அம்பானிக்கு ஒ போடும் Jio கஸ்டமர்கள்.. அடுத்த 6 மாசத்துக்கு நன்மைகள்.. ரூ.100 க்கு 30 நாள் வேலிடிட்டி!
ரூ.77 மதிப்புள்ள புதிய ஜியோ ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதும், அதற்கு அடுத்தபடியான விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டமானது (ஜியோ கஸ்டமர்கள் மத்தியில்) கவனம் பெற்று வருகிறது. ஏனென்றால் இது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியை மட்டுமின்றி 6 மாத காலம் வரை நீடிக்கும் இலவச நன்மைகளையும் வழங்குகிறது!
இந்தியா முழுவதும் உள்ள ஜியோ கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.100 ரீசார்ஜ் ஆனது நுகர்வோர்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும் ஒரு திட்டம் அல்ல. அதாவது இதுவொரு டேட்டா பேக் ஆகும். ஆனால் சுவாரசியமாக இது டேட்டா நன்மையை தவிர.. மற்ற கூடுதல் நன்மைகளைத்தான் அதிகமாக வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.100 ப்ரீபெய்ட் திட்டத்தின் விரிவான நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டமானது 5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 30 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் இந்த திட்டம் 30 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி ஓடிடி சந்தாவையும் இலவசமாக வழங்கும்.
இதோடு ரூ.100 திட்டத்தின் நன்மைகள் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.100 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் ஜியோ கஸ்டமர்களுக்கு ஜியோ நிறுவனத்திடமிருந்து கீழ்வரும் 7 சலுகைகளும் கிடைக்கும்:
1. +91-8010000524 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் ஜியோ கோல்டில் 2% எக்ஸ்ட்ரா பெறலாம்
2. புதிய ஜியோஹோம் கனெக்ஷனை பெற்றால் 2 மாத இலவச சோதனை கிடைக்கும்
3. ரிலையன்ஸ் டிஜிட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு தயாரிப்புகளில் ரூ.399 தள்ளுபடி
4. அஜியோவில் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு ரூ.1000 ஆக இருந்தால் ரூ.200 தள்ளுபடி
5. மூன்று மாத காலத்திற்கான இலவச ஜொமாடோ கோல்ட் சந்தா
6. ஒரு மாத கால ஜியோசாவ்ன் ப்ரோ இலவச சந்தா
7. ஆறு மாத காலத்திற்கான இலவச நெட்மெட்ஸ் பர்ஸ்ட் மெம்பர்ஷிப்
8. ஈஸ்மைட்ரிப் வழியாக உள்நாட்டு விமானங்களில் ரூ.2220 தள்ளுபடி மற்றும் ஹோட்டல்களில் 15% தள்ளுபடி
ரூ.100 ரீசார்ஜ்ஜின் கீழ் கிடைக்கும் 5ஜிபி டேட்டாவை நீங்கள் உபயோகப்படுத்தியதற்கு பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்னட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறையும். நினைவூட்டும் வண்ணம் இது ஜியோ சேவையின் கீழ் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஒரு புதிய திட்டம். ரிலையன்ஸ் ஜியோவின் 9 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டது.
ஜியோவின் புதிய ரூ.77 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.100-ஐ போலவே ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.77 ப்ரீபெய்ட் திட்டமும் ஒரு டேட்டா பேக் ஆகும். இதன் கீழ் மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்; கூடவே இது சோனி லைவ் ஓடிடி-க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது
கவனிக்கத்தக்க வைகையில் ரூ.77 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 5ஜிபி அளவிலான டேட்டா நன்மை ஆனது பயனர்களுக்கு வெறும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். ஆனால் இதன் கீழ் கிடைக்கும் சோனி லைவ் ஓடிடி-க்கான (SonyLIV OTT ) இலவச சந்தாவானது 30 நாட்களுக்கு நீடிக்கும்.
சோனி லைவ் ஓடிடி-யில் உள்ள கன்டென்ட்களை தைபார்க்க ஆர்வமுள்ள பயனர்கள் அதை ஜியோடிவி ஆப் மூலம் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். நினைவூட்டும் வண்ணம், ஜியோடிவி ஆப் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய 2 வகை பயனர்களுக்கும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியா இன்ஸ்டால் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








