அமெரிக்காவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த வடகொரியா: சமதானம் எடுபடவில்லை.!

கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர்சந்தித்து பேசினர்.

|

தற்சமயம் வெளிவந்த செய்தி என்னவென்றால் வடகொரியா மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதைக்கு செல்வோம் என அந்நாட்டின் (வடகொரியா) சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த வடகொரியா.!

கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். அந்த பேச்சுவார்த்தை உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு அதில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணுகுண்டு சோதனை

அணுகுண்டு சோதனை

குறிப்பாக கிம் அவர்கள் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார், அதை தொடர்ந்து பெரிய அளவில் எந்தவிதமான முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகளை சோதனையோ நடத்தவில்லை.

கிம் ஜாங் அன்

கிம் ஜாங் அன்

மேலும் சில தினங்களுக்கு முன்பு டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதினார், ஆனால் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ என்பவர் தான் வடகெரியாவுக்கு வந்து கிம் ஜாங் அன்-ஐ சந்தித்து பேசினார். விரைவில் இரண்டாவது முறையாக இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என்ற நிலையில் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது வடகொரியா

அமெரிக்கா

அமெரிக்கா

அது என்னவென்றால் அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப்போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கப்படவில்லை.

பியாங்ஜின்

பியாங்ஜின்

எனவே அமெரிகா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவிட்டால் தங்கள் நாட்டின் பியாங்ஜின் (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரிய தற்சமயம் எச்சரித்துள்ளது.

Best Mobiles in India

English summary
North Korea threatens to resume nuke development over sanctions: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X