Nothing Ear 1 Stick விலை: பேசாமல் கூட ரூ.2,000 போட்டு புது போன் வாங்கிடலாம்!

|

நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக, நத்திங் போன் 1 (Nothing Phone 1) நாளை (ஜூலை 12) உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலைப்பாட்டில், அதனுடன் சேர்ந்து மேலுமொரு நத்திங் தயாரிப்பும் வெளியாகும் என்பது போல் தெரிகிறது

ஏனெனில் பிஐஎஸ் (BIS) இணையதளத்தில் மாடல் நம்பர் B157 என்கிற பெயரின் கீழ் ஒரு புதிய 'நத்திங் ப்ராடெக்ட்' சான்றிதழை பெற்றுள்ளதாக தெரிகிறது. அறியாதோர்களுக்கு பிஐஎஸ் என்றால் Bureau of Indian Standards ஆகும்.

அதென்ன ப்ராடெக்ட்?

அதென்ன ப்ராடெக்ட்?

சந்தேகமே வேண்டாம். அது நிச்சயம் நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்களாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் முன்னதாக இந்தியாவில் அறிமுகமான நத்திங் இயர் (1) மாடலின் பிஐஎஸ் சான்றிதழின் மாடல் நம்பர் - B181 ஆகும்.

ஆக B157 ஆனது நத்திங் நிறுவனத்தின் அடுத்த 'ஆடியோ கியர்' ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதை உறுதிப்படுத்தும் வண்ணம் நத்திங் இயர் 1 ஸ்டிக் (Nothing Ear 1 Stick) குறித்த லீக்ஸ் தகவல்களும் இங்கே ஏராளம்!

அதே டிரான்ஸ்ப்ரென்ட் டிசைன்... ஆனால்?

அதே டிரான்ஸ்ப்ரென்ட் டிசைன்... ஆனால்?

நத்திங் இயர் 1 ஸ்டிக் ஆனது, முன்னதாக அறிமுகமான Nothing Ear 1 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸை போலவே டிரான்ஸ்ப்ரென்ட் டிசைனை கொண்டிருக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட வேரியண்ட் ஆக வரும்.

இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

சிலிக்கான் டிப்ஸ் இருக்காது; ஏஎன்சி-யும் இருக்காது!

சிலிக்கான் டிப்ஸ் இருக்காது; ஏஎன்சி-யும் இருக்காது!

டிப்ஸ்டர் இஷான் அகர்வால் (@ishanagarwal24) வழியாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆப்பிளின் ஸ்டாண்டர்ட் ஏர்போட்ஸில் இருப்பது போன்ற சிலிக்கான் டிப்ஸ், நத்திங் இயர் 1 ஸ்டிக்கில் இடம்பெறாது என்பதை அறிய முடிகிறது.

மேலும் இது ஏஎன்சி (ANC) என்று அழைக்கப்படும் ஆட்டோமேட்டிக் நாய்ஸ் கேன்சலேஷன் (Automatic noise cancellation) அம்சத்தையும் புறக்கணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் விலை மட்டும் அதிகமாக இருக்கும்!

ஆனால் விலை மட்டும் அதிகமாக இருக்கும்!

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நத்திங் இயர் (1) ஸ்டிக் ஆனது இந்திய மதிப்பின்படி (தோராயமாக) ரூ.8,200 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில், நத்திங் இயர் 1 ஆனது ரூ.6,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக இதன் அடுத்த வெர்ஷன் ஆன நத்திங் இயர் (1) ஸ்டிக்கிற்கு ரூ.8,000 என்கிற விலை நிர்ணயம் ஒதுக்கப்பட்டு இருப்பது சிலருக்கு ஷாக்கிங் நியூஸ் ஆக இருக்காது.

ஆனால் ரூ.10,000 க்குள் புது போன் வாங்க திட்டமிடும் பட்ஜெட் வாசிகளுக்கு "கூட கொஞ்சம் காசு போட்டால்.. ஒரு நல்ல ஸ்மார்ட்போனே வாங்கிடலாமே!" என்று தோன்றுவதில் தவறில்லை!

100 மணிநேரம் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் 30 கிராம் எடையுள்ள நெக்பேண்ட் இயர்போன்ஸ்!100 மணிநேரம் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் 30 கிராம் எடையுள்ள நெக்பேண்ட் இயர்போன்ஸ்!

ரூ.8,200 கொடுக்குற அளவுக்கு இதுல அப்படி என்ன தான் இருக்கும்?

ரூ.8,200 கொடுக்குற அளவுக்கு இதுல அப்படி என்ன தான் இருக்கும்?

குறிப்பிட்ட இயர்பட்ஸ் தொடர்பான ஒரு புகைப்படத்தை வைத்து பார்க்கும், நத்திங் இயர் (1) ஸ்டிக்கின் இயர்பட்ஸ் ஸ்டெம்மில் "இயர் (1) ஸ்டிக்" என்கிற டெக்ஸ்ட்-ஐ பார்க்க முடிகிறது மற்றும் இது ஒரு செவ்வக வடிவிலான கேஸ் உடன் வரும் என்பதையும் அறிய முடிகிறது.

மேலும் நத்திங் இயர் (1) ஸ்டிக் ஆனது ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, AI Bass மற்றும் IP54 மதிப்பீடு போன்ற அம்சங்களை பேக் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நத்திங் இயர் (1) ஸ்டிக் கொண்டு வரும் ஹார்ட்வேர் மாற்றங்களை பற்றி எந்த தகவலும் இல்லை.

ஒருவேளை இது நல்ல முன்னேற்றங்களை கொண்டு வரும் பட்சத்தில், ரூ.8,000 என்கிற இதன் விலை நிர்ணயம் 'பெரிய மேட்டர்' ஆக இருக்காது. மாறாக 'டிரான்ஸ்ப்ரென்ட் டிசைன்' என்கிற அதே கான்செப்ட்-ஐ மட்டுமே வைத்து வெளியானால், - கொஞ்சம் கஷ்டம் தான்!

பல வகையான பட்ஜெட்களின் கீழ் பல எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனங்களே, தத்தம் இயர் பட்ஸ்களை கம்மி விலைக்கு விற்றுக்கொண்டிருக்க, இன்னும் முதல் ஸ்மார்ட்போனை கூட அறிமுகம் செய்யவில்லை, அதுக்குள்ள அடுத்த இயர்பட்ஸ்க்கு (Nothing Ear 1 Stick) இப்படி ஒரு விலை நிர்ணயமா என்கிற கேள்விக்கு நிச்சயம் ஆளாகும்!

Photo Courtesy: Mukul Sharma, SnoopyTech, NOTHING

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nothing Ear 1 Stick India Launch Soon Price Could be Around Rs 8000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X