ரூ.68,000.. ரூ.29,000-ஆ.. சார் இன்னைக்கு தெரிஞ்சுடும் உங்க கதை.. Nothing Phone 3, Headphone 1 இன்று அறிமுகம்!
நத்திங் சார்.. இன்னைக்கு தெரிஞ்சுடும் உங்க கதை என்னானு? என்று பலரும் பல்லை கடித்துக்கொண்டு காத்திருக்கும் நாள் வந்துவிட்டது. நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) மற்றும் நத்திங் நிறுவனத்தின் முதல் ஹெட்போன் ஆன நத்திங் ஹெட்போன் 1 (Nothing Heedphone 1) மாடல் இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்யப்பட உள்ளன.
நத்திங் நிறுவனத்தின் இந்த வெளியீட்டு நிகழ்வு சரியாக எதனை மணிக்கு தொடங்கும்? இந்நிகழ்வை நேரலையில் பார்ப்பது எப்படி? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? நத்திங் ஹெட்போன் 1 என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கலாம்? இதோ விவரங்கள்:

ஜூலை 1 நத்திங் லான்ச் ஈவென்ட் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்: இந்நிகழ்வு ஜூலை 1 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கும் அறிமுகப்படுத்தப்படும். 'நத்திங் ஈவென்ட்: கம் டு ப்ளே' (Nothing Event: Come to Play) என பெயரிடப்பட்ட இந்த வெளியீட்டு நிகழ்வானது இங்கிலாந்தின் லண்டனில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும். இந்நிகழ்வு நத்திங் யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நத்திங் ஹெட்ஃபோன் 1-ன் லீக்டு அம்சங்கள்:
- அளவீட்டில் 173.85 x 78 x 189.25 மிமீ அளவையும் 329 கிராம் எடையையும் கொண்டுள்ளது
- வழக்கத்திற்கு மாறாக பெரிய கேரி கேஸ்-ஐயும் (220 x 220 x 52 மிமீ மற்றும் 264 கிராம் எடை) கொண்டுள்ளது.
- 16-ஓம் இம்பெடென்ஸ் மற்றும் நிக்கல் பூச்சுடன் கூடிய பியு டயாபிராம் கொண்ட 40 மிமீ டைனமிக் டிரைவர்கள்
- அடாப்டிவ் பாஸ் என்ஹான்ஸ்மென்ட், ஸ்பாட்டியல் ஆடியோ மற்றும் 8-பேண்ட் கஸ்டம் இக்யூ சிஸ்டம்ஸ்.
- AAC, SBC மற்றும் LDAC ஆதரவு
- ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) ஆதரவு 42dB-ஐ வழங்கும்
- 2,000Hz ப்ரெக்வன்சி வரம்பை ஆதரிக்கிறது
- டிரான்ஸ்பரன்சி மோட்
- மூன்று வகையான பிஸிக்கல் கண்ட்ரோல்கள் உள்ளன: ரோல் மெக்கானிசம், ஒரு பேடில் மற்றும் ஒரு பட்டன்.
- ப்ளூடூத் 5.3-ஐ
- Android மற்றும் iOS இல் உள்ள நத்திங்கின் எக்ஸ் கம்பானியன் ஆப் உடன் இணக்கமானதாக இருக்கும்.
- 1040mAh பேட்டரி
- ANC ஆஃப் உடன் 80 மணிநேரம் வரை பிளேபேக்
- ANC ஆன் உடன் 35 மணிநேர பேட்டரி
- வெறும் 5 நிமிட சார்ஜ் 5 மணிநேரம் வரை பிளேபேக்கை (ANC ஆஃப்) அல்லது 2.4 மணிநேரம் (ANC ஆன்) வழங்கும்
- விலை 299 யூரோவாக இருக்கலாம்; அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.29,700) ஆக இருக்கலாம். இந்திய சந்தையில் ரூ.30,000 - ரூ.40,000 பட்ஜெட்டில் இருக்கலாம்.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? எக்ஸ் பயனர் ஆஆன ர்சீன் லூபினின் (Arsène Lupin) முந்தைய லீக்கின்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்று 12GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன்; இன்னொன்று - 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன். அமெரிக்காவில் இவ்விரு வேரியண்ட்களின் விலைகளும் முறையே $799 (சுமார் ரூ.68,300) மற்றும் $899 (சுமார் ரூ.76800) ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது போட்டித்தன்மை கொண்ட விலை நிர்ணயத்தையே பெறும். இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.68,000-ஐ சுற்றிய விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








