Home
News

ஓஹோனான.. ரஷ்மிகா மந்தனாவை CMF ரோப்பில் கட்டிப்போட கார்ல் பெய்.. என்ன விஷயம்? உலகமே இதை பற்றி தான் பேசுது?

நத்திங் (Nothing) நிறுவனத்திற்கு சொந்தமான சிஎம்எஃப் (CMF) அதன் புதிய ஸ்மார்ட்போன் (CMF Smartphone) சாதனத்தை இந்த மாதம் வெளியிடவுள்ளது. சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) என்ற பெயருடன் வெளிவர தயாராக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனை பற்றி பல லீக் தகவல்கள் மற்றும் டீஸர் தகவல்களை நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இப்போது யாரும் எதிர்பார்த்திடாத வேளையில், ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) புதிய CMF ஸ்மார்ட்போன் மற்றும் ஆக்சஸரீஸ் கருவிகளுடன் போஸ்டரில் காணப்பட்டுள்ளார்.

நத்திங் என்ற நிறுவனத்தை கார்ல் பெய் (Carl Pei) குறுகிய காலத்திற்குள் உலக புகழ்பெற்ற நிறுவனமாக உருவாக்கியிருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே என்றாலும், இது வரை யாரும் எதிர்பார்த்திடாத வகையில், இந்திய நடிகையான ரஷ்மிகா மந்தனாவை (Indian Actress Rashmika Mandanna) தனது மற்றொரு பிராண்ட் ஆன CMF பிராண்ட் தயாரிப்பு சாதனங்களின் விளம்பரங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

ஓஹோனான.. ரஷ்மிகா மந்தனாவை CMF ரோப்பில் கட்டிப்போட கார்ல் பெய்..

ரஷ்மிகா மந்தனாவை CMF ரோப்பில் கட்டிப்போட கார்ல் பெய்.. என்ன விஷயம்?

ரஷ்மிகா மந்தனாவை, விளம்பரத்தில் நடிக்க வைத்தது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ரஷ்மிகா மந்தனாவை வெறும் விளம்பரத்தில் மட்டும் கார்ல் பெய் பயன்படுத்தவில்லை. இவரது CMF பிராண்டின் புதிய அம்பாசிட்டராக (CMF brand Ambassador) கார்ல் பெய், ரஷ்மிகா மந்தனாவைஅறிமுகம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க இப்போது இணையத்தில் எங்கு திருப்பினாலும், இதே செய்தி தான்.

கார்ல் பெய்க்கு சொந்தமான CMF பிராண்டின் தூதராக பிரபலமாக இந்திய நடிகை ரஷ்மிகா மந்தனா (CMF brand Ambassador Rashmika Mandanna) அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், உலகளவில் இப்போது ரஷ்மிகா மந்தனாவை பற்றி வெளிநாட்டவர்கள் பலரும் கூகுள் சர்ச் (Google Search) செய்து வருகின்றனர். இன்று வெளியிடப்பட்ட போஸ்டரில் ரஷ்மிகா மந்தனா கையில் CMF Phone 1 சாதனம் ஒரு ஆரஞ்சு நிற ரோப் உடன் காணப்பட்டுள்ளது.

இந்த ஆரஞ்சு நிற ரோப் ரஷ்மிகா மந்தனாவை கட்டிப்போட படி, அவருடைய உடலுடன் ஒட்டி இருக்கிறது. இந்த புதிய கருவி CMF போனுடன் வாங்க கிடைக்கும் புதிய வகை அக்சஸரீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், CMF போனின் அறிமுகத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ளது என்ற மற்றொரு விளம்பரத்திலும் ரஷ்மிகா மந்தனா கையில் புதிய போன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) உடன் எதிர்பார்க்கப்படும் அக்சஸரீஸ் சாதனங்கள் என்னென்ன?

CMF தயாரிப்புகளுக்கான பிராண்ட் தூதராக, ராஷ்மிகா மந்தனா டிஜிட்டல், பிரஸ் மற்றும் TVC பிரச்சாரங்களில் முக்கியமான பிரபலமாக இடம்பெறுவார் என்று CMF நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது CMF தயாரிப்புகளின் புதுமையான உணர்வு மற்றும் ஸ்டைலான சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர வரவிருக்கும் CMF போன் பற்றிய சில தகவல்களும் லீக் செய்யப்பட்டுள்ளது.

புதிய சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) சாதனம் கழட்டி மாடக்கூடிய ரியர் கவர் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது புதிய சாதனம் பிளாக் (Black), ஆரஞ்சு (Orange), லைட் க்ரீன் (Light Green) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய 4 நிறங்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பிளாக் மற்றும் லைட் க்ரீன் நிறங்கள் வழக்கமான தோற்றத்தை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், ப்ளூ மற்றும் ஆரஞ்சு நிற CMF போன்கள் வீகன் லெதர் பேக் பினிஷ் உடன் வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இத்துடன் நிறுவனம் இன்னும் சில ஆக்சஸரீஸ் சாதனங்களை CMF போனுடன் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் லான்யார்டு கனெக்டர் (lanyard connector), போன் ஸ்டாண்ட் (Stand) மற்றும் போன் ரோப் (Phone rope), பேக் கவர் போன்றவற்றை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing CEO Carl Pei Confirms Rashmika Mandanna As CMF Brand Ambassador With CMF Phone 1 and Accessories
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X