Home
News

நம்பி வாங்கியவர்கள் வாயை அடைக்க Nothing சொன்ன விளக்கம்.. Phone 3a சீரீஸில் குறை கண்டுபிடித்த கஸ்டமர்ஸ்!

ரூ.10 பொருளை ரூ.10 க்கு கொடுத்து விட்டு, அதை ரூ.1 கோடி ரேஞ்சுக்கு பேசுவது கார்ல் பெய்க்கும் (Carl Pei), அவர் தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனத்திற்கும் புதிதல்ல. நத்திங் 1 போன் அறிமுகத்தில் இருந்தே இதுதான் நடக்கிறது. மிகைப்படுத்தலை உருவாக்குவதும், அதை தொடர்ந்து சில சர்ச்சைகளில் சிக்குவதும் நத்திங் நிறுவனத்திற்கும், கார்ல் பெய்க்கும் "அல்வா"சாப்பிடுவது போல!

அப்படிப்பட்ட பில்ட்-அப்களுக்கு மத்தியில் தான்.. நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களாக நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) மாடல்கள் அறிமுகமாகின. ஆனால் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே - இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே மெதுவான யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜை (UFS 2.2 Storage) பயன்படுத்துவது தெரிய வந்ததது.

நம்பி வாங்கியவர்கள் வாயை அடைக்க Nothing சொன்ன விளக்கம்!

இது பல ரசிகர்கள் மற்றும் பயனர்களை "எரிச்சல்"அடைய செய்தது. இது தொடர்பாக புகார்கள் எழுந்த வேகத்தில்.. நத்திங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய், பயனர்கள் "புகார் செய்வதை நிறுத்த வேண்டும்" என்று கூறி இருந்தார். ஆனால் ஆன்லைன் விமர்சகர்களை அமைதிப்படுத்த இது போதுமானதாக தெரியவில்லை. இதன்விளைவாக, நத்திங் போன் 3ஏ சீரீஸில் ஏன் யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற விளக்கத்தை நத்திங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதற்காக - பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப மென்பொருள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருந்தால், யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 (UFS 3.1 Storage) ஸ்டோரேஜ்க்கு இடையிலான வேறுபாடு அதிகம் இல்லை என்பதை நிரூபிக்கும் முயற்சியில் ஒப்பீட்டு சோதனையுடன் ஒரு விரிவான விளக்கத்தை நத்திங் நிறுவனம் வழங்கி உள்ளது.

நத்திங் நிறுவனத்தின் விளக்கமானது "செலவுகளை கணிசமாக அதிகரிக்காமல் எந்த சாதனமும் எல்லாவற்றிலும் முழுமையான சிறந்ததை பெற முடியாது" என்பதை தெளிவாக எடுத்துரைக்கும்படி இருக்கிறது. இருப்பினும், இந்த பிராண்ட் அதன் யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜை தேர்வு செய்தது "செலவுகளை குறைப்பதற்காக அல்ல, மாறாக வளங்களை மிகவும் முக்கியமான இடத்தில் வைப்பதற்காக" என்றும் கூறியுள்ளது.

ஒட்டுமொத்த செயல்திறனுடன் தொடர்புடைய பல காரணிகளில் ஸ்டோரேஜ் வேகமும் ஒன்று என்பதை நத்திங் ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், ஒரு ஸ்மார்ட்போனின் மென்பொருளை பயன்படுத்தும் போது ஒட்டுமொத்த செயல்திறன் உணர்வானது - ஸ்டோரேஜ், ரேம், சிபியு மற்றும் சாஃப்ட்வேர் ஆப்டிமைசேஷன் ஆகியவற்றின் கலவையாகும் என்றும் நத்திங் விளக்கம் அளித்துள்ளது.

மெசேஜ் அனுப்புதல், வெப் ப்ரவுஸிங் மற்றும் சோஷியல் மீடியா போன்ற பெரும்பாலான "அன்றாட" பணிகளை செய்யும் போது, பயனர்களால் யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் கொண்ட போனிற்கு இடையிலான வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியாது என்று நத்திங் நிறுவனம் கூறி உள்ளது. இது எங்கே கண்டுபிடிக்கப்படும் என்றால் - பைல்களை பரிமாற்றம் செய்யும் போதுதான். ஆனால் "பெரும்பாலான மக்கள்" இதை ஒரு அன்றாட பணியாக செய்வதில்லை என்றும் நத்திங் விளக்கம் அளித்துள்ளது.

நத்திங் போன் 3ஏ முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2392 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஸ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.77-இன்ச் அமோஎல்இடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது

இதில் OIS + EIS ஆதரவு உடனான 50ம்பி சாம்சங் ப்ரைமரி சென்சார் + 50எம்பி சாம்சங் டெலிஃபோட்டோ லென்ஸ் (2எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 4எக்ஸ் இன்-சென்சார் ஜூம், 30எக்ஸ் அல்ட்ரா ஜூம்) + 8எம்பி சோனி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி சாம்சங் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 19 நிமிடங்களில் 50% பேட்டரியை சார்ஜ் செய்யும் என்றும், 56 நிமிடங்களில் நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங்ஓஎஸ் 3.1 கொண்டு இயங்குகிறது. இதற்கு 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரைநத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, என்எப்சி, வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது, இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பை வழங்கும். கடைசியாக இது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒயிட், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்பை கொண்டுள்ளது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1 உடன் வருகிறது

இது சர்க்குலர் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது, கடைசியாக ஹை எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் க்ரே மற்றும் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Explains Why Phone 3a and Phone 3a Pro have UFS 2 2 Storage Instead of UFS 3 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X