Home
News

ஓ இதுக்கு தான் இவ்ளோ பில்டப்-ஆ! 60 ஆண்டுக்கு பிறகு NOKIA லோகோ மாற்றப்பட என்ன காரணம்?

ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு முன்னால்.. உலகளாவிய மொபைல் சந்தையை ஆட்சி செய்து வந்த நோக்கியா (NOKIA), தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது. இதற்கிடையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தனது லோகோவை (Logo) முழுவதுமான மாற்றியுள்ளது!

நோக்கியா பிராண்டிங்கின் கீழ் அறிமுகமான முதல் சில ஸ்மார்ட்போன்கள் கூட இவ்வளவு பரபரப்பாக பேசப்படுவில்லை. ஆனால் நோக்கியாவின் புதிய லோகோவானது - நோக்கியா ரசிகர்கள் / வாடிக்கையாளர்கள் மற்றும் டெக்னாலஜி ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகி மாறியுள்ளது.

60 ஆண்டுக்கு பிறகு NOKIA தன் லோகோவை மாற்ற என்ன காரணம்?

நோக்கியாவின் இந்த லோகோ மாற்றத்திற்கு என்ன காரணம்?

பெக்கா லண்ட்மார்க் (Pekka Lundmark) நோக்கியாவின் தொலைத்தொடர்பு உபகரண பிரிவை கைப்பற்றி, நோக்கியாவின் ப்ரெஸிடென்ட் மற்றும் சிஇஓ-வான பிறகு மூன்று கட்டத்திட்டத்தை வகுத்து இருந்தார்: மீட்டமைத்தல் (Reset), முடுக்கிவிடுதல் (Accelerate) மற்றும் வளர்ச்சி அடைதல் (Scale).

பெக்கா லண்ட்மார்க்கின் திட்டத்தின் முதல் பகுதி முடிவடைந்த நிலையில், நோக்கியா இப்போது முடுக்கிவிடுவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் அதனொரு பகுதியாக 60 ஆண்டுகளுக்கு பிறகு நோக்கியா நிறுவனத்தின் லோகோ முற்றிலுமாக, புத்தம் புதிய வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

நோக்கியா என்றாலே நம் நினைவிற்கு வரும் நீல நிறம், நோக்கியாவின் லோகோவில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியாவின் புதிய லோகோவில் எந்தவொரு குறிப்பிட்ட வண்ணமும் சேர்க்கப்படவில்லை. இந்த புதிய லோகோ மாற்றத்திற்கான காரணத்தையும் பெக்கா லண்ட்மார்க் வெளிப்படுத்தியுள்ளார்.

"நோக்கியா இனிமேல் வெறும் ஸ்மார்ட்போன் நிறுவனம் மட்டுமல்ல, ஒரு வணிக தொழில்நுட்ப நிறுவனமாகும்" என்று பெக்கா லண்ட்மார்க் கூறி உள்ளார். அதாவது இந்நிறுவனம் தனது தொலைத்தொடர்பு உபகரண வணிகத்தை வளர்ப்பதோடு சேர்த்து மற்ற வணிகங்களுக்கு கியர்களை (பாகங்களை) விற்பனை செய்வதிலும் கவனம் செலுத்தப்போகிறது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நோக்கியா நிறுவனமானது, தனியார் 5ஜி நெட்வொர்க்குகள் மற்றும் ஆட்டோமேடட் தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களை விற்பனை செய்யவுள்ளது. நோக்கியாவின் இந்த நடவடிக்கை இதே துறையில் உள்ள மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் அமேசானுக்கு (Amazon) கடும் போட்டியை வழங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தையிலும் புத்தி யுக்திகளை களமிறக்கும் நோக்கியா

புதிய லோகோவுடன் சேர்த்து நோக்கியா நிறுவனம் 3 புதிய ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்துள்ளது. அந்த 3 போன்களுமே நோக்கியாவின் புதிய யுத்திகளின் கீழ் வெளிவருவது போல் தெரிகிறது. ஏனென்றால் அவைகள் அனைத்துமே 3 வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன; ஆனால் மூன்றுமே ரூ.15,000 க்குள் என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நோக்கியா ஜி22 (Nokia G22) ஸ்மார்ட்போனானது மிகவும் எளிதாக பழுதுபார்க்கக்கூடிய ஒரு போனாகவும், நோக்கியா சி32 (Nokia C32) மாடலானது சி-சீரீஸின் வெளியான மிகச்சிறந்த கேமரா போனாகவும், நோக்கியா சி22 (Nokia C22) ஆனது ஒரு திடமான ஸ்மார்ட்போனாகவும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை நோக்கியா சி22 ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ 11,310 க்கும், நோக்கியா சி32 ஸ்மார்ட்போனானது சுமார் ரூ 12,190 க்கும், கடைசியாக உள்ள நோக்கியா ஜி22 ஸ்மார்ட்போனானது தோராயமாக ரூ 15,700 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Not Only A Smartphone Making Company Nokia Changed Its Iconic Blue Color Logo After 60 Years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X