நத்திங் அறிமுகம் செய்த முதல் ஆடை.. பீர் முடிந்து டிரஸ் ரெடி.. அடுத்து என்ன? நத்திங் அப்பேரல் என்றால் என்ன?
நத்திங் (Nothing) நிறுவனம் இந்த ஆண்டு உலக மக்களுக்கும் அதன் ரசிகர்களுக்கும் ஷாக் மேல் ஷாக் கொடுத்து வருகிறது. காரணம், இந்த நிறுவனம் இப்போது லிஸ்டில் இல்லாத மற்றும் எதிர்பார்த்திடாத பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்து திகைப்படைய செய்து வருகிறது.
ஆம், டெக் தொழில்நுட்ப நிறுவனமாக கருதப்பட்ட இந்த நத்திங் நிறுவனம், முதலில் டிரான்ஸ்பரென்ட் டிசைனில் நத்திங் இயற் (1) ஹெட்போன்ஸ் (Nothing Ear 1) அல்லது இயர் (1) (Ear 1) என்ற இயர்போன்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து நிறுவனம் உலகின் முதல் டிரான்ஸ்பரென்ட் டிசைன் ஸ்மார்ட்போன் சாதனமான நத்திங் போன் (1) (Nothing Phone 1) சாதனத்தை அறிமுகம் செய்து உலகின் கவனத்தை தன்வசம் ஈர்த்தது.

அதற்கு பிறகு, அதன் மேம்பபட்ட மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்தது. நத்திங் இயர் ஸ்டிக் (Nothing Ear Stick), நத்திங் இயர் (2) (Nothing Ear 2) அல்லது இயர் (2) (Ear 2) என்ற மாடல்களை அறிமுகம் செய்தது. அதற்கு அடுத்தபடியாக,நிறுவனம் சமீபத்தில் அதன் நத்திங் போன் (2) சாதனத்தை (Nothing Phone 2) அறிமுகம் செய்தது.
இதற்கு மத்தியில் நத்திங் நிறுவனம் சிஎம்எப் (CMF) என்ற துணை பிரண்டையும் அண்மையில் அறிமுகம் செய்தது. இதன் கீழ், நிறுவனம் பட்ஸ் ப்ரோ (BUDS PRO) என்ற TWS இயர்பட்ஸ் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்தது. இத்துடன் வாட்ச் ப்ரோ (Watch Pro) என்ற ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பவர் 65W GaN (POWER 65W GaN) என்ற பவர் அடாப்ட்டர் மாடலை நிறுவனம் CMF பிராண்டின் கீழ் அறிமுகம் செய்தது.
இதற்கு பிறகு, யாரும் எதிர்பார்த்திடாத கோணத்தில் நத்திங் நிறுவனம் அதன் முதல் பீர் பணத்தை லண்டனில் அறிமுகம் செய்தது. இதை நிறுவனம் பீர் (5.1%) என்ற (Beer 5.1%) பெயரில் அறிமுகம் செய்து உலக மக்களை குழப்பமடைய செய்தது. ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனம் சம்மந்தமே இல்லாமல் ஏன் திடீரென பீர் விற்பனையில் கால் பதித்தது என்ற கேள்வி எழுந்தது. இப்போது மீண்டும் நிறுவனம் ஒரு எதிர்பார்த்திடாத விஷயத்தை செய்துள்ளது.
நத்திங் நிறுவனத்தின் முதல் ஆடை 'நத்திங் அப்பேரல்' (Nothing Apparel):
லண்டனை தளமாகக் கொண்ட நத்திங் நிறுவனம் டெக் துறை சார்ந்து மட்டும் இல்லாமல், ஒரு பீர் பிராண்டையும் உருவாக்கிய பிறகு, இப்போது அதன் முதல் ஆடையை அறிமுகம் செய்து மக்களின் கவனத்தை மீண்டும் ஒரு முறை தன் வசம் ஈர்த்துள்ளது. நத்திங் நிறுவனம் அதன் முதல் ஆடை வரிசையான நத்திங் அப்பேரல்ஸ் (Nothing Apparel) தயாரிப்பை அறிவித்துள்ளது. நத்திங் நிறுவனம் இந்த ஆடை பற்றிய விபரங்களை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துகொண்டது.
நத்திங் அப்பேரல்' என்றால் என்ன?
அதில், இது பொதுவாக ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கான சீருடை. இதுவொரு 'ஒர்க்வேர்' (Workwear) என்று அறிமுகப்படுத்தியது. நத்திங் நிறுவனத்தின் கூற்றுப்படி, நத்திங் அப்பேரல் என்பது 'கிரியேட்டர்ஸ் (Creatores)' மற்றும் என்ஜினீயர்ஸ் (Engineers) மற்றும் 'புதிதாக ஏதாவது நடக்க விரும்பும் எவருக்கும்' பொருந்தும் வகையில் உருகாவப்பட்ட ஆடை இதுவாகும்.
நத்திங்கின் ஹார்டுவேர், கிளாசிக் பேக்டரி வியர் (classic facatory wear) மற்றும் எங்கள் தெளிவான காட்சி அடையாளத்தால் ஈர்க்கப்பட்டவை' என்று நிறுவனம் இந்த ஆடையை குறிப்பிட்டுள்ளது. இந்த நத்திங் அப்பேரல் (Nothing Apparel) திட்டம் டீனேஜ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் உருவாக்கப்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 13-15 வரை லண்டனின் டோவர் ஸ்ட்ரீட் சந்தையில் பிரத்யேக முன்னோட்டத்தைப் பார்க்கலாம்.
இதை எங்கே வாங்கலாம்?
தேர்ந்தெடுக்கப்பட்ட நத்திங் இன் காட்சிப் பொருட்கள் முன்னோட்டத்தின் போது காட்டப்படும். வெளியீட்டுத் தேதியைப் பொறுத்தவரை, கார்ல் பெய் (Carl Pei) நிறுவிய முயற்சியானது 'கம்மிங் சூன் (Coming Soon) என்று கூறுகிறது. http://nothing.tech என்ற இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் மக்கள் இந்த ஆடை தொடர்பான புதுப்பிப்புகளுக்குப் பதிவு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








