பிளிப்கார்ட் மூலம் விற்பனை உறுதி: மாறுபட்ட வித்தியாசமான Nothing Phone 1- இது வேற மாதிரி!
பிளிப்கார்ட் தளம் மூலமாக இந்தியாவில் Nothing Phone 1 விற்பனைக்கு வரும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் Nothing Phone 1 அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் Nothing Phone 1 விற்பனை
பிளிப்கார்ட் தளம் மூலமாக இந்தியாவில் Nothing Phone 1 விற்பனைக்கு வரும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. நிறுவனத்தின் இந்த முதல் Nothing Phone 1 ஆனது யூகே-ல் ஓ2 மற்றும் ஜெர்மனியில் டெலிகாம் டியூட்ஸ்ச்லேண்ட் ஆகியவற்றில் பிரத்யேகமாக விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் நத்திங் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்களை கடந்த ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனானது நத்திங் ஓஎஸ் எனப்படும் தனிப்பயன் ஆண்ட்ராய்டு பதிப்பு மூலம் இயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி ஆதரவு
Nothing Phone 1 குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி மூலம் இது இயக்கப்படும். அதேபோல் இதன் விலை, கிடைக்கும் தன்மை மற்றும் கூட்டாளர்கள் சலுகை உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் என நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த சாதனத்துக்கான பிரத்யேக பார்ட்னராக பிளிப்கார்ட் இருக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் தளம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை டீஸ் செய்ய பிரத்யேக வலைப்பக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் நத்திங் ஃபோன் 1 வெளியீடு 2022 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விவரக்குறிப்புகள், விலைகள் குறித்த எந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி உடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

நத்திங் ஓஎஸ் குறித்த விவரம்
இருப்பினும் Nothing Phone 1 குறித்து முன்னதாக வெளியான சில தகவல்களை பார்க்கலாம். லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங், அதன் முதல் ஸ்மார்ட்போனான போன்(1)-ஐ அறிமுகப்படுத்தும் திட்டத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த சாதனம் குவால்காமின் ஸ்னாப்டிராகன் மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகிறது. நத்திங் ஃபோன் (1) என்பது நிறுவனத்தின் தயாரிப்பு அமைப்பின் கீழ் இரண்டாவது சாதனமாகும். ஃபோன் (1) சாதனம் கோடை காலத்தில் வெளியாகும் எனவும் நத்திங் ஓஎஸ் குறித்த கூடுதல் விவரங்களையும் பார்க்கலாம். இந்த தகவல் ஆனது மார்ச் 23 அன்று நடைபெற்ற நத்திங் நிகழ்ச்சியில் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் கார்ல் பெய் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் லைட் மற்றும் வெயிட்டான நத்திங் ஓஎஸ் இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சந்தையில் மாற்றத்தை விதைக்க போன் (1)
நத்திங் நிறுவனம் சாதனம் ஆப்பிள் சாதனங்களுக்கு இணையாகும் போட்டிப் போடும் விதமாகவும் வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து தலைமை செயல் அலுவலர் கார்ல் பெல், 300 பேர் கொண்ட குழுவை உருவாக்கி குவால்காம் டெக்னாலஜிஸ், இன்க் போன்ற நம்பகமான கூட்டாளர்களின் ஆதரவைப் பெற்ற பிறகு, தூக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் மாற்றத்தை விதைக்க போன் (1) சாதனத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டார். மேலும் ஸ்மார்ட்போன் சந்தை அபார வளர்ச்சியை கண்டிருக்கிறது, இருப்பினும் அவை எதுவும் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் எனது எதிர்பார்ப்பு தனது பயனர்கள் உடையது எனவும் கூறினார். மேலும் அவர்கள் விரும்பும் புதிய கண்டுபிடிப்புகள் தற்போதுவரை வெளிவரவில்லை என நத்திங் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவர் கார்ல் பெல் குறிப்பிட்டார். நாங்கள் ஒரு புதிய 10 மில்லியன் டாலர் சுற்று சமூக முதலீட்டை செய்கிறோம் இதன் மூலம் தங்கள் ஆதரவாளர்கல் தொழில்துறையின் ஜாம்பவான்களுக்கு எதிராக நேருக்கு நேர் பயணிக்க இருக்க வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறினார்.

சிறந்த போன்கள் வெளியிடும் பிராண்டுகள்
மேலும் கார்ல் பெல் தெரிவித்த தகவல் குறித்து பார்க்கையில், சிறந்த போன்கள் வெளியிடும் பிராண்டுகள் என வாடிக்கையாளர்கள் ஒரு சிலவற்றை மட்டுமே நம்பி இருக்கின்றனர். ஆனால் அவைகள் பயனர்களுக்கு என புதிய மாற்றம் என எதையும் அறிமுகம் செய்யவில்லை குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து புதிய ஸ்மார்ட்போன் என சந்தையில் அறிமுகம் செய்கின்றனர். இந்த நிலையை மாற்றம் செய்வதுற்கு என நத்திங் வந்திருக்கிறது. நத்திங்-ன் முதல் ஸ்மார்ட்போனான நத்திங் போன் 1 விரைவில் சந்தைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கு என பிரத்யேகமாக ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓஎஸ் பிற ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications