இதுதான் அம்பானியின் மாஸ்டர் பிளான், ஜியோவின் பின்னணி என்ன.?!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தொடங்கி இலவச சிம் கார்டுகள் மற்றும் இலவச சலுகைகளை வழங்குவது மட்டும்தான் அம்பானியின் திட்டமென்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
இந்தியாவில் நிகழ்த்தப்படப்போகும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடையை முகேஷ் அம்பானி முன்பே அறிவார். அதனால் தான் சரியான நேரம் பார்த்து தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த கருப்பு பணத்தையும் ரிலையன்ஸ் ஜியோ என்ற பெயரில் காலி செய்து விட்டார் என்று வாட்ஸ்ஆப்பில் 'புரட்சி' செய்தி ஒன்று வலம் வந்தது. ஆனால், நிஜமான புரட்சியை உண்டாக்க போவது முகேஷ் அம்பானி தான்..!
சிம் அட்டையும் இலவசமாக கொடுத்து அறிமுக சலுகையாக தரவு, அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் என அனைத்தையும் இலவசமாக வழங்கி இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு மாபெரும் புயலை கிளப்பிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் வெறும் சிம் அட்டைகளை விற்பதைதான் நோக்கமாக கொண்டுள்ளது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. ஆர் ஜியோ அறிமுகம் மற்றும் வளர்ச்சி மூலம் எதிர்கால இந்தியாவிற்கான மாபெரும் திட்டங்களை முகேஷ் அம்பானி வகுத்துள்ளார். அம்பானி என்ற மாஸ்டர் மைண்ட்டின் மாஸ்டர் பிளான் என்னென்ன.?

#01 சூப்பர் மலிவான ஸ்மார்ட்போன்
இந்தியாவின் கிராமப்புற பகுதிகளையும் முழுமையாக சென்றடையும் வண்ணம் 4ஜி ஆதரவு வழங்கும் சூப்பர் மலிவான ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளார்

#02 சுற்றுச்சூழல்
ஒரு முழுமையான சுற்றுச்சூழல் மென்பொருள் மற்றும் வன்பொருள் துவங்க திட்டமிட்டுள்ளார்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#03 பைபர் வயர்
ஒரு மலிவு பிராட்பேண்ட் சேவையை தொடங்கி, நாடு முழுவதையும் இழை கம்பி (பைபர் வயர்) மூலம் இணைக்கப் திட்டமிட்டுள்ளார்.

#04 இண்டர்நெட் ஆப் திங்ஸ்
ஐஓடி (IoT) எனப்படும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் தயாரிப்புகளை அறிமுகம் செய்து அதன் மூலமாக அனைத்து வகையான உபகரணங்களுடனும் கம்யூனிகேட் நிகழ்த்த வைக்க திட்டமிட்டுள்ளார்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#05 ஆப்ஸ்
பொழுதுபோக்கில் இருந்து சுகாதார சேவைகள் வரையிலாக ஒரு 360 டிகிரி கோணங்களிலும் பயனளிக்கும் ஆப்ஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க
ஜியோ டிடிஎச் விரைவில்.. கையில் ரூ.185/-யை ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.!


Click it and Unblock the Notifications