TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
1991-ஆம் ஆண்டு நாசா கேமிராவில் சிக்கிய 'ஏலியன்' ஆதாரம், தற்போது வெளியானது..!
பலரும் வேற்றுகிரக வாசிகள் மற்றும் யூஎஃப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகள் போன்றவைகளை வெறும் கட்டு கதைகள் என்றும், பொழுது போக்கிற்காக கிளப்பி விடப்படும் புரளிகள் என்றும் நம்புகின்றன. அது உண்மையெனில் ஏன் பல விஞ்ஞானிகள், இரவு-பகல் என தொடர்ச்சியான பல வருடங்களாக இது சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை பற்றியும் யோசிக்க வேண்டும்.
அதுவும் உலகம் முழுக்க இருக்கும் அரசாங்க செயலாண்மைகள் இது சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுகிறது எனில் ஏலியன்கள் என்பதில் மிகவும் பலமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன, இருந்து கொண்டே இருக்கின்றன என்று தானே அர்த்தம். தெளிவான ஆதாரம் கிடைக்காத வரை தான் எல்லாமே கட்டுகதைகள், ஆதாரம்ஒன்று கிடைத்து விட்டால் அதை நம்பித்தான் ஆக வேண்டும்.
பொது டொமைன்கள் :
கடந்த சமீப ஆண்டுகளாக பல்வேறு அரசு மற்றும் பாதுகாப்பு உளவுத்துறை மூலம் யூஎஃப்ஓ (UFO) சார்ந்த ஆயிரக்கணக்கான ஆதாரங்களையும், அது சாரந்த ஆவணங்களையும் பொது டொமைன்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றது.
விந்தை :
அப்படியான ஆதாரங்களில் ஒன்று தான், சமீபத்தில் வெளியான நாசாவின் வீடியோ ஒன்று. அந்த வீடியோவில் தோராயமாக டஜன் கணக்கான பொருட்கள் விந்தையான முறையில் நகர்வதை காண முடிகிறது.
விண்வெளி பொருள் :
அதில் மிகவும் கவனிக்கத்தக்க மற்றும் செயற்கையான ஒரு விண்வெளி பொருள் கடந்து செல்வதையும் தெளிவாக காண முடிகிறது.
உள்ளே புகுந்து :
அந்த பொருள் ஆனது உலகின் வளிமண்டலத்தின் உள்ளே புகுந்து முழுவதும் வேகமாக வெளியேறுவதை காண முடிகிறது.
1991 :
இந்த வீடியோ ஆதாரமானது, செப்டம்பர் 15-ஆம் தேதி, 1991 ஆம் ஆண்டு பதிவானது என்பதும் தற்போது தான் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிஸ்கவரி ஸ்பேஸ் ஷட்டுள் :
மேலும் இந்த வீடியோவை பதிவு செய்தது நாசாவின் எஸ்டிஎஸ்-48 டிஸ்கவரி ஸ்பேஸ் ஷட்டுள் (NASA STS-48 discovery space shuttle) என்பதும் குறிப்பிடத்தக்கது.
அறிவியல் விளக்கம் :
இந்த மர்ம விமானம் நுழைந்து வெளியேற உதவியது பரவெளியாகவோ (wormholes) அல்லது விண்வெளி குறுக்கீட்டாலாக (warping space) இருக்கலாம் அறிவியல் விளக்கம் கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வழி :
உள்ளே புகுந்து வெளியேற 'அவர்களுக்கு' வழி கிடைத்துவிட்டதற்க்கான ஆதாரமாய் கூட இதை வைத்துக் கொள்ளலாம் என்றும் யூஎஃப்ஓ நம்பிக்கையாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.
வீடியோ :
பூமியின் வலிமண்டலத்திற்குள் நுழைந்து வெளியேறும் மர்மமான யூ எஃப் ஓ வீடியோ..!
சிறந்த ஆதாரங்கள் :
"அரசாங்கத்திடம் சிறந்த ஆதாரங்கள் உள்ளன என்பதும், அதே சமயம் இந்த விடயத்தில் மக்கள் எப்போதும் உண்மையை நம்பியது இல்லை என்பதும் என்னை எப்போதுமே குழப்பும் இரண்டு விடயங்கள் ஆகும்" என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கருத்து கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வருகை :
மேலும் "நாம் தொடர்பு கொள்ளப்படுவது ஒன்றும் புதிதில்லை, பல காலங்ககளாக வேற்றுகிரக நாகரீகம் வருகை தந்து கொண்டே தான் இருக்கிறது" என்று நாசா விண்வெளி வீரர் மற்றும் பிரின்ஸ்டன் இயற்பியல் பேராசிரியரான டாக்டர் பிரேய்ன் ஓ'லெரி (Dr.Brian O'Leary) கருத்து கூறியுள்ளார்.
மேலும் படிக்க :
விபரீதம் : கொஞ்சம் விட்டுருந்தால் 'இது' உலகையே அழித்து இருக்கும்..!
புதிய சர்ச்சை : பூமியை காப்பாற்றியதே ஏலியன்கள் தான்..!
ஆண்ட்ராய்டில் 3டி புகைப்படம் எடுப்பது எப்படி.??
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!