ஜியோ: எல்லாமே இலவசமா இருக்க முடியாது, ஏர்டெல் ஓனர் புகைச்சல்!

ஜியோவுடனான போட்டி வணிக ரீதியாகப் பாதித்ததைத் தொடர்ந்து ஏர்டெல் தலைவர் பொங்கி எழுந்துள்ளார். ஜியோ குறித்துக் கருத்துத் தெரிவித்த போது வாழ்நாள் முழுக்க எல்லாமே இலவசமாகிடாது..

By Meganathan
|

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் அபராதம் குறித்து அந்நிறுவனம் மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையான பதில் அளிக்கும் என ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

ஜியோ நிறுவன அழைப்புகளுக்கு முறையான இண்டர்கணெக்ட் பாயிண்ட்களை வழங்காததாக ஏர்டெல் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குழப்பம்

குழப்பம்

ஜியோவிற்கு வழங்கப்பட்ட இண்டர்கனெக்ட் பாயிண்ட் குறித்து மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்குச் சந்தேகம் ஏதும் இருக்கக் கூடும் எனக் குர்கானில் நடைபெற்ற விவாதத்தில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

தகவல்

தகவல்

'ஜியோவிற்குத் தேவையான இண்டர்கனெக்ட் பாயிண்ட்கள் சரியான நேரத்தில், முறையாக வழங்கப்பட்டது' என வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களுடன் இணைந்து ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீர்வு

தீர்வு

'ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகளுக்கு டெலிகாம் துறையில் முறையான தீர்வு எட்டப்பட வேண்டும், எதுவும் வாழ்நாள் முழுக்க இலவசமாக இருக்க முடியாது,' எனச் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரச்சனை

பிரச்சனை

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தற்சமயம் இரண்டு மிகப் பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது.
* ஒன்று ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் சேவை. மேலும்.
* டிசம்பர் 31, 2016 வரை இலவச அன்லிமிட்டெட் டேட்டா வழங்குவது.

முறையற்றது

முறையற்றது

வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் சேவைகளை வழங்குவது டெலிகாம் டாரிஃப் விதிமுறைகளுக்கு எதிரானது அதுவும், இண்டர்கனெக்ட் பயன்பாடு கட்டணத்தை விடக் குறைவாக வழங்குவது முறையற்றதாகும்.

குறை

குறை

ஜியோவின் இலவச வாய்ஸ் கால் உள்பட அனைத்துச் சேவைகள் குறித்து மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்சமயம் வரை எவ்வித குறையும் காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அபராதம்

அபராதம்

அடுத்து ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மீது ரூ.3,050 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜியோவிற்குத் தேவையான இண்டர்கனெக்ட் பாயிண்ட்களை வழங்காததாக எழுந்த குற்றச்சாட்டில் டிராய் இந்த அபராதத் தொகையை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்து.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

அப்படியாகப் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் சார்பில் முறையே ரூ.1,050 கோடியும், ஐடியா செல்லுலார் ரூ.950 கோடி வரை அபராதம் செலுத்த நேரிடும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Nothing can be free for life, says Bharti Airtel's Sunil Mittal

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X