Nothing CEO துணிச்சல்: எல்லாரும் "போரிங்", எங்களுடன் ஜோடி போட ஆள் இருக்கா?

|

நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனான Nothing Phone (1)-ஐ ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்த நிலையில் நத்திங் சிஇஓ கார்ல் பெய் சந்தையில் உள்ள ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

ஜூலை 21 முதல் விற்பனைக்கு கிடைக்கும் நத்திங் போன் (1)

ஜூலை 21 முதல் விற்பனைக்கு கிடைக்கும் நத்திங் போன் (1)

நத்திங் நிறுவனத்தின் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் அதன் முதல் ஸ்மார்ட்போனான நத்திங் ஃபோன் (1)-ஐ அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 21 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போன் விரைவில் விற்பனையாக இருக்கும் நிலையில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) கார்ல் பெய் சந்தையில் உள்ள ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்கள் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

நத்திங் சிஇஓ கார்ல் பெய் அளித்த தகவல்

நத்திங் சிஇஓ கார்ல் பெய் அளித்த தகவல்

தி எகனாமிக் டைம்ஸ் டெலிகாம்-க்கு நத்திங் சிஇஓ கார்ல் பெய் அளித்த பேட்டியை விரிவாக பார்க்கலாம். சந்தையில் புதுமையான ஸ்மார்ட்போன் என்று எதுவும் இல்லாத காரணத்தால் உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தை சுருங்கிக் கொண்டே வருகிறது என கார்ல் பெய் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான ஒரு நிறுவனமே இல்லை

நிலையான ஒரு நிறுவனமே இல்லை

சந்தையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால் நிலையான ஒரு நிறுவனம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு காலாண்டிலும் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் நிலை மாறிக்கொண்டே இருக்கிறது என தெரிவித்தார். இது அவ்வளவு போட்டியாகத் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதற்கு நான் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்: சிஇஓ

எதற்கு நான் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்: சிஇஓ

அதேபோல் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் "போரிங்" என கார்ல் பெய் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் இதுகுறித்து கூறுகையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தனித்துவமான மற்றும் வித்தியாசமான அம்சங்களை வழங்குவதற்கு பதிலாக விவரக்குறிப்புகளின் அடிப்படையில் தான் போட்டியிடுகின்றன. பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களும் ஒற்றுமையுடன் இருக்கும் காரணத்தால் ஸ்மார்ட்போன் சந்தையை சுருக்குவதற்கு இது வழிவகுக்கிறது. "எல்லா தயாரிப்புகளும் ஒரே மாதிரியாக இருந்தால், நான் ஏன் புதிய தயாரிப்பை வாங்க வேண்டும்" என அவர் கேள்வி எழுப்பினார்.

எங்களது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதற்கு காரணமே இதுதான்

எங்களது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதற்கு காரணமே இதுதான்

நிறுவனங்கள் எப்போதுமே பொதுவான ஸ்மார்ட்போன்களை உருவாக்கத் தான் திட்டமிடுகிறது. ஆனால் அதை செய்வதற்கு முன்பு சப்ளையர்களின் நம்பிக்கையை பெறுவது என்பது மிக முக்கியம் என கூறினார். இதை அறிந்த காரணத்தால் பாதுகாப்பான மற்றும் வித்தியாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிந்தது. தொடக்கத்தில் இருந்தே நாங்கள் இதில் கவனம் செலுத்தினோம் எனவும் நத்திங் சிஇஓ கார்ல் பெய் தெரிவித்தார்.

இப்படி கூறியது முதல்முறையல்ல

இப்படி கூறியது முதல்முறையல்ல

நத்திங் சிஇஓ கார்ல் பெய் சந்தையில் இருக்கும் ஸ்மார்ட்போனை விமர்சித்து கூறியது இது முதல் முறையல்ல. நத்திங் போன் (1) உற்பத்தி பணியில் இருக்கும் போதே அவர் இதுபோன்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறிய கருத்துகள் தான் நத்திங் போன் (1) க்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்க பிரதான காரணம். அப்படி அவர் என்ன சொன்னார் என்ற தகவலை அறிய ஆர்வமாக இருக்கிறதா?. வாருங்கள் தகவலை விரிவாக பார்க்கலாம்.

