திடீரென்று சாம்பல் நிறத்திற்கு மாறிய Google லோகோ! என்ன காரணம்?

|

கூகுள் ஹோம் பேஜை (Google Home Page) நன்றாக கவனித்தீர்களா?

ஏதோவொன்றை பற்றி சேர்ச் (Search) செய்வதற்காகவோ அல்லது லேட்டஸ்ட் செய்திகளை படிப்பதற்காகவோ.. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அல்லது உங்கள் பிசி / லேப்டாப்பில் கூகுளை திறக்கும் போது..

கூகுள் சேர்ச் பக்கத்தில் இருக்கும் Google லோகோவானது க்ரே கலரில், அதாவது சாம்பல் நிறத்தில் இருப்பதை கவனித்தீர்களா?

அதை 'டெக்னீக்கல் இஷ்ஷூ' என்று நினைத்து விட்டீர்களா?

அதை 'டெக்னீக்கல் இஷ்ஷூ' என்று நினைத்து விட்டீர்களா?

சாம்பல் நிறத்தில் இருந்த கூகுள் லோகோவை பார்த்துவிட்டு அதை ஒரு டெக்னீக்கல் இஷ்ஷூ (தொழில்நுட்ப கோளாறு) என்று நீங்கள் நினைத்து இருக்கலாம்.

குறிப்பாக உங்களின் பிசி / லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போனில், டார்க் மோட் (Dark Mode) எனேபிள் செய்யப்பட்டு இருந்தால்.. உங்களில் பலரும் "இதை" ஒரு 'டெக்னீக்கல் இஷ்ஷூ' என்றே நினைத்து இருப்பீர்கள்!

சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!

ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும்!

ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும்!

ஆம்! உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம். கூகுள் சேர்ச் பக்கத்தில் இருக்கும் கூகுள் லோகோவானது கூகுள் டூடுலும் (Google Doodle) கூட என்று!

அதாவது முக்கியமான மனிதர்களின் பிறந்த நாள், நினைவு நாள் வரும் போது அவர்களை நினைவுக்கோரும் வண்ணம் கூகுள் டூடுல் வெளியாகும். கூகுள் டூடுல்கள் ஆனது முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளையும் கூட கூகுள் டூடுலாக வெளியிடும்!

அப்படியான ஒரு டூடுல் தான் சாம்பல் நிறத்திலான Google லோகோ!

அப்படியான ஒரு டூடுல் தான் சாம்பல் நிறத்திலான Google லோகோ!

ஆம்! பிரித்தானியாவை மிக நீண்ட காலமாக "ஆட்சி செய்த" இரண்டாம் எலிசபெத் மகாராணி, இந்த வார தொடக்கத்தில் காலமானார்.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தான், கூகுள் நிறுவனம் தனது ஹோம் பேஜின் (Search Page) வண்ணங்களை மாற்றியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

வண்ண மயமான கூகுள்

வண்ண மயமான கூகுள் "சாம்பலால்" சூழ்ந்தது!

எப்போதும் வண்ணமயமாக காட்சியளிக்கும் கூகுள் லோகோவானது, எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தின் கீழ் முற்றிலும் சாம்பல் நிறத்தில் காட்சி அளிக்கிறது.

சாம்பல் நிறத்திலான இந்த கூகுள் டூடுல் இந்தியாவிலும் தோன்றியதால், இந்த மாற்றம் உலகளாவியதாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. அதாவது இந்த டூடுல் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரிந்து இருக்கலாம்!

சுந்தர் பிச்சையின் ட்வீட்!

சுந்தர் பிச்சையின் ட்வீட்!

இந்த கூகுள் டூடூலுக்கு முன்னதாகவே, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன சுந்தர் பிச்சை ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

"இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்காக, இங்கிலாந்து மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று சுந்தர் பிச்சை ட்வீட் செய்து உள்ளார். .

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

ஆப்பிள் செய்த அஞ்சலி!

ஆப்பிள் செய்த அஞ்சலி!

ஆப்பிள் நிறுவனமும் தனது ஹோம் பேஜை மாற்றி, இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம் பேஜில், இரண்டாம் எலிசபெத் ராணியின் இளமை கால புகைப்படமும், அதனுடன் ஒரு நினைவு செய்தியும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

ஆகஸ்ட் 15-க்கும் கூட ஒரு கூகுள் டூடுல் வெளியானது!

ஆகஸ்ட் 15-க்கும் கூட ஒரு கூகுள் டூடுல் வெளியானது!

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள் டூடுல் ஒன்றும் வெளியானது.

காத்தாடிகளை "சுற்றியுள்ள" இந்திய கலாச்சாரத்தை சித்தரித்த அந்த டூடுலை கேரளாவை சேர்ந்த 'கெஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' ஆன நீதி (Neethi) வரைந்து இருந்தார்.

Best Mobiles in India

English summary
Google Logo in Search Home Page Turned Into Grey Colour, Here is Why

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X