Nothing Ear (Stick) வாங்க ரெடியா? ஷாப்பிங் தேதி "இதான்" நோட் பண்ணுங்க.! விலை இதுவா?

|

நத்திங் அதன் அடுத்த ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலான நத்திங் இயர் (ஸ்டிக்) (Nothing Ear Stick) மாடலை இந்தியாவில் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, நத்திங் (Nothing) நிறுவனம் இயர்பட்ஸ்களை Flipkart மற்றும் அதன் சகோதர பிராண்டான Myntra தளத்தில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. சரி, இந்த புதிய Nothing Ear (stick) சாதனத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? என்பது போன்ற தகவலை பார்க்கலாம்.

உலக நத்திங் ரசிகர்களே.! நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்க ரெடியா?

உலக நத்திங் ரசிகர்களே.! நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்க ரெடியா?

வரவிருக்கும் நத்திங் இயர் (ஸ்டிக்) லிப்ஸ்டிக் போன்ற கேஸ் உடன் வருகிறது. இந்த புதிய வடிவமைப்பு அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஃபேஷன் சார்ந்த வாடிக்கையாளர்களைச் சென்றடைய நிறுவனம் இத்தகைய டிசைனை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் தானே என்னவோ, நத்திங் நிறுவனம் இந்தியாவின் முக்கியமாக ஃபேஷன் பிராண்டான Myntra உடன் புதிய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

பேஷன் தளத்தில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) எப்படி இருக்கிறது?

பேஷன் தளத்தில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) எப்படி இருக்கிறது?

இப்படி ஒரு பேஷன் தளத்தில் தொழில்நுட்ப ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களை தன் வசம் இழுக்கும் நோக்கத்தில் நிறுவனம் புதிய முயற்சியை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தெரியாதவர்களுக்கு, Myntra அதன் தளத்தில் ஸ்மார்ட்போன் பாகங்கள் மற்றும் ஆடியோ தயாரிப்புகளையும் விற்பனை செய்கிறது.

சரி, இந்த புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) எப்படி இருக்கிறது என்று இப்போது தெரிந்துகொள்ளலாம். நத்திங் இயர் (ஸ்டிக்) அவற்றின் முன்னோடி நத்திங் இயர்பட்ஸ் மாடலில் இருந்து சற்று வித்தியாசமாகத் தெரிகிறது.

BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!

காதுல வச்சா மாட்டி இருக்காதே தெரியாதா? ஏன் தெரியுமா?

காதுல வச்சா மாட்டி இருக்காதே தெரியாதா? ஏன் தெரியுமா?

புதிய சார்ஜிங் கேஸைத் தவிர, இயர்பட்ஸ் மிகவும் கச்சிதமாகத் தோற்றமளிக்கிறது. ஒவ்வொரு இயர்பட்ஸ் இன் எடையும் 4.4 கிராம் மட்டுமே இருக்கிறது என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உங்கள் காதில் ஒரு டிவைஸ் இருப்பதையே நீங்கள் உணர முடியாது. அந்த அளவிற்கு இதன் எடை குறைவாக இருக்கிறது.

ஆனால், சார்ஜிங் கேஸுடன் எடை எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை. அசல் நத்திங் இயர் (1) இயர்பட்ஸ் இன் கேரி கேஸ் இல்லாமல் 4.7 கிராம் எடை கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் டோன் அழகா தான் இருக்கு.. Nothing Ear Stick வேற கலரில் வருமா?

டூயல் டோன் அழகா தான் இருக்கு.. Nothing Ear Stick வேற கலரில் வருமா?

புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) இயர்பட்ஸ் இல் டூயல் டோன் பினிஷ் உடன் வருகிறது. மேலும், நிறுவனம் ஒரு முழுமையான பிளாக் எடிஷனை பின்னர் வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நத்திங் இயர் (ஸ்டிக்) இயர்பட்ஸ் இன் ஸ்டெம் குறுகியதாக உள்ளது மற்றும் ஆடியோவை நிர்வகிக்க இது டச் கண்ட்ரோல் அம்சத்தையும் கொண்டுள்ளது.

மைந்த்ராவுடனான கூட்டாண்மை பற்றி நத்திங் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் பொது மேலாளருமான மனு ஷர்மா உறுதியளித்துள்ளார்.

இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!

எது விலை மிகவும் குறைவாக இருக்குமா? உண்மையா?

எது விலை மிகவும் குறைவாக இருக்குமா? உண்மையா?

நத்திங் இயர் (ஸ்டிக்) பற்றிய விவரக்குறிப்பு விபரங்கள் எதையும் நிறுவனம் இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளது. ஆனால், நத்திங் இயர் (ஸ்டிக்) அசல் நத்திங் இயர் (1) ஐ விட மலிவு விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம், உண்மை தான். நத்திங் இயர் (ஸ்டிக்) விலையை மலிவாக வைத்துக்கொள்ள நிறுவனம் இதன் தயாரிப்பு பொருள் மற்றும் சில அம்சங்களை மாற்றியுள்ளது. இது வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

நத்திங் இயர் (ஸ்டிக்) என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

நத்திங் இயர் (ஸ்டிக்) என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

சமீபத்தில், நிறுவனம் இந்தியாவிலும் பிற சந்தைகளிலும் அசல் நத்திங் இயர் (1) இன் விலை உயர்வை அறிவித்தது. புதிய விலை அக்டோபர் 26 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நத்திங் இயர் (ஸ்டிக்) அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து முந்தைய மாடலின் விலை குறையுமா இல்லையா என்பதை நாம் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

இதன் விலை ரூ. 8,199 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Ear (stick) Will Be Available On Myntra Website From October 26

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X