Home
News

திடீரெனெ பீர் அறிமுகம் செய்த நத்திங் நிறுவனம்.. விலை என்ன? இப்போதே எங்கிருந்து வாங்கலாம்?

ஒரு புதுமையான ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்த நத்திங் (Nothing) நிறுவனம், இப்போது அதன் சொந்த தயாரிப்பான பீர் பணத்தை யுகே (UK) வில் அறிமுகம் செய்துள்ளது. என்னது பீரா? குடிக்கிற பீரா? போதை ஏற்றும் பீரா?

ஆமாங்க.. ஆமாம்.. போதை ஏற்றும் பீரே தான் மக்களே. இதுவரை எந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனமும் கால்பதிக்காத துறையில், நத்திங் நிறுவனம் கால்பதித்துள்ளது. ஏப்ரல் 1, 2022 அன்று, நத்திங் நிறுவனம், கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டதுமே, நிறுவனத்தின் முதல் டிரான்ஸ்பரென்ட் மொபைல் (transparent mobile) சாதனத்தை வெளியிட்டு மக்களை வாய்பிளக்க வைத்தது.

திடீரெனெ பீர் அறிமுகம் செய்த நத்திங் நிறுவனம்.. விலை என்ன?

பல புதுமைகளை தொடர்ந்து அதன் தயாரிப்புகளில் புகுத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிறுவனமான நத்திங் நிறுவனம், இப்போது மற்றொரு எதிர்பார்த்திடாத தயாரிப்பை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. நத்திங் நிறுவனம் அதன் எக்ஸ் (X) என்று பெயர் மாற்றப்பட்ட ட்விட்டர் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்குகளில் புதிய தயாரிப்பை பற்றி டீஸ் செய்துள்ளது.

இந்த டீஸர் படத்தில் நத்திங் லோகோ (nothing logo) போர்க்கிக்கப்பட்ட "பீர் (5.1%)" (Beer 5.1%) என்ற வாசகத்துடன் கூடிய பீர் கேனைக் (nothing beer can) நிறுவனம் காட்டியுள்ளது. முதலில் இந்த டீஸரை பார்த்த மக்கள், இது எதோ நகைச்சுவைக்காக வெளியிடப்பட்ட ஒரு கேளிக்கை போஸ்டர் என்று கருதினர். ஆனால், நிறுவனம் உண்மையிலேயே பீர் கேன்களை தான் வெளியிட்டுள்ளது என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

ஆம், நத்திங் நிறுவனம் அதன் டீசர் படத்தை தொடர்ந்து, UK-வில் நத்திங் நிறுவனத்திற்கு சொந்தமான முதல் பீர் கேன்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நத்திங் பீர் பற்றிய கூடுதல் தகவல்களை நத்திங் வெளியிடவில்லை. இருப்பினும், இது பீர் ஒரு உலர்ந்த, வடிகட்டப்படாத அரிசி லாகர் உடன் சிறிய பின்ச் அளவு பேரிக்காய் கலவையை கொண்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது.

இது ஃப்ரீடைம் பீர் (Freetime beer) நிறுவனத்தால் காய்ச்சப்படுகிறது. இது வேல்ஸில் உள்ள ஸ்வான்சீயில் உள்ள மைக்ரோ ப்ரூவரி ஆகும். இது 5.1% ஏபிவியைக் (ABV) கொண்டுள்ளது. போஸ்டர் வெளியான நேரத்தில் இவை அனைத்தும் ஒரு விரிவான நகைச்சுவையாகத் தோன்றினாலும், இங்கிலாந்தில் இன்று முதல் இந்த பீரை நத்திங் நிறுவனம் அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய துவங்கி, ஒட்டுமொத்த தொழில்நுட்ப சமூகத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

திடீரெனெ பீர் அறிமுகம் செய்த நத்திங் நிறுவனம்.. விலை என்ன?

நத்திங் பீர் (nothing beer) இப்போது நத்திங் இணையதளத்திலும் அதன் சோஹோ (Soho), லண்டன் கடையிலும் (London stores) வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த பீர் கேஸ் 6 கேன்களுடன் வருகிறது. இதன் விலை £20 ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 1,996 மட்டுமே. அமெரிக்க டாலர் (America dollar) மதிப்பில் இதன் விலை சுமார் ~$24 ஆகும். அறிமுகமான முதல் நாளிலேயே இந்த புதிய நத்திங் பீரை மக்கள் போட்டியிட்டு வாங்கி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பீர் (5.1%) ஒரு மிருதுவான, வடிகட்டப்படாத அரிசி லாகர் (unfiltered rice lager) என்று கூறப்படுகிறது. இது ஒரு நுட்பமான மால்ட் (malt) சுயவிவரத்தைக் கொண்டுள்ளது. இது கஸ்பெக் ஹாப்ஸுடன் முழுமையாக சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப ரீதியாக புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது. தற்போது, ​​பிரிட்டனில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த பீர் வாங்க கிடைக்கிறது.

இருப்பினும், வரும் நாட்களில் அதிக பிராந்தியங்களில் இந்த நத்திங் பீர் (5.1%) (nothing beer 5.1%) கிடைக்கச் செய்வதில் நத்திங் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதாக தெரிகிறது. விரைவில் இந்த புதிய நத்திங் பீர் 5.1% பணம் இந்தியாவிலும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எந்த நாட்டில், எந்த ஊர்களில் இந்த நத்திங் பீர் 5.1% கிடைக்கும் என்ற தகவலை அறிந்துகொள்ள பிராண்டின் இணையதளத்தைப் பார்வையிடவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Launched Unexpected Nothing Beer (5.1%) Product In UK Soon To Launch In Other Regions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X