உண்மை உடைந்தது.. Nothing பிராண்டின் முதல் Nothing Fold (1) ஃபோல்டபில் போன்.. உலகமே வியக்குது.. என்ன விலை?
நத்திங் (Nothing) நிறுவனம் அதன் புதுமையான படைப்புக்களை உலகிற்கு தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நத்திங் நிறுவனம் தனது ரசிகர்களை வியப்படைய செய்வதில் எந்தவித குறையும் வைத்ததில்லை. நத்திங் நிறுவனத்தின் முதல் Nothing Phone (1) டிரான்ஸ்பரென்ட் ஸ்மார்ட்போன் (transparent smartphone) சாதனத்தில் இருந்து, சமீபத்தில் நிறுவனம் அறிமுகம் செய்த Nothing Phone (2a) Plus Community Edition க்ளோவ் இன் டார்க் ஸ்மார்ட்போன் (glow in the dark mobile) சாதனம் வரை, எல்லா ஸ்மார்ட்போன்களிலும் நத்திங் நிறுவனம் வியப்படைய செய்துள்ளது.
நத்திங் நிறுவனத்தின் தலைவர் கார்ல் பெய் (Carl Pei) விரைவில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நத்திங் நிறுவனம் மிக விரைவில் புதிதாக ஒரு ஃபோல்டபில் ஸ்மார்ட்போனை (Nothing foldable smartphone) அறிமுக செய்யவுள்ளதாக சில லீக் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நத்திங் பிராண்டின் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் (Nothing brands first foldable phone) சாதனமாக இந்த டிவைஸ் வெளிவருமென்று கூறப்படுகிறது.

உண்மை உடைந்தது.. Nothing பிராண்டின் முதல் Nothing Fold (1).. இது புது ஃபோல்டபில் போன்:
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நத்திங் ஃபோல்ட் (1) - Nothing Fold (1) என்ற பெயருடன் அறிமுகம் செய்யுமென்று லீக் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாரங் சேத் (Sarang Sheth) என்ற டிசைனர் மூலம் உருவாக்கப்பட்ட லேட்டஸ்ட் கான்சப்ட் ரெண்டர்ஸ் (latest concept renders) புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த டிசைனரின் டிசைன்கள் எப்போதும் டெக் வட்டாரத்தில் அதிக கவனத்தை ஈர்க்கும் வடிவமைப்புகளாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், இதே டிசைனர் மேக்புக் போன்ற ஆப்பிள் தயாரிப்புகளுக்காக பல வடிவமைப்புகளை வழங்கியுள்ளார். இவர் வெளியிட்ட டிசைனின் அடிப்படையை வைத்து ஆப்பிள் நிறுவனம் சில திருத்தங்களை மேற்கொண்டு அதன் இறுதி வடிவமைப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாரங் சேத், நத்திங் நிறுவனத்தின் புதிய போல்டபில் போனின் வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறார். இது நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஃபோல்டபில் போனில் அப்படியே இடம்பெறுமா என்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நத்திங் ஃபோல்ட் (1) - Nothing Fold (1):
இந்த புதிய நத்திங் ஃபோல்டு (1) - Nothing Phone (1) சாதனம் விதியசமான கிளப் LED லைட்டிங் அமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த முறை நத்திங் பிராண்டின் கீழ் உருவாகி வரும் புதிய ஃபோல்டபில் போனில் ஹிஞ் (hinge mechanisms) அம்சம் இடம்பெறவுள்ளது. நத்திங் நிறுவனம் ஹிஞ் தொழில்நுட்பத்தை மேன்மைப்படுத்த பெரியளவில் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
Nothing Fold (1) கான்செப்ட் புகைப்படங்களை வைத்து பார்க்கையில், இது புதிய கிளிப் லைட் பார் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போல்டபில் நத்திங் போன், ஸ்லிம் டிஸ்பிளேவுடன் ஹிஞ், அம்சத்தை பெரும் என்று தெரிகிறது. இதன் வடிவமைப்பு பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இதன் அடிப்படை வடிவமைப்பு சாம்சங் ஃபோல்டபில் ஸ்மார்ட்போனை போல் இருக்கிறது.
இந்த நத்திங் ஃபோல்டபில் போன் மீடியாடெக் டைமென்சிட்டி 9400 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 16GB ரேம் உடன் 512GB ஸ்டோரேஜ் அம்சத்தை பெரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 32MP செல்பி கேமராவை பெரும். இது 5500mAh பேட்டரி (battery) உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Nothing Fold (1) ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய மதிப்பில் ரூ. 86,336 விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








