Home
News

ஜூன் 15 வரை Now or Nothing சேல்.. நத்திங், CMF போன்கள், இயர்பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச்கள் மீது பலே டிஸ்கவுண்ட்!

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலை வருகிற ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் இந்நிறுவனம் நொவ் ஆர் நத்திங் (Now or Nothing) என்கிற விற்பனையை அறிவித்துள்ளது

இதன்கீழ் பல நத்திங் மற்றும் சிஎம்எப் பிராண்டட் தயாரிப்புகள் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் மற்ற எல்லா சிறப்பு விற்பனைகளை போலவும் இதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அணுக கிடைக்கும். இன்று (ஜூன் 11) தொடங்கிய இந்த விற்பனை ஜூன் 15 ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!

ஜூன் 15 வரை Now or Nothing சேல்.. பலே டிஸ்கவுண்ட்!

நத்திங்கின் நொவ் ஆர் நத்திங் விற்பனையின் கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்க்கிறது? இந்த விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) மாடலை ரூ.26,999 க்கு பெறலாம். நினைவூட்டும் வண்ணம் இதன் வெளியீட்டு விலை ரூ. 29,999 ஆகும். இந்த சலுகையில் ரூ.1,000 விலை தள்ளுபடி மற்றும் ரூ.2,000 வங்கி சலுகை ஆகியவை அடங்கும்

இதேபோல 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 என்கிற விலையில் அறிமுகமான நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.2,000 வங்கி சலுகையின் கீழ், இந்த விற்பனையின் போது ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும். இதே ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) மாடலை ரூ.17,999 க்கு வாங்க முடியும். இது ரூ.1,000 வங்கி சலுகையை பெற்று அறிமுக விலையான ரூ.18,999 இலிருந்து குறைந்துள்ளது.

நத்திங்கின் நொவ் ஆர் நத்திங் விற்பனையின் கீழ் என்னென்ன இயர்பட்ஸ் மீது சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்க்கிறது? நத்திங் ஐயர் (Nothing Ear) மற்றும் நத்திங் இயர் ஏ (Nothing Ear A) ஆகியவைகள் முறையே ரூ.11,999 மற்றும் ரூ.7,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த விற்பனையின் போது அவைகள் முறையே ரூ.8,499 மற்றும் ரூ.5,499 க்கு வாங்க கிடைக்கும்,

இதேபோல சிஎம்எப் பட்ஸ் (CMF Buds), சிஎம்எப் பட்ஸ் ப்ரோ (CMF Buds Pro) மற்றும் சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 (CMF Buds Pro 2) ஆகியவைகள் முறையே ரூ.1,999, ரூ.2,499 மற்றும் ரூ.3,499 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த விற்பனையின் போது, சிஎம்எப் நெக்பேண்ட் ப்ரோ (CMF Neckband Pro) ரூ.1,899 க்கு வாங்க கிடைக்கிறது

நத்திங்கின் நொவ் ஆர் நத்திங் விற்பனையின் கீழ் என்னென்ன வாட்ச் மற்றும் ஆக்சஸெரீஸ் மீது சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்க்கிறது? சிஎம்எப் வாட்ச் ப்ரோ மற்றும் சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 மாடல்கள் முறையே ரூ.2,999 மற்றும் ரூ.4,199 க்கு வாங்க கிடைக்கிறது

மேலும் 100W மற்றும் 140W நத்திங் சார்ஜர்கள் முறையே ரூ.2,999 மற்றும் ரூ.3,499 க்கும், சிஎம்எப் பவர் 33W, 45W மற்றும் 65W சார்ஜர்கள் முறையே ரூ.999, ரூ.2,299 மற்றும் ரூ.2,499 என்கிற ஆபர் விலையிலும் வாங்க கிடைக்கிறது. கடைசியாக 1m மற்றும் 1.8m சிஎம்எப் கேபிள்களை முறையே ரூ.599 மற்றும் ரூ.799 என்கிற விலையில் வாங்கலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி இந்த விற்பனை ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை மட்டுமே நடக்கும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், பிளிப்கார்ட் மினிட்ஸ், மின்த்ரா, விஜய் சேல்ஸ், க்ரோமா மற்றும் நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் விற்பனை கடைகளின் வழியாக தள்ளுபடி செய்யப்பட்ட நத்திங் மற்றும் சிஎம்எப் தயாரிப்புகளை வாங்கலாம். ஐசிஐசிஐ (ICICI) வங்கி, எஸ்பிஐ (SBI) கார்டு மற்றும் ஐடிஎப்சி (IDFC) ஃபர்ஸ்ட் பேங்க் வாடிக்கையாளர்கள் மேற்கூறிய வங்கி சலுகைகளை பெற முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Announced Now or Nothing Sale Discounts on Nothing CMF Phones Buds Watches Until June 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X