Nothing வரிசையில் புதிதாக 2 மர்மமான போன்களா? எகுறுது ஹைப்பு.. சத்தமில்லாமல் Nothing செய்யும் வேலை அம்பலமானது..
கார்ல் பெய்க்கு (Carl Pei) சொந்தமான நத்திங் (Nothing) நிறுவனம் துவங்கப்பட்டு வெறும் 4 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், இந்த பிரண்டு உலகளவு ஃபேமஸாக மாறியுள்ளது. இதை யாராலும் மறுக்கவே முடியாது. இந்த புகழ்களுக்கு காரணம், நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்த அதன் முதல் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 1 (Nothing Phone 1) தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில், உலகத்தின் முதல் டிரான்ஸ்பரென்ட் மொபைல் சாதனமாக வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வைத்து தான் நத்திங் பிராண்டு உலக மக்களை ஈர்த்தது.
உலகத்தின் முதல் ட்ரான்ஸ்பரென்ட் மொபைல் போனை அறிமுகம் செய்தது மட்டுமின்றி, தொடர்ந்து நத்திங் நிறுவனம் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை மலிவு விலையில் அறிமுகம் செய்து அசத்தி வருகிறது. இப்படி நத்திங் போன் வரிசையில் இதுவரை சுமார் 4 ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. இவற்றில் நத்திங் போன் 1- Nothing Phone (1) மாடல் தான் துவக்க மாடலாக இருக்கிறது.

Nothing வரிசையில் புதிதாக 2 மர்மமான போன்கள்:
இதற்கு அடுத்தபடியாக நத்திங் நிறுவனம் நத்திங் போன் 2 (Nothing Phone 2), நத்திங் போன் 2a (Nothing Phone 2a), நத்திங் போன் 2a பிளஸ் (Nothing Phone 2a Plus) ஆகிய மூன்று மாடலைகளை அறிமுகம் செய்தது. இப்போது, நத்திங் நிறுவனம் அடுத்தபடியாக 2 புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்ய தயாராகி வருவது போல தெரிகிறது. சமீபத்தில் வெளியான லீக் தகவல் இதை குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான கிஸ்மோசீனா வலைப்பக்கம் தகவலில், நத்திங் நிறுவனம் 2 மர்மமான புதிய ஸ்மார்ட்போன்களில் வேலை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கிஸ்மோசீனா குழு, நத்திங் பிராண்டின் கீழ் பெயரிடப்படாத இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை கண்டுள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன்களின் பெயர் விபரம் மற்றும் மற்ற சிறப்பம்ச விபரங்கள் மர்மமாக வைக்கப்பட்டுள்ளதை கிஸ்மோ சீனா கவனித்துள்ளது.
இருப்பினும், நத்திங் நிறுவனம் புதிதாக இரண்டு புது ஸ்மார்ட்போன் சாதனங்களை உருவாக்கி வருகிறது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுவாரசியம் என்ன வென்றால், இந்த மரமான ஸ்மார்ட்போன்கள் என்ன மாடலாக இருக்கும் என்பதை கிஸ்மோசீனா கணித்துள்ளது. கிஸ்மோசீனா குழு கண்டறிந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்கள் A059 மற்றும் A059P என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளன.
சத்தமில்லாமல் Nothing செய்யும் வேலை அம்பலமானது.. இது Nothing Phone 3 ஆக இருக்கலாமா?
இதில் A059 மற்றும் A059P என்பது ஒரே சீரிஸ் வரிசையில் வரும் இரண்டு வெவ்வேறு மாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், மாடல் எண் A059P என்ற அடையாளத்தில் காணப்படும் P என்ற வார்த்தை நத்திங் வரிசையில் அடுத்து வெளிவரவிருக்கும் பிளஸ் (Plus) மாடல் போனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. யுகங்கள் சரியாக இருப்பின், இது என்ன மாடலாக இருக்கும் என்பதில் ஒரு சிறிய கணிப்பு இருக்கிறது.
மர்மமான இரண்டு ஸ்மார்ட்போன்கள் என்று அழைக்கப்படும் நத்திங் போன் 3 (Nothing Phone 3) அல்லது நத்திங் போன் 3 பிளஸ் (Nothing Phone 3 Plus) மாடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நத்திங் நிறுவனம் இரண்டு புதிய மர்மமான போன்களில் வேலை செய்து வருகிறது என்பது உண்மை தான் என்றாலும், இது நத்திங் போன் 3 சீரிஸ் வரிசையாக இருக்குமா என்பது வெறும் கணிப்பு தானே தவிர, உறுதியான தகவல் இல்லை என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications