விண்டோஸ் 8 இயங்குதளத்தால் தாமதமான ஏவுகணை சோதனை!

|
விண்டோஸ் 8 இயங்குதளத்தால் தாமதமான ஏவுகணை சோதனை!

தென்கொரியாவிற்கு எதிராக போர் பிரகடனத்தை ஏற்கனவே வடகொரியா அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். தென்கொரிய அரசும் பதிலடிகொடுக்க தயாரிகியுள்ள நிலையில், அமெரிக்க நாட்டமையும் சொம்புடன் தென்கொரியாவில் உள்ளதும் அனைவரும் அறிந்ததே. இதைப்பார்த்து உலக நாடுகள் அனைத்தும் அணுஆயுதப் போர் வேண்டாம் என கூறிவரும் நிலையில்தான் வடகொரியாவில் இப்படியொரு வேடிக்கை நிகழ்ந்துள்ளது.

அதாவது ஏவுகணை சோதனையொன்றை நடத்த திட்டமிட்டிருந்த நேரத்தில், விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வழியாக செயல்பட்டுக்கொண்டிருந்த கணினியானது செயல்படாமல் போகவே ஏவுகணை சோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வடகொரியாவின் மேல்மட்ட அதிகாரிகள் கூறும்பொழுது, "கடந்த ஆண்டுவரை ஏவுகணை சோதனைகளுக்காக விண்டோஸ் 95 இயங்குதளம் தான் பயன்படுத்தினோம். எந்த சிரமமும் இல்லாமல் இருந்தது. தற்பொழுது விண்டோஸ் 8 பயன்படுத்தியதே சிக்கலுக்கு காரணம்" என தெரிவித்துள்ளனர்.

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது...

இதுகுறித்து KCNA என்ற கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "விண்டோஸ் 8 இயங்குதளத்தால் ஏற்பட்ட சிக்கல் சரிசெய்யப்பட்டுள்ளது." எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மைக்ரோசாப்ட் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

டாப்பா? டூப்பா?... நீங்களே கண்டுபுடிங்க...

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X