Home
News

நல்ல ஐடியா சொன்னா ரூ.1,10,000 ரொக்கப் பரிசு.. Nothing-ன் ஸ்பெஷல் எடிஷன் போன்.. ஏப்.23 க்குள் சமர்ப்பிக்கனும்!

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றின் கம்யூனிட்டி எடிஷனை அறிவித்துள்ளது. அது நத்திங் போன் 3ஏ மாடல் (Nothing Phone 3a Community Edition) ஆகும். நினைவூட்டும் வண்ணம் இது நத்திங் நிறுவனத்தின் 2வது கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக நத்திங் போன் 2ஏ கம்யூனிட்டி எடிஷன் அறிமுகமாகி இருந்தது

நத்திங் நிறுவனம் அதன் போன் 3ஏ கம்யூனிட்டி எடிஷன் புரோகிராமை நான்கு நிலைகளில் நடத்த உள்ளது. மேலும் பங்கேற்பாளர்கள் இன்று முதல் தங்கள் யோசனைகளை சமர்ப்பிக்கலாம். நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் இந்த ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்த, வெவ்வேறு கட்டங்களில் - நத்திங் கம்யூனிட்டியிடம் இருந்து ஹார்ட்வேர் வடிவமைப்பு, அக்ஸசரீ வடிவமைப்பு, வால்பேப்பர் வடிவமைப்பு மற்றும் மார்க்கெட்டிங் பற்றிய யோசனைகளை நத்திங் எடுத்துக்கொள்ளும்.

ஐடியா சொன்னா ரூ.1,10,000 ரொக்கப் பரிசு.. Nothing-ன் ஸ்பெஷல் எடிஷன்!

ஒவ்வொரு நிலைகளின் வெற்றியாளர்களும், தங்கள் யோசனைகளுக்கு "உயிர் கொடுக்க" உதவுவதற்காக நத்திங் குழுவுடன் நேரடியாக வேலை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். ஆர்வமுள்ள பயனர்கள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 23 வரை, நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் புதிய வெர்ஷனை வடிவமைக்க தங்கள் யோசனைகளை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, கடந்த ஆண்டை போலவே, நத்திங் கம்யூனிட்டி வெர்ஷன் ப்ரோகிராம் ஆனது ஹார்ட்வேர் வடிவமைப்பில் தொடங்கி நான்கு நிலைகளில் நடத்தப்படும். ஹார்ட்வேர் வடிவமைப்பு பங்கேற்பாளர்கள் - நத்திங் குழுவுடன் இணைந்து நத்திங் போன் 3ஏ பற்றிய தங்கள் கான்செப்ட்களை நடைமுறைக்கு கொண்டுவரலாம்.

அக்சஸரீ வடிவமைப்பு என்பது, நத்திங் போன் 3ஏ கம்யூனிட்டி எடிஷன் உடன் அனுப்ப ஒரு பிரத்யேக கலெக்டபிள் அல்லது அக்சஸரீயை உருவாக்குவதை உள்ளடக்கியது. சாஃப்ட்வேர் வடிவமைப்பில் வால்பேப்பர் வடிவமைப்பு, விட்ஜெட்டுகள் ஆகியவைகள் அடங்கும். மார்க்கெட்டிங் பிரச்சார கட்டத்தில், நத்திங்கின் இந்த ஸ்பெஷல் எடிஷனின் சந்தைப்படுத்தல் குறித்த யோசனைகளை பிராண்ட் ஏற்றுக்கொள்ளும். கடைசியாக வெற்றியாளர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

Take a Poll

முன்னரே குறிப்பிட்டபடி மார்ச் 2024 இல் நத்திங் அதன் கம்யூனிட்டி எடிஷன் ப்ரோகிராமை தொடங்கியது மற்றும் கடந்த ஆண்டு அக்டோபரில் நத்திங் போன் 2ஏ பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் இருட்டில் ஒளிரும் வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் வெறும் 1000 யூனிட்டுகள் மட்டுமே வாங்க கிடைத்தன.

நத்திங் போன் 2ஏ பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 29,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்று இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. நத்திங் நிறுவனம், அதன் நத்திங் போன் 2ஏ பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனில் பின்பற்றிய விஷயங்களை அப்படியே பின்பற்றும் பட்சத்தில், நத்திங் போன் 3ஏ கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம்.

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒயிட், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

நத்திங் போன் 3ஏ முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2392 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஸ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.77-இன்ச் அமோஎல்இடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது

இதில் OIS + EIS ஆதரவு உடனான 50ம்பி சாம்சங் ப்ரைமரி சென்சார் + 50எம்பி சாம்சங் டெலிஃபோட்டோ லென்ஸ் (2எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 4எக்ஸ் இன்-சென்சார் ஜூம், 30எக்ஸ் அல்ட்ரா ஜூம்) + 8எம்பி சோனி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி சாம்சங் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 19 நிமிடங்களில் 50% பேட்டரியை சார்ஜ் செய்யும் என்றும், 56 நிமிடங்களில் நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங்ஓஎஸ் 3.1 கொண்டு இயங்குகிறது. இதற்கு 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரைநத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, என்எப்சி, வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது, இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பை வழங்கும். கடைசியாக இது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் "மெதுவான" யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜி (UFS 2.2 Storage) தான் என்கிற புகார்களும் எழுந்துள்ளன. இதன்விளைவாக, நத்திங் போன் 3ஏ சீரீஸில் ஏன் யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற விளக்கத்தை நத்திங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நத்திங் நிறுவனத்தின் விளக்கமானது "செலவுகளை கணிசமாக அதிகரிக்காமல் எந்த சாதனமும் எல்லாவற்றிலும் முழுமையான சிறந்ததை பெற முடியாது" என்பதை தெளிவாக எடுத்துரைக்கும்படி இருக்கிறது. இருப்பினும், இந்த பிராண்ட் அதன் யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜை தேர்வு செய்தது "செலவுகளை குறைப்பதற்காக அல்ல, மாறாக வளங்களை மிகவும் முக்கியமான இடத்தில் வைப்பதற்காக" என்றும் கூறியுள்ளது.

ஒட்டுமொத்த செயல்திறனுடன் தொடர்புடைய பல காரணிகளில் ஸ்டோரேஜ் வேகமும் ஒன்று என்பதை நத்திங் ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், ஒரு ஸ்மார்ட்போனின் மென்பொருளை பயன்படுத்தும் போது ஒட்டுமொத்த செயல்திறன் உணர்வானது - ஸ்டோரேஜ், ரேம், சிபியு மற்றும் சாஃப்ட்வேர் ஆப்டிமைசேஷன் ஆகியவற்றின் கலவையாகும் என்றும் நத்திங் விளக்கம் அளித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Announced Phone 3a Community Edition Project New Ideas Accepted Till 2025 April 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X