையங்களின் எண்ணிக்கை 35 ஆக நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் நத்திங் ஃபோன் 2 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, ஆகஸ்ட் மாதம் தனது முதல் பிரத்யேக சேவை மையத்தைத் திறக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த மையம் இறுதியாக பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இந்திரா நகரில் 100 அடி சாலையில் (டாக்டர் எஸ்.கே. கரீம் கான் சாலை என்றும் அழைக்கப்படும் இடத்தில்) நத்திங் பிரத்யேக சேவை மையத்தை இப்போது நீங்கள் பார்வையிடலாம்.

நிறுவனத்தின் முதல் சேவை மையத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் நத்திங் தயாரிப்புகளுக்கான முன்னுரிமை சேவை மற்றும் ஆதரவைப் பெற முடியும் என்று நத்திங் துணைத் தலைவரும் பொது மேலாளருமான மனு ஷர்மாவை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. UK-ஐ தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இரண்டு மணி நேரத்திற்குள் தயாரிப்புகளை சரிசெய்ய முயற்சிப்பார் அல்லது பயனர்களுக்கு நீண்ட பழுதுபார்க்கும் காலத்திற்கு மாற்று சாதனத்தை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

உலகின் முதல் Nothing ஸ்டோர் இந்தியாவில் திறக்கப்பட்டதா?

வாடிக்கையாளர்கள் பேக்-மேன் போன்ற ஆர்கேட் கேம்களை கடையில் விளையாட முடியும் என்றும் கூறப்படுகிறது. இதற்கென்றே தனி கேமிங் ஏரியாவை நிறுவனம் தனது ஸ்டோரில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கையின்படி, இந்திரா நகரில் உள்ள பிரத்யேக சேவை மையத்தில் - ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில், தொழிலாளர் மற்றும் உதிரிபாகச் செலவுகளுக்கான தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்பிளின் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனைக் கடைகளில் நடத்தப்படும் இலவச அமர்வுகளைப் போலவே, வாடிக்கையாளர்கள் புதிய சேவை மையத்தில் பிரத்யேக அறைகளில் தொழில்நுட்பப் பட்டறைகளில் (technical workshops) கலந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள முதல் சேவை மையத்தைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பையில் நான்கு புதிய சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று நிறுவனம் ஜூலை மாதம் மீண்டும் வெளிப்படுத்தியது.

இந்த பிரத்தியேக சேவை மையங்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு மேலும் 15 சேவை மையங்களைச் சேர்க்கும், மேலும் 2025 ஆம் ஆண்டில் மையங்களின் எண்ணிக்கை 35 ஆக உயரும் என்று அறிக்கை கூறுகிறது. நத்திங் இன் முதல் ஷோரூமை நேரில் சென்று பார்க்க ஆசை இருந்தால், பெங்களூருக்கு ஒரு ட்ரிப்பை போடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Opens First Service Centre in Bengaluru
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X