Home
News

உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!

புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான நத்திங் (Nothing), அதன் நத்திங் போன்(1) இன் (Nothing Phone 1) அறிமுகத்தைத் தொடர்ந்து, மிக விரைவில் நத்திங் போன் (2) என்ற சாதனத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது.

இந்த நத்திங் போன் (2) சாதனத்தின் அறிமுகத்தைப் பற்றி நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei) மிக சுவாரசியமான குறிப்பு ஒன்றை இப்போது வெளியிட்டிருக்கிறார். இந்த குறிப்பில், அவர் நத்திங் போன் (2) ஒரு குறிப்பிட்ட சந்தையில் மட்டும் முதலில் விற்பனைக்கு அறிமுகம் ஆகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Nothing Phone (2): உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.!

நத்திங் போன்(2) இந்த நாட்டில் மட்டும் தான் முதலில் விற்பனைக்கு வருமா?

இந்த தகவலின் படி, நத்திங் நிறுவனம் அதன் முதன்மையை இந்த முறை அமெரிக்க சந்தை பக்கம் குறிவைத்துள்ளதாக தெரிகிறது. புது நத்திங் போன் 2 டிவைஸை நிறுவனம் அமெரிக்காவில் முதலில் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. இந்த நத்திங் போன்(2) விற்பனைக்கு வரும்போது, அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் கார்ல் பெய் தெரிவித்துள்ளார். பிரபலமான பத்திரிக்கை ஒன்றிற்கு பெய் கொடுத்த பேட்டியில்,

"அமெரிக்காவை எங்களது விற்பனைக்கான முதன்மை சந்தையாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். நத்திங் நிறுவனம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை இதனை செயல்படுத்த முயலவில்லை. இந்த இரண்டு ஆண்டுகள் எங்களது குழுவை கட்டமைக்கவும், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் சரியாக இருந்தது. இனிவரும் ஆண்டுகளில் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எங்களது செயல்பாடுகள் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Nothing Phone (2): உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.!

அப்படினா.. இந்தியாவில் இந்த Nothing Phone (2) கிடைக்காதா? உண்மை என்ன?

இதற்கு அர்த்தம், அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளில் நத்திங் போன் (2) கிடைக்காது என்பது அர்த்தமில்லை. நத்திங் போன்(2) விற்பனைக்கு தயாரான பிறகு, முதலில் அமெரிக்கச் சந்தையில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன் பிறகு, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் சந்தைகளில் தனது விற்பனையை நிறுவனம் தொடங்கும் என்பதே இதற்கான பொருளாகும்.

இதில் மற்றொரு காரணமும் மறைந்துள்ளது. நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 1 மாடலை அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நிறுவனம், அதனுடைய அடுத்த மாஸ்டர் பீஸ் படைப்பை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்த பிறகு, மற்ற உலக நாடுகளின் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

Nothing Phone (2): உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.!

நத்திங் போன்(1) சிறப்பம்சம்:

சரி, நத்திங் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, தற்போது விற்பனையில் இருக்கும் நத்திங் போன்(1) அம்சங்களை பற்றி சற்று பார்க்கலாம்.

- 6.55' இன்ச் ஃப்ளக்ஸிபில் (Flexible) OLED டிஸ்ப்ளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate),
- ஹாப்டிக் டச், HDR10+
- கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) 5 பாதுகாப்பு
- குவல்காம் ஸ்னாப்ட்ராகன் 778+ SoC (Qualcomm Snapdragon 778+ SoC)
- 8GB RAM + 128GB; 8GB RAM + 256GB; 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட்
- 50MP + 50MP கேமரா / 16MP முன்பக்க கேமரா
- இன்டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் (Indisplay fingerprint sensor)
- டூவல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் (Dual stereo speakers)
- ஃபேஸ் அன்லாக் (Face Unlock)
- ஆண்ட்ராய்டு 12ல் செயல்படுகிறது.
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 4500mAh பேட்டரி

இந்த ஸ்மார்ட் போனிற்கு 3 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு சப்போர்ட் (Android support), நான்கு ஆண்டுகளுக்கு இரண்டு மாதம் செக்யூரிட்டி பேட்ச் (Security patch) உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் புது அம்சத்துடன் நத்திங் போன் 2 டிவைஸ் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் புது ஹைப்பை கிளப்பியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Co-Founder Carl Pei Confirms About Nothing Phone (2) This Year 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X