நம்பிக்க அதான எல்லாம்! 1,000,000 தயாரிப்புகள் விற்று அசத்திய Nothing: சுவாரஸ்யம் என்ன தெரியுமா?

|

2021 ஆம் ஆண்டின் மத்தியில் நத்திங் தயாரிப்பு சந்தைக்கு வந்தது. அன்றில் இருந்து தற்போது வரை உலகளவில் 1 மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகளை விற்றுள்ளதாக Nothing நிறுவனம் அறிவித்துள்ளது. விற்பனையான சாதனங்களில் நத்திங் ஃபோன் (1), இயர் (1) மற்றும் இயர் (ஸ்டிக்) TWS இயர்பட்ஸ் உள்ளிட்டவை அடங்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

1 மில்லியன் வரை விற்பனை

1 மில்லியன் வரை விற்பனை

நத்திங் போன் (1), இயர் (1) மற்றும் இயர் (ஸ்டிக்) TWS இயர்பட்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகள் உலகளவில் 1 மில்லியன் வரை விற்றுள்ளதாக நத்திங் நிறுவனம் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நத்திங் நிறுவனத்தின் முதல் சாதனமாக இயர் (1) TWS அறிமுகம் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து ஜூலை 2022 இல் Nothing Phone (1) ஆனது வெளியானது. இந்த அறிமுகத்தில் தான் நத்திங் நிறுவனம் மிகவும் புகழ் பெற்றது. ஐபோனுக்கு போட்டியாக இருக்கும் என நத்திங் போன் 1 அறிமுகமானது. தொடர்ந்து மற்றொரு இயர்பட்ஸ் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகமானது.

அமோக வரவேற்பை பெற்ற நத்திங் போன் 1

Nothing Phone (1) அறிமுகமான தினத்தில் இருந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்களில் ஒருசில குறைபாடுகள் குறிப்பட்டாலும் விலைக்கேற்ற அம்சங்கள் இதில் இருக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது.

நத்திங் போன் (1) வரவேற்புக்கு காரணம் என்ன?

நத்திங் போன் (1) வரவேற்புக்கு காரணம் என்ன?

கட்டுப்பாடு தன்மையில் சில சிக்கல்களை சந்தித்து வருவதாக நத்திங் போன் (1) மீது புகார்கள் எழுந்தது. தொடர்ந்து இதை சரி செய்யும் வகையில் நத்திங் போன் (1) மூன்றுக்கும் மேற்பட்ட புதுப்பிப்புகளை வெளியிட்டது. ஸ்மார்ட்போனில் கோளாறு என்றதும் நத்திங் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்தது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகளில் எந்த குறைபாடும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ரூ.1000 என்ற வீதம் அதிகரிப்பு

ரூ.1000 என்ற வீதம் அதிகரிப்பு

Nothing Phone (1)க்கு கிடைத்த நல்ல வரவேற்புக்கு மத்தியில் இதன் விலையையும் நிறுவனம் சமீபத்தில் உயர்த்தி அறிவித்தது. Nothing Phone (1) விலை ஆனது ரூ.1000 என்ற வீதம் ஒவ்வொரு வேரியண்ட்-க்கும் உயர்த்தப்பட்டது.

நத்திங் விலை விவரம்

நத்திங் விலை விவரம்

அதன்படி 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.32,999 என இருந்த நிலையில் தற்போது ரூ.33,999 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.33,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.39,999 எனவும் உயர்த்தப்பட்டது.

விலையை அதிகரிக்க காரணம் என்ன?

விலையை அதிகரிக்க காரணம் என்ன?

இந்த போனின் விலை உயர்த்தப்பட்டதற்கு காரணத்தை நத்திங் நிறுவனம் தெரிவித்தது. அதில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நாணய மாற்று (currency exchange) விகிதங்கள், ஸ்மார்ட்போன் இயக்க பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற பொருளாதார காரணங்களால் இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்பட்டது.

பொருளாதார நிலை

பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பெரும்பாலான நிறுவனங்கள் எடுக்கும் முடிவு தான் இது. தற்போதைய சூழ்நிலைக்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்மார்ட்போன் விலையில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என நத்திங் அறிக்கை வெளியிட்டது.

நத்திங் போன் 1 வாங்கலாமா?

நத்திங் போன் 1 வாங்கலாமா?

ஐபோனுக்கு இணை போட்டியாக இருக்கும் என நத்திங் போன் (1) அறிமுகம் செய்யப்பட்டது. அந்தளவிற்கு போட்டியை ஏற்படுத்தியதா என்றால் அது கேள்விக்குறி தான். இருப்பினும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. டூயல் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் என பல மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Nothing announced that it has sold 1 million Nothing products since 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X