முன்னதாக நத்திங் சிஇஓ சொன்ன தகவல் இதுதான்

முன்னதாக நத்திங் சிஇஓ சொன்ன தகவல் இதுதான்

ஐபோனுக்கு இணை போட்டியாக தங்களது சாதனம் இருக்கும், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான ஸ்மார்ட்போன்கள் இதுவரை சந்தையில் வெளி வரவில்லை, இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு என்றே வருகிறது நத்திங் போன் (1) என குறிப்பிட்டார்.

பயனர்கள் தேவையை யாருமே இதுவரை பூர்த்தி செய்யவில்லை

பயனர்கள் தேவையை யாருமே இதுவரை பூர்த்தி செய்யவில்லை

மேலும் ஸ்மார்ட்போன் சந்தை அபார வளர்ச்சியை கண்டிருக்கிறது, இருப்பினும் அவை எதுவும் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் எனது எதிர்பார்ப்பு தனது பயனர்கள் உடையது எனவும் கூறினார். பயனர்கள் விரும்பும் புதிய கண்டுபிடிப்புகள் தற்போதுவரை வெளிவரவில்லை என குறிப்பிட்ட அவர் அதை பூர்த்தி செய்யும் வகையில் நத்திங் போன் (1) இருக்கும் என தெரிவித்தார்.

நிலையை மாற்றம் செய்வதற்கு தான் நத்திங்

நிலையை மாற்றம் செய்வதற்கு தான் நத்திங்

அதேபோல் சிறந்த போன்கள் வெளியிடும் பிராண்டுகள் என வாடிக்கையாளர்கள் ஒரு சிலவற்றை மட்டுமே நம்பி இருக்கின்றனர். ஆனால் அவைகள் பயனர்களுக்கு என புதிய மாற்றம் எதையும் அறிமுகம் செய்யவில்லை, குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து புதிய ஸ்மார்ட்போன் என சந்தையில் அறிமுகம் செய்கின்றனர். இந்த நிலையை மாற்றம் செய்வதற்கு என நத்திங் வந்திருக்கிறது என தெரிவித்தார்.

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நத்திங் ஓஎஸ் அம்சம் இதோ

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நத்திங் ஓஎஸ் அம்சம் இதோ

நத்திங் ஓஎஸ் ஆனது திறந்த மற்றும் தடையற்ற சுற்றுச்சூழல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவான சாஃப்ட்வேர் ஆகும். உலகின் முன்னணி பிராண்டுகளுக்கு இணையாக நத்திங் தயாரிப்புகளை சிரமமின்றி இயக்கவும் ஒருங்கிணைக்கவும் இது உதவும். ஆப்பிள் ஐபோன் தான் பெஸ்ட் என்ற நிலையை மாற்றுவதற்கான சாதனமாக நத்திங் போன் 1 இருக்கும். முன்னதாகவே சந்தையில் பிரபலமாக இருக்கும் பயன்பாடுகளை விளம்பரப்படுத்தி எங்கள் சாதனத்தை சந்தைக்கு கொண்டுவருவது தங்களது நோக்கம் இல்லை. தங்கள் தயாரிப்புகள் அனைத்தும் உங்களுக்கானது என சிஇஓ கார்ல் பெய் குறிப்பிட்டார்.

நத்திங் நிறுவனத்தின் தலைமையிடம் எது?

நத்திங் நிறுவனத்தின் தலைமையிடம் எது?

லண்டனை தலைமையிடமாக கொண்டு நத்திங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு சாதனம் Ear(1) என்ற இயர்பட்ஸ் ஆகும். தற்போது இந்த நிறுவனம் தன் தயாரிப்பின் கீழ் இரண்டாவது சாதனமாக நத்திங் போன் (1) என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டு இருக்கிறது.

Source: bgr.in

Best Mobiles in India

English summary
Nothing CEO Carl Pei Says all smartphones are same, why should i buy new one

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X