Home
News

இந்தியாவிலேயே முதலும் கடைசியுமாக.. ரூ.200 க்கு போஸ்ட்பெய்ட் பிளான்.. Jio, Airtel-ஐ கட்டம் போட்டு தூக்கிய BSNL!

இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது, நாட்டிலேயே மிக குறைந்த விலையிலான போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டத்தை (Postpaid mobile plan) வழங்குகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள் இந்நிறுவனத்தின் மீது விசுவாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது தொடர்ந்து பிஎஸ்என்எல்-ன் சேவையின் கீழ் இருக்கிறார்கள்; பெரும்பாலும் வேறு நிறுவனங்களின் சேவைக்கு மாறுவதில்லை. அதோடு அவர்கள் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) வளர்ச்சிக்காகவும் பங்களிக்கின்றனர்.

BSNL: ரூ.200 க்கு போஸ்ட்பெய்ட் பிளான்!

பொதுவாக, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரூ.400 என்ற ஆரம்ப விலையில் வழங்குகின்றன; ஆனால் பிஎஸ்என்எல் இதை 50% குறைவான விலையில், அதாவது ரூ.200-க்கு வழங்குகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் மிக குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டம் மாதத்திற்கு ரூ.199 ஆகும்.

இது பயனர்களுக்கு ஒரு நிலையான மாத கட்டணமாக அமைகிறது. சுவாரசியமாக இதில் 'டேட்டா ரோல்ஓவர்' (data rollover) வசதியும் உள்ளது. இதில் வழங்கப்படும் டேட்டா அளவு குறைவாக இருந்தாலும், அதன் விலையை கருத்தில் கொள்ளும்போது நுகர்வோர் அதைப்பற்றி குறை கூற வாய்ப்பில்லை. சரி வாருங்கள் - பிஎஸ்என்எல்-இன் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகளை விரிவாக பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.199 போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல் -இன் ரூ.199 போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு (unlimited voice calling) வசதியுடன் வருகிறது. இத்திட்டத்தில் கூடுதல் குடும்ப இணைப்புகள் (add-on family connections) எதுவும் சேர்க்கப்படவில்லை.

டேட்டா நன்மையை [பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் 25ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, அத்துடன் 75ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது. குறிப்பிட்ட டேட்டா லிமிட் (25ஜிபி) தீர்ந்த பிறகு, ஒரு எம்பி-க்கு 1 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதில் வரம்பற்ற குரல் அழைப்பு வசதி பயனர்களுக்கு 24 மணி நேரமும் (வாரத்தின் அனைத்து நாட்களிலும்) கிடைக்கும். மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உள்ளது.

இந்த விலையில் போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டத்தை வழங்கும் வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இல்லை. இதன்கீழ் மாதத்திற்கு ரூ.199-க்கு, பயனர்கள் போதுமான அளவு டேட்டா மற்றும் பிற நன்மைகளை பெறுகிறார்கள். நாட்டின் பெரும்பாலான ப்ரீபெய்ட் (prepaid) திட்டங்களின் விலையும் தற்போது இதுபோலவே உள்ளது.

உதாரணமாக, ஏர்டெல் (Airtel) அல்லது ஜியோ (Jio)-வின் ரூ.199 திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், இவ்வளவு டேட்டாவுடன் முழு ஒரு மாத சேவை செல்லுபடியாகும் காலத்தை (service validity) பெற முடியாது. ரூ.199 திட்டம் ஒரு ஆரம்ப நிலைத் திட்டமாகும், ஆனால் நீங்கள் பிற விருப்பங்களையும் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு அடுத்தபடியாக பிஎஸ்என்எல்ன் ரூ.399 திட்டம் உள்ளது. இதில் அதிக அளவிலான டேட்டா கிடைக்கும்; அதாவது ரூ.199 திட்டத்தில் கிடைப்பதை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான டேட்டா இதில் வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ரூ.449 பிராட்பேண்ட் திட்டமும் உள்ளது. பிஎஸ்என்எல் ரூ.449 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ.449 பிராட்பேண்ட் திட்டம் 50 எம்பிபிஎஸ் ஸ்பீடை வழங்குகிறது. இதனுடன், பயனர்களுக்கு மாதந்தோறும் 3.3டிபி அல்லது 3300ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், இதில் வரம்பற்ற வாய்ஸ் காலிங் (Unlimited voice calling) நன்மையையும் உள்ளது

பிஎஸ்என்எல் நிறுவனம் இத்திட்டத்தை பைபர் பேசிக் நியோ (Fiber Basic Neo) திட்டம் என்று அழைக்கிறது. இது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்காமல் போகலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உங்கள் பகுதியில் இந்த திட்டம் கிடைத்தால் - நீங்கள் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்டின் கீழ் இருந்தால், இருக்க விரும்பினால் இது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

பிஎஸ்என்எல்-இன் ரூ.449 திட்டத்தை பிஎஸ்என்எல் செல்ப் கேர் (BSNL Self Care) ஆப் அல்லது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ரீசார்ஜ் செய்யலாம். ரூ.449 திட்டம் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு சிறந்த சிக்கனமான தேர்வாகும். பல டிவைஸ்களை இணைத்து பயன்படுத்தினாலும், இதன் 50 எம்பிபிஎஸ் வேகம் போதுமானதாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ஃபைபர் (Fiber) சேவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கிறது. புதிய இணைப்பை பெற அல்லது அதுகுறித்த விவரங்களை அறிய, உங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தையும் நீங்கள் அணுகலாம். நாட்டின் சில பகுதிகளில் பிஎஸ்என்எல் ஒரு சிறப்பு சலுகையை வழங்கி வருகிறது; இதன்படி, பிராட்பேண்ட் இணைப்புக்கான நிறுவல் கட்டணம் (installation charge) பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் இலவச ரவுட்டர் (router) அமைப்பும் அடங்கும். பயனர்கள் திட்டத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்; மற்ற சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Not Jio Airtel or Vi Only BSNL Doing this Cheapest Postpaid mobile plan Rs 199 See Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